admin
admin's Latest Posts
ஓசோன் துளை
புறஊதாக் கதிரால் ஆகுமாம்
ஓசோன் படலம்
அக்கதிரால் சிதைவும் அடையுமாம்
ஓசோன் படலம்
மின்சாதனப் பொருளால் வருமாம்
குலோரோ சேர்மம்
காலிஃப்ளவர் பனீர் கட்லெட்
டிசம்பர் – ஜனவரி மாதக் குளிருக்கு , சாயங்கால வேளையில் மசாலா டீயும், வடையும் கிடைத்தால், குளிர்காலத்தை இன்னும் இரண்டு மாதங்களுக்கு நீடித்தாலும் சம்மதிப்பார்கள் தமிழர்கள். அப்படி ஒரு வெற்றிக்கூட்டணி இது. ஆனால், வடையில் கார்ப் (Carb), ட்ரான்ஸ் ஃபேட் (Transfat) போன்ற கெட்ட சங்கதிகள் உள்ளன. நீண்ட கால உட்கொள்ளலில், உடல் நலத்திற்குச் கேடு ஏற்படுத்தக்கூடியது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு, சுவைக்கும் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்துச் சமைக்கப்படும் ஒரு சிற்றுண்டி, இந்த கட்லட். எந்த மாவும் […]
தலையங்கம்
வாசகர்களுக்கு வணக்கம் ! அனைவருக்கும் கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துக்களையும், ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்களையும் உரித்தாக்குகிறோம். 2016 ஆம் ஆண்டு விரைவில் முடிவுக்கு வரவிருக்கிறது. இந்த ஆண்டில் பல விஷயங்கள் நடந்து முடிந்துள்ளன. அவற்றுள் சில நன்மை பயக்கும் விஷயங்களாகவும், சில தீமை பயக்கும் விஷயங்களாகவும் நடந்து முடிந்துள்ளன. இந்த ஆண்டின் பெரிய நிகழ்வாக, அமெரிக்க அதிபர் தேர்தலைச் சொல்லலாம். தேர்தல் முடிந்து, வெற்றி பெற்றவரை அறிவித்து அரசாங்கத்தின் அங்கங்களெல்லாம் முடிவு செய்யப்பட்டு வருகின்றன. புதிய அரசாங்கம் […]
செல்வி . ஜெயலலிதா ஜெயராம்
‘புரட்சித் தலைவி’, ‘அம்மா’ என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்டு வந்த தமிழக முதல்வர், செல்வி ஜெயலலிதா ஜெயராம், உடல் நலக் குறைவா ல் இம்மாதம் (டிசம்பர்) ஐந்தாம் தேதி காலமானார். அன்னாரது மறைவுக்கு, பனிப்பூக்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. இரண்டு மாதங்களுக்கு மேலாக, உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருந்தாலும், அவரது போராடும் வைராக்கிய குணத்தினால் காலனை வென்று, மீண்டு வருவார் என்று எதிர்பார்த்திருந்த அவரது கட்சியினருக்கும், பொது மக்களுக்கும் அவரது மரணம் பேரதிர்ச்சியை அளித்துள்ளது. […]
பிளாஸ்டிக் அரிசி
நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னரே பேசப்பட்டிருந்தாலும் மீண்டும் சில நாட்களாகச் செய்தித் தளங்களிலும், சமூக ஊடகங்களிலும் தலையெடுத்திருக்கும் ஒரு விஷயம் கலப்பட அரிசி. மேலோட்டமாகப் பார்த்தால் இது ஒன்றும் புதிதல்ல என்று தோன்றும்; அரிசியில் கல்லும், மண்ணும், மற்ற தானியக் கழிவுகளும் இன்னும் பல அருவருக்கத்தக்க பொருட்களும் கலப்பது பல வருடங்களாக நடைபெறும் ஒரு விஷயம் என்றும் தோன்றும். தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் கலப்படம் செய்யும் பொருள் மாறியுள்ளது. பிளாஸ்டிக் அரிசி என்பது பிளாஸ்டிக்கால் செய்யப்படும் அரிசியில்லை. […]
ஏ புள்ள……!!!
கஞ்சிக் கலயம் கொண்டு கடைக்கண்ணால் எனைக் கட்டி இழுத்துக் கொண்டு களத்து மேட்டில் நடந்து வயக்காட்டுப் பக்கம் போற புள்ள ….! கட்டழகு மேனியால் இந்த மாமன் மனதை களவாடியவளே வழியில் கள்ளர் பயமிருந்தால் சொல்லு புள்ள கள்ளழகராய் ; கட்டிளங் காளையாக வழித் துணையாக நானும் வாறேன் புள்ள …! கண்ணாலே கதை பேசி கயவரைக் காலால் புறந்தள்ளிவிட்டு கண் நெறஞ்ச மச்சானைக் கண்ணுக்குள்ளே பூட்டி வைச்சு….. கருமேகக் கூட்டம் வருமுன்னே விரசா வீடு வந்து […]
ஜெயலலிதா ஒரு புதிர்
இடமிருந்து வலம் ஜெயலலிதா பிறந்த சிற்றூர் (5) ஜெயலலிதா தாயாரின் இயற்பெயர் (5) முதன் முதலில் ஜெயலலிதா போட்டியிட்ட சின்னம் (3) எம்.ஜி.ஆருடன் சேர்ந்து அவர் நடித்த முதல் படம். (10) ‘உனக்கும் எனக்கும் தான் பொருத்தம்’ என்ற பாடல் இடம் பெற்ற, எம்.ஜி.ஆருடன் சேர்ந்து நடித்த படம். (4) சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டுத் தோற்ற ஒரு தொகுதி. (4) ஜெயலலிதாவால், கல்கியில் தொடராக எழுதப்பட்டு பின்னர் நாவலாக வெளிவந்த நூல். (8) வலமிருந்து இடம் […]







