\n"; } ?>
Top Ad
banner ad

admin

rss feed

admin's Latest Posts

அபூர்வமான தேங்காய்

அபூர்வமான தேங்காய்

உங்களுக்குத் தேங்காயானது எவ்வளவு மகிமை வாய்ந்தது என்று தெரியுமா? தமிழர் பாரம்பரியத்தில் தேங்காயானது பல்விதமாகப் பாவிக்கப்படும் பயனுள்ள ஒரு காய். தேங்காயானது வட அமெரிக்காவில் கடைகளில் சிறிய, உருண்டை மண்ணிறம், இளம் பழுப்பு மஞ்சள் போன்ற நிறங்களில் காணப்படும். மேலும் தின்பண்டங்காக, தேங்காய் பர்ஃபி, மக்கரூன் (macaroons), பிளாஸ்திக் பைகளில் உதிரித் தேங்காய்த் துருவல்கள் (shredded coconut), மற்றும் தேங்காய்ப் பால் தகர டப்பா, உலர்த்திய தேங்காய்ப் பால் மா போன்றவைகளாகவும் கடைகளில், சந்தைகளில் பெற்றுக் கொள்ளலாம். […]

Continue Reading »

மினசோட்டா மலையாளி அமைப்பு கிறிஸ்துமஸ் விழா 2016

மினசோட்டா மலையாளி  அமைப்பு கிறிஸ்துமஸ் விழா 2016

மினசோட்டா மலையாளி  அமைப்பு (Minnesota Malayalee Association) சார்பில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழா ஹாப்கின்ஸ் சமுதாயக்  கூடத்தில் (Hopkins Community Center) நடைபெற்றது. இந்த விழாவைச் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர். சிறப்பு அம்சமாக மதிய உணவு விருந்தைச் சொல்லலாம். தன்னார்வலர்கள் சேர்ந்து அங்குள்ள சமையல் கூடத்தில் சமைத்து அனைவருக்கும் விருந்து அளித்தனர். மதிய உணவுக்குப் பிறகு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. மொத்தம் இருபத்து மூன்று கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. இவற்றில் […]

Continue Reading »

பனிக் காலம்

பனிக் காலம்

பனி காலம் பற்றி ஆராய்வோம் வாருங்கள்! உடம்பு நடுங்குகிறது. வெளியில் குளிர், வெய்யிலின் வெளிச்சம் குறைந்தவாறே போகிறது, இருட்டு அதிகரித்தவாறே போகிறது. சூரியனைப் பார்த்தால் சுடுவதும் இல்லை. அதுவும் ஒளிமயமான பகலிலும் ஒப்புடைய வெப்பமும் கிடையாது. அது சரி பூக்கள், பூச்சிகள், புற்திடர்கள் எங்கே போயின? பொதுவாக வட அமெரிக்காவில் எமது மாநிலம் ஆகிய மினசோட்டாவிலும், எமது மாகாணம் ஆகிய ஒன்டாரியோவிலும் மற்றைய வடக்குப் பிரதேசங்களிலும் பனிமழை கொட்டோ கொட்டும். ஆனால் ஏன் எமக்குப் பனி வருகிறது? […]

Continue Reading »

2016 – டாப் டென் பாடல்கள்

2016 – டாப் டென் பாடல்கள்

பாடல்கள் பல தரப்புச் சமூகங்களிடம் எப்படி ஒருமித்த ரசனையை ஏற்படுத்துகிறதோ, அதுபோல் அவை ஒவ்வொருவருக்குமான தனி ரகசிய மொழியும் அழகும் கொண்டிருப்பவை. ஒருவர் கேட்டு ரசித்திராத ஒரு பாடல், இன்னொருவருக்கு மிகவும் நெருக்கமான உணர்வைக் கொடுக்கும். இங்கு உள்ளவை, எனது தனிப்பட்ட அனுபவத்தைக் கொண்டு, ரசனையின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட பத்துப் பாடல்கள். பிடித்த பாடல், நல்ல பாடல் என்றால் எழுதிக்கொண்டே போகலாம். அதனால், ஒரு சில விதிமுறைகளைக் கடைப்பிடித்திருக்கிறேன். எண்ணிக்கை, பத்து மட்டுமே. ஒரு படத்திற்கு ஒரு […]

Continue Reading »

2016 – ஒரு பார்வை

Filed in இலக்கியம், கட்டுரை by on December 25, 2016 0 Comments
2016 – ஒரு பார்வை

எல்லா வருடங்களைப் போலவே, இந்த ஆண்டிலும் உலகம் பல ஏற்றத்தாழ்வுகளைக் கண்டிருக்கிறது. பல நல்லது கெட்டதுகளைச் சந்தித்திருக்கிறது. தூக்கி வாரிப்போடும் சம்பவங்களைச் சகஜமாகக் கடந்திருக்கிறோம். சிலது வெறும் சம்பவங்கள், சிலது மைல்கல்கள், சிலது திருப்புமுனைகள். ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதேனும் வகையில் முத்திரை பதித்திருக்கும் 2016ஆம் ஆண்டின் டைரிக்குறிப்புகளில் எழுதப்பட்ட முக்கிய உலக நிகழ்வுகளைத் திரும்பிப் பார்க்கலாமா? கனடா தமிழர் பாரம்பரிய மாதம் அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதியன்று, கனடா பாராளுமன்றத்தில் ஜனவரி மாதத்தைத் தமிழர் பாரம்பரிய மாதமாக […]

Continue Reading »

அனுபவ வாழ்க்கை

Filed in இலக்கியம், கதை by on December 25, 2016 8 Comments
அனுபவ வாழ்க்கை

வண்டியை  நிறுத்திவிட்டு, பக்கத்தில் இருந்த கைப்பையை எடுத்தாள் த்ரிவேணி. கைப்பை அருகில் இருந்த கோப்பையும்  எடுத்துக் கொண்டாள் . அன்றைய நாளை மனதில் ஒட்டிய படி இறங்கினாள் . இன்றைய பொழுது ஒரு புதிய பெண் வந்து வகுப்பில் இணைவதாக, ஒரு வாரம் முன்பே பள்ளி முதல்வர் வேணியிடம் அறிவித்திருந்தார். வண்டியைப் பூட்டி விட்டு வகுப்பை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.  கருமையான நிறத்தில் ஒரு “ஃபார்மல்” பாண்ட் , வெளிர் நிறத்தில் ஒரு முழுக்கைச் சட்டை. தோள் […]

Continue Reading »

ஸ்திதப் பிரக்ஞன்

Filed in இலக்கியம், கட்டுரை by on December 25, 2016 0 Comments
ஸ்திதப் பிரக்ஞன்

இந்த சமஸ்கிருத வார்த்தையை முதன்முதலாகக் கேள்விப்பட்டது, சமீபத்தில் மறைந்த திரு. சோ ராமசாமி அவர்கள் முன்னாளைய பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாய் குறித்து 1990 களில் எழுதிய கட்டுரையில்தான். இந்த வார்த்தைக்கு என்ன பொருள் என்று புரிந்திராத காலமது. சோ அவர்கள் மொரார்ஜி தேசாய் குறித்து எழுதுகையில், இந்த வார்த்தையில் பொதிந்துள்ள பல தத்துவார்த்தப் பொருட்களை விளக்கியிருப்பார். அவற்றில் ஒன்று, சாதாரண மனிதராகவே வாழ்ந்து, உலகில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் சாட்சி பாவத்தில் பார்த்திருந்து, நடுநிலைமையில் மட்டுமே […]

Continue Reading »

கிறிஸ்மஸ் கிஃப்ட்

Filed in இலக்கியம், கதை by on December 25, 2016 1 Comment
கிறிஸ்மஸ் கிஃப்ட்

வழக்கம்போல காலை ஐந்தரை மணிக்கு அலாரம் தலையில் சம்மட்டி போல் அடிக்க, போர்வையை விலக்கி விட்டு எழுந்தான் கணேஷ். திரை நீக்கித் திறந்திருந்த ஜன்னலின் வெளியே பார்க்க, இன்னும் கும்மிருட்டு நிரம்பியிருந்தது. ”யப்பா, இன்னிக்கு ஒரு நாள் ஆஃபிஸ் போனாப் போதும், கிறிஸ்மஸ் நியூ இயரோட சொந்த லீவையும் சேத்து பத்து நாள் எங்கயும் போக வேண்டாம்”.. சிறு குழந்தை போல விடுமுறையை நினைத்துக் கொண்டே குளியலறை நோக்கிச் சென்றான். பல் தேய்க்கலாம் என்று குழாயைத் திறந்தால் […]

Continue Reading »

Kids Drawing – Harini

Kids Drawing – Harini

Continue Reading »

Kids Drawing – Samhitha

Kids Drawing – Samhitha

Continue Reading »

ad banner
Bottom Sml Ad