admin
admin's Latest Posts
மானிடம் கண்ட (ஏ)மாற்றம்

காட்டிலே வேட்டையாடி கண்ணில்பட்டதைத் தின்று அறத்துடன் வாழ்ந்தவன் இன்று நாகரிகம் எனும் போர்வையில் மனிதத்தை மறந்துவிட்டானே! ஆக்கத்திற்குக் கருவிகளைத் தோற்றுவித்தது போதாதென்று அழிவிற்கும் உருவாக்கி அண்டத்தை அலறவிடுகிறானே! சொந்த பந்தங்களுடன் அன்று அனுசரித்து வாழ்ந்தவன் இன்று சுற்றி நிற்கும் உறவுகளைக் கத்தரித்து நிற்கிறானே! அடுக்குமாடி வாழ்க்கையின் விளைவால் அண்டை அயலாருடன் சகவாசம் கொள்வதை அருவெறுத்து ஒதுக்குகிறானே! முப்பொழுதும் கைத்தொலைபேசியில் மூச்சுவிடாது உரையாடுபவன் அருகிலிருப்பவர்களுடன் சிறிதும் அளவளாவ விரும்புவதில்லையே! காலத்தின் கோலத்தால் […]
கர்ம வீரர்

வீணர்களால் ஜலியன் வாலாபாக்கில் விளைந்ததந்தக் கொடுமை கேட்டு வீறுகொண்டு எழுந்திட்ட வியத்தகு வீர்ர்கள் பல்லாயிரம் நாட்டினிலே! விருதுப்பட்டிச் சிற்றூரில் வித்தாயுதித்து விரைவாய்ப் போராட்டக் களம்புகுந்து விருட்சமாய் வளர்ந்து வெள்ளையனை விரட்டியடித்த அஹிம்சாவாதி கருப்புகாந்தி!! சுதந்திர இந்தியாவைக் கட்டிக்காக்க சுயநலமின்றி உழைத்திட்ட தலைவர்பலர்! சுகமாக மக்கள் வாழத்தம்மைச் சுருக்கிய ஒருசிலருள் முதன்மையானார்! அரசியல் என்றாலே பொய்யும்புரட்டும் அடாவடியும் என்றாகிய இந்நாளில் அனைவரின் நலமொன்றே நாடிவாழ்ந்த அற்புதத் தலைவர் […]
மின்னசோட்டாவில் இலையுதிர் வர்ண ஜாலம்

இயற்கையின் கால மாற்றங்களில் இலையுதிர் காலமானது மிகவும் ரம்மியமானது. மரங்களுக்கான உணவைச் சூரிய ஒளியில் இருந்தும், காற்றில் இருந்தும் இலைகள் தயாரிக்கும் போது, இந்தச் சமையலில் ஈடுபடும் க்ளோரொஃபில் (Chlorophyll) எனும் ரசாயனம், இலைகளுக்குப் பச்சை நிறத்தை, சூரியன் அதிக நேரம் இருக்கும் வசந்தக் காலத்திலும், கோடை காலத்திலும் கொடுக்கிறது. இது போல், தாவரங்களில் இருக்கும் பிற வகை ரசாயனங்கள், மற்ற வண்ணங்களுக்குக் காரணமாக அமைகின்றன. கரோடெனாய்ட்ஸ் (Carotenoids) என்பது மஞ்சள், ஆரஞ்சு போன்ற வண்ணங்களை வாழைப்பழம், […]
அறிவுள்ள காகம் !

காகம் ஒன்று பறந்து திரிந்தது
கோடை வெயில் தீயாகச் சுட்டது
தாகம் தீர்க்க அலைந்து வாடியது
காகம் குடிநீருக்காகத் தவித்தது !
குளம் குட்டையெல்லாம் சுற்றியது
களைப்பில் மரத்தில் நின்றது
எல்லாமே வறண்டு கிடந்தது
தாகம் தீர்க்கத் தண்ணீர் எங்கே ?