admin
admin's Latest Posts
கதவடைப்பும் கழுமரங்களும்
1996. “வீணாப்போனவங்க. இப்பிடி பண்ணிட்டாங்களே…”அங்கலாய்த்தபடி தொழிற்சங்க அலுவலகத்துக்குள் பிரவேசித்த விஜயன் காலியா யிருந்த பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து கொண்டான். தொழிற்சங்கத் தலைவர் குப்புசாமியின் முகத்திலும் கலவரச்சாயல் படிந்திருந்தது.கவலையால் ஏற்கனவே கருத்திருந்த முகம் மேலும் கறுப்பாகியிருந்தது. “எல்லாம் மொதலாளிங்க பாத்து செய்ய வேண்டியது.இப்ப பாரு எல்லாத்துக்கும் பிரச்சினை” என்றார். “ஆமாங்கண்ணே.வேலூர் சிட்டிசன் வெல்பேர் அசோசியேஷன் தான் கேஸ்ஸ ஃபைல் பண்ணியிருக்காங்க.அவங்க பார்வைல இது சரி தான்.ஆனா நம்ம வயித்து பொழப்பப்பத்தி நெனச்சி பாத்தாங்களா இல்லையான்னு தான் தெரியில”. ”எல்லாஞ் […]
இலங்கை பற்றீஸ் பணியாரம்
பற்றீஸ் பணியாரமானது இலங்கை, மற்றும் மலையாளக் கிறிஸ்தவ குடும்பக் கலாச்சாரங்களிற்குப் போர்த்துக்கேயரினால் அறிமுகமானதாக கருதப்படுகிறது. இது தென் அமெரிக்காவில் வாழைக்காய் சேர்த்து எப்பனாடாஸ் என்றும் மாறியிருக்கலாம் தேவையானவை வெளிப்பாகம் செய்வதற்கு 1 lbs இறாத்தல் கோதுமை மா 8 மேசைக்கரண்டி சமையல் எண்ணெய் 2 தேக்கரண்டி உப்பு தேவையான அளவு மிதமான வெந்நீர் உள்ளடக்க கறி 1 Ibs இறாத்தல் உருளைக்கிழங்கு – அவித்து மசித்துக் கொள்ளவும் ½ lbs இறாத்தல் லீக்ஸ் Leeks 10-12 சின்ன […]
என் பார்வையில் இசை மேதை பாலமுரளி
திரு BMK என்ற இசை இமயத்தைப் பற்றிப் பேசவோ எழுதவோ எனக்கு ஞானமும் தகுதியும் கிடையாது. ஆனாலும் அவர் மேல் கொண்ட பக்தியும் ரசிக உத்வேகமும் என்னை இவ்வரிகளை எழுத தூண்டுகின்றன. நான் BMK அவர்களின் பரம ரசிகர்களைக் கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவள். லால்குடி பரம்பரை பாலக்காடு மணி பரம்பரை என்பது போல BMK யின் ரசிக பரம்பரை, பெருமையும் தனித் தன்மையும் வாய்ந்தது ஆகும். தேனில் மூழ்கி எழுந்த குரலின் கம்பீரம், கிருதிகளை வழங்கும் பாங்கு, […]
ரைசிங் ஸ்டார் அவுட்ரீச்
டிசம்பர் முதல் வாரயிறுதியில் (12/3 & 12/4), திருமதி. பெக்கி டக்லஸ் (Becky Douglas) அவர்கள் மினசோட்டாவில் வசிக்கும் தமிழர்களுக்கு “ரைசிங் ஸ்டார் அவுட்ரீச்” (Rising Star Outreach) அமைப்பைப் பற்றிய அறிமுகத்தைக் கொடுத்தார். சனிக்கிழமை அன்று ஹாப்கின்ஸ் மினசோட்டாத் தமிழ்ச் சங்கப் பள்ளியிலும், ஞாயிற்றுக்கிழமை அன்று மினசோட்டா ஹிந்து மந்திர் கோவிலிலும் இந்தக் கூட்டங்கள் நடைபெற்றன. இந்த அறிமுகத்திற்குப் பிறகு தமிழகத்திற்கும் இந்த அமைப்பிற்கும் இருக்கும் தொடர்பு, வந்திருந்தவர்களுக்கு ரைசிங் ஸ்டார் அவுட்ரீச் மீது ஒருவித […]
உருவகங்களின் தொடர்புகள் புதிர்
கீழே உள்ள ஒவ்வோரு நிரையிலும் (every row) உள்ள 5 பெட்டிகளில் 4 பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று ஒத்திருக்கும். வேற்று இருக்கும் பெட்டிகளை அடையாளம் காணவும்.
மினசோட்டாவில் “கறி விருந்து”
உண்டிக் கழகு விருந்தோ டுண்டல்! (நறுந்தொகை) இனி வரும் தை(சனவரி) திங்கள்கள் தமிழ் மரபுத் திங்களாகக் கொண்டாடப்படும் என்ற கனேடிய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து “வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை” அனைத்துத் தமிழ்ச் சங்கங்களையும் தமிழ் மரபுத் திங்களைக் கொண்டாடுமாறு அறிவுறுத்தியுள்ளது. நமது மரபுகளும் பல தலைமுறைகளாக ஒன்றிலிருந்து மறு தலைமுறைக்குக் கடத்தப்பட்டுத் தழைத்து, இன்று மரபு எச்சங்களாக நம்மிடம் புழக்கத்தில் இருப்பவற்றில் முதன்மையானதான விருந்தையும் விருந்தோம்பலையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சொல்லவேண்டியது ஒவ்வொரு தமிழரின் […]
அட்சய பாத்திரம்
எண்ணங்கள் நினைவுகள்
கற்பனைகள் கவலைகள்
காதல்கள் மோதல்கள்
பழக்கங்கள் வழக்கங்கள்
சிந்தனைகள் சிரிப்புகள்
உறவுகள் பிரிவுகள்
காத்திருப்பு
காத்திருப்பு சுகமானது காதலில்
காதலியின் வரவை எதிர்பார்த்துக் காதலனும்
காதலனுக்காக அவளும் காத்திருப்பாள்
கருவாச்சி மனதினுள் பொங்கிடுவாள்….!
கட்டிய கணவனைக் கனிவோடு வரவேற்றிட
கட்டைவிரலால் கோலமிட்டே வாசலிலே நின்றிடுவாள்
அறிந்தும் அறியாமலே….!!!
உணர்வுகள் மறந்த உடலொன்று
உறக்கம் கொள்ளும் பகலையும்
உன் நினைவைச் சுமந்த ஞாபகங்கள்
இரவிலும் விழித்திருக்கும் என்பதை
உணர்ந்தாயோ?
கட்டழகு மேனியில் கரைந்த பொழுதையும்
கள்ளச்சிரிப்பில் உறைந்த கனத்தையும்







