திரைப்படம்
டைகர் கா ஹுக்கும் ..

72 வருடங்கள், எட்டு மாதங்கள், 10 நாட்கள் – இந்தப் படம் வெளியாகும் தினம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் வயது. முக்கால்வாசி மனிதர்களுக்கு, அந்த வயதில் கழிப்பறை செல்வதற்கே துணை வேண்டும். இவரால் மட்டும், இன்னும் அந்த லட்சக்கணக்கான ரசிகர்களை வசீகரிக்க முடிகிறது என்பதை நினைத்தால் ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. 1978இல் வெளிவந்த ‘பைரவி’ கதாநாயகனாக அவரின் முதல் படம். அதைத் தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்துப் பெற்று, கிட்டத்தட்ட நாற்பது வருடங்கள் என்று வைத்துக் கொள்ளலாம். […]
காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 10 சாங்ஸ் (நவம்பர் 2022)

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் வெளிவந்த பாடல்களின் தொகுப்பை, கடந்த மே மாத பகுதியில் பார்த்தோம். அதன் பின், வந்த படங்களில் உள்ள ஹிட் பாடல்களின் தொகுப்பை இப்பகுதியில் காணப் போகிறோம். படங்களின் எண்ணிக்கை, கடந்த சில மாதங்களில், உயர்ந்துள்ளதைக் காண முடிகிறது. அதனால், இப்பகுதியில் ஐந்து பாடல்களுக்குப் பதிலாகப் பத்துப் பாடல்களைப் பார்க்க போகிறோம். டான் – ப்ரைவேட் பார்ட்டி இந்த ஆண்டின் தொடக்கம் முதல் அனிருத்தின் பாடல்கள் மட்டுமல்ல, அவர் இசையமைத்த படங்களும் ஹிட் […]
சுழல் – The Vortex சீசன் 1

’விக்ரம் வேதா’ படத்தை இயக்கிய இயக்குனர் தம்பதிகளான புஷ்கர்-காயத்ரியை ரொம்ப நாளைக்குக் காணவில்லை. இந்தியில் அப்படத்தை இயக்குவதாகச் செய்திகள் வந்தன. இப்போது ‘சுழல்’ இணையத்தொடர் (Web series) மூலம் தங்களது அடுத்தப் படைப்பைத் தந்துள்ளனர். அமேசான் ப்ரைமில் வெளிவந்துள்ள இந்த இணையத்தொடரை, பிரம்மாவும், அனுசரணும் இயக்க, புஷ்கர்-காயத்ரி எழுதி, உருவாக்கியுள்ளனர். அமேசான் ப்ரைம் வெளியீடு என்பதால் உலக மொழிகள் பலவற்றில் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர். கதை சாம்பலூர் என்ற, உதகை போலுள்ள கற்பனை ஊரில் நடைபெறுகிறது. ஒருபக்கம், […]
விக்ரனுபவம்

முதல் விக்ரம் 1986 இல் வெளியானது. அந்தக் காலத்தில் முன்னணி நாயகர்களின் திரைப்படங்கள் பலமுறை மீண்டும் மீண்டும் வெவ்வேறு திரையரங்குகளில் திரையிடப்படும். அப்படி விக்ரம் (1986) மீண்டும் தூத்துக்குடி ‘மினி சார்லஸ் தியேட்டரில்’ வெளியான சமயம், அண்ணன்மார்களுடன் ஓர் இரவுக்காட்சிக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அச்சமயம் அப்படம் எனக்குப் பிடித்திருந்தது. ராக்கெட், கடத்தல், ஜேம்ஸ் பாண்ட் டைப் போலீஸ், கேட்ஜட்ஸ், சலோமியா, டிம்பிள் கபாடியா எனப் பிரமிக்க நிறைய விஷயங்கள் படத்தில் இருந்தன. இடைவேளையில் ரசிகர்களின் ‘ஒன்ஸ்மோர்’ […]
காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (மே 2022)

கடந்த பகுதியில் (நவம்பர் இதழ்) சென்ற வருடம் முழுமைக்கும் வந்திருந்த படங்களில் இருந்த நல்ல பாடல்களைப் பார்த்தோம். வருடத்தின் கடைசி இரு மாதங்களில் வந்திருந்த படங்கள் மட்டும், அதில் இடம் பெறவில்லை. இவ்வருடம் தொடங்கி நான்கு மாதங்கள் ஆகிவிட்டதால், கடந்த நான்கு மாதங்களில் வெளியாகிய படங்களில் இருக்கும் குறிப்பிடத்தகுந்த பாடல்களை, இந்தப் பகுதியில் பார்ப்போம். முதல் நீ முடிவும் நீ நடிகர், இசையமைப்பாளர் தர்புகா சிவா இயக்குனர் அவதாரம் எடுத்த படம். 96 படம் போல் […]
விலங்கு

தமிழ் வெப் சீரிஸ் ரசிகர்களுக்கு நல்ல தீனி போடுவது டப்பிங் செய்யப்பட்டுத் தமிழில் வெளியாகும் ஹிந்தி வெப் சீரிஸ்கள் தான். அவற்றில் கண்டெண்ட், மேக்கிங் என்று ஒரு நேர்த்தி இருக்கிறது. தமிழில் எடுக்கப்படும் வெப் சீரிஸ் என்பது எண்ணிக்கையில் குறைவுதான். அதிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற சீரிஸ் என்பது மிகவும் குறைவு. ஆட்டோ சங்கர், நவம்பர் ஸ்டோரி, ட்ரிப்பிள்ஸ், புத்தம் புதுக் காலை, பாவக் கதைகள், நவரசா என முயற்சிகள் தொடர்ந்து அனைத்து பெரிய ஓடிடி தளங்களிலும் […]
ஹிருதயம்

இன்றைய இணைய உலகில் கொண்டாட்டங்களுக்குப் பெரிய காரணங்கள் தேவையில்லை. மனிதர்களுக்கு மட்டும் பிறந்தநாள், திருமண நாள் கொண்டாடுவதில்லை. படங்களுக்கும் ஆண்டுவிழா கொண்டாடுகிறார்கள். அப்படிச் சமீபத்தில் ”பூவே உனக்காக” படம் வெளியாகி 26 ஆண்டுகள் எனச் சில பதிவுகளைக் காண முடிந்தது. அப்படத்தைத் திரையரங்கில் பார்த்த நினைவுகள் வந்தன. அவ்வயதில் படத்தின் நகைச்சுவைக் காட்சிகளை ரசித்தது நினைவுக்கு வந்தது. படத்தின் இறுதிகாட்சியில் விஜய் பேசும் வசனங்களுக்குத் திரையரங்கம் ஆர்பரித்தது நினைவுக்கு வந்தது. ஊருக்குள்ளே இவ்வளவு காதல் தோல்வி கேசுகள் […]
திரைப்பட பார்வை – மகான்

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான விக்ரம் நடித்த ‘மகான்’ திரைப்படம் அமேசான் ப்ரைமில் பிப்ரவரி 10ஆம் தேதியன்று வெளியானது. கடந்த சில வருடங்களாகவே விக்ரமின் படங்கள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெறாமலிருந்த நிலையில், மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கும் இத்திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. விக்ரம் நடிக்க வந்து, அவருடைய முதல் படம் வெளியாகி 32 வருடங்கள் ஆகின்றன. ஸ்ரீதர், பி.சி.ஸ்ரீராம், விக்ரமன், பார்த்திபன் என்று பிரபல இயக்குனர்களின் படங்களில் நடித்தாலும், முதல் பத்து வருடங்கள் […]
புஷ்பா – தி ரைஸ்

சேல சேல சேல கட்டுனா… குறு குறு குறுன்னு பாப்பாங்க !!! குட்ட குட்ட கௌன போட்டா… குறுக்கா மறுக்கா பாப்பாங்க !!! சேல ப்ளௌஸோ, சின்ன கௌனோ… ட்ரெஸ்ல ஒண்ணும் இல்லங்க !!! ஆச வந்தா, சுத்திச் சுத்தி… அலையா அலையும் ஆம்பள புத்தி !!! ம்ம் சொல்றியா மாமா… ம்ஹூம் சொல்றியா மாமா … ம்ம் சொல்றியா மாமா… ம்ஹூம் சொல்றியா மாமா ?? – தமிழ் . […]