\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

சுதந்திர தின வாழ்த்துக்கள்!

No Slide Found In Slider.

அன்பும் அறனும் விளைந்திட, வேண்டும் சுதந்திரம்!

ஆசைகள் நல்வழியில் அடைந்திட, வேண்டும் சுதந்திரம்!

இல்லறம் இனிதாய் நடத்திட, வேண்டும் சுதந்திரம்!

ஈகையும் கொடையும் பெருகிட, வேண்டும் சுதந்திரம்!

உற்றார் உறவினை ரசித்திட, வேண்டும் சுதந்திரம்!

ஊரார் ஒன்றாகி மகிழ்ந்திட, வேண்டும் சுதந்திரம்!

என்றும் நிறைவாய் வாழ்ந்திட, வேண்டும் சுதந்திரம்!

ஏழைகளும் இயைந்து முயன்றிட, வேண்டும் சுதந்திரம்!

ஐயம் அகன்று தெளிந்திட, வேண்டும் சுதந்திரம்!

ஒன்றாய் உலகோர் உழன்றிட, வேண்டும் சுதந்திரம்!

ஓங்குபுகழ் நாடாய் விளங்கிட, வேண்டும் சுதந்திரம்!

 

அளப்பரிய தலைவர்களின் அரும் தியாகத்தால்

அந்நிய ஆதிக்கம் ஆணிவேரோடு அகற்றப்பட்டு

அற்புத தேசமாய் அமெரிக்கா அடியெடுத்த

அந்தச் சுதந்திரநாளை  அன்போடு போற்றிடுவோம்!!!

–        வெ. மதுசூதனன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad