admin
admin's Latest Posts
குளிர்காலமா? குளிக்கலாமா? (துருவக்கரடித் தோய்தல் Polar Bear Plunge 2018)
குளிர் காலத்தில் சுடுதண்ணீரில் குளிப்பதற்கே ஒரு விதமான அலுப்பு! அதுவும் மினசோட்டாக் குளிரில் மக்கள் உறைபனி ஏரியில் பனிக்கட்டியைத் துளைபோட்டு வெட்டியெடுத்து வெறும் நீச்சலுடையுடன் நீருக்குள் பாய்ந்து கடும் குளிரில் நீந்துகிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? மினசோட்டா மாநிலத்தில் வாழும் ஐரோப்பியச் சந்ததியினரில் சிலருக்கு இது பனிக்காலச் சாகசப் பொழுது போக்குப் போட்டி, கூத்துக் கும்மாளம் எனலாம். மேலும் விபரங்களுக்கு பனிப்பூக்களில் வெளியான இந்தப் படைப்பைப் பார்க்கவும்: https://www.panippookkal.com/ithazh/archives/5522 2018ஆம் ஆண்டு நடந்த இந்த நிகழ்வின் புகைப்படங்கள் […]
ப்ளாக் பேந்தர் (Black Panther)
ஹாலிவுட்டில் சூப்பர் ஹீரோ படங்களுக்கு எப்போதும் பஞ்சமிருக்காது. சூப்பர் ஹீரோ படங்களில் ரசிகர்கள் சலிப்புறாமல் இருக்க இவற்றை வெவ்வேறு வகையிலும், புதுப் புதுப் பரிமாணத்திலும் காட்டப் பிரயத்தனப்படுகிறார்கள். சூப்பர் ஹீரோ எல்லையில்லா சக்தி கொண்டவன் என்பதில் இருந்து இறங்கி, அவனும் அல்லது அவளும் நம்மைப் போல ஆசாபாசம் கொண்டவர்கள் தான் என்றும், அவ்வப்போது அடியும் வாங்குவார்கள் என்றும் கடந்த சில வருடங்களாக இவர்களின் கதாபாத்திரங்கள் இந்திய செண்டிமெண்ட் படங்களுக்குக் குறைவில்லாமல் படைக்கப்படுகின்றன. ஏன் சூப்பர் ஹீரோ […]
சின்மய மிஷனீன் வண்ண கொண்டாட்டம் 2018
ட்வின் சிட்டிஸில் உள்ள சின்மய மிஷன் சார்பில் வண்ண (ஹோலி) கொண்டாட்டம் 2018 வூட்புரி நகரில் மார்ச் 3ம் தேதி கொண்டப்பட்டது. ட்வின் சிட்டிஸில் உள்ள இந்திய குடும்பம் மற்றும் உள்ளூர் பக்தர்கள் கலந்து கொண்டார்கள். அரங்கில் சிறிய கடைகள் அமைத்து உணவு, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அமைப்பை ஏற்பாடு செய்து இருந்தனர். குழந்தைகளுடைய பத்திப் பாடல்களுடன் ஆரம்பித்து பலவிதமான கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. தாண்டியா நடன நிகழ்ச்சியுடன் முடிவுற்றது. அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படம் உங்களுக்காக: […]
காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (மார்ச் 2018)
2018 தொடங்கியதில் இருந்து வெளி வந்த படங்களில் உள்ள சிறந்த பாடல்கள் என்று கணக்கிட்டால் குறைவு தான். முன்னணி இசையமைப்பாளர்கள் படங்கள் ஏதும் சொல்லிக் கொள்ளும்படி வரவில்லை. தவிர, கடந்த இரு வாரங்களாகப் படங்கள் எதுவுமே ஸ்ட்ரைக்கால் வெளிவரவில்லை. பார்ப்போம், போகப் போக எப்படிப் போகிறது என்று. தானா சேர்ந்த கூட்டம் – சொடக்கு மேல சொடக்கு அனிருத் இசையில் இந்த வருடம் வந்த முதல் படமான இதில் இருந்த பாடல்கள் நன்றாக ஹிட்டடித்தது. முக்கியமாக, இந்த […]
ஸ்ரீதேவி – சிவகாசி மத்தாப்பூ
சினிமாவிலும் சரி, தினசரி பேச்சு வழக்கிலும் சரி அழகுக்கு உதாரணமாக அனைவரும் சொல்வது, ஸ்ரீதேவியைத்தான். இது ஏதோ அவர் கதாநாயகியாக நடித்துவரும் காலத்தில் சொல்லப்பட்டது அல்ல. இப்போது வரை அதுதான் நிலை. அப்படி அழகின் இலக்கணமாய்த் திகழ்ந்தவர். 1963 இல் சிவகாசியில் பிறந்த ஸ்ரீதேவி, கடந்த வாரம் துபாய்க்கு ஒரு திருமணத்திற்குச் சென்ற இடத்தில் தன்னுடைய 54 ஆம் வயதில் பிப்ரவரி 24ஆம் தேதியன்று மரணமடைந்த செய்தி, அவருடைய ரசிகர்கள் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. ஸ்ரீதேவி […]
ஜிடிபிஆருக்கு தயாரா?
தகவல் தொழில்நுட்பம் பல்வேறு காலக்கட்டங்களைத் தாண்டி வந்துள்ளது. எந்தளவுக்குப் பயன்களைத் தருகிறதோ, அதே சமயம் இன்னொரு பக்கம் பிரச்சினைகளையும் உருவாக்கி வருகிறது. இன்றைய காலத்தில் வேண்டியோ வேண்டாமலோ நம்மைக் குறித்த தகவல்களை இணையத்தில் பல்வேறு இடங்களில் பதிய வேண்டியுள்ளது. நாம் அறிந்தோ அறியாமலோ இந்தத் தகவல்கள் பல்வேறு இடங்களில் சேகரிக்கப்படுகின்றன. இத்தகவல்கள் அனைத்தும் ஒருவருடைய அந்தரங்கம் சார்ந்தது மட்டும் அல்ல. அது ஒரு நிறுவனத்திற்குப் பொருள் ஈட்டும் பயனைத் தரும் நிலையில் இருப்பதால், அது அவருடைய தகவல் […]
மன்மதனே …!!
தாவணிக் கனவுகளில் மனதில் நுழைந்தவனே தலையிலே பூச்சூட்டி எனையாட் கொண்டவனே தனிமையில் தளர்ந்த தருணத்தில் உயிர்த்தவனே தந்திரத்தால் மனதில் தஞ்சம் அடைந்தவனே..! மேகக் கூந்தலில் விரலால் கோதியவனே மேனியில் வேதியியல் மாற்றம் செய்தவனே வேதனையின் வேஷம் தனைக் களைத்து வேந்தனாய் மாறி எனை ஆள்பவனே …! வயக்காட்டில் வம்பு செய்த மன்னவனே வரப்பில் அத்துமீறி வரம்பு மீறியவனே வயலில் செங்கமலமாய்ப் பூத்தவளை வஞ்சனையால் மயக்கி மஞ்சத்தில் சாய்த்தவனே…! காதலில் எனைக் […]







