admin
admin's Latest Posts
இலங்கையில் தைப் பொங்கல்

தைப் பொங்கல் என்பது தமிழர்களின் பெருவிழா என்றே பொதுவாக அர்த்தப்படுத்தப்பட்டாலும் சிறப்பாக இவ்விழா விவசாயத்தோடும் விவசாயிகளோடும் தொடர்புள்ள ஒரு பண்டிகையாகவே ஈழத்து தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. விவசாயத்தை மையப்படுத்திய பண்டிகையாக தைப் பொங்கல் அடையாளப்படுத்தப் பட்டாலும் சர்வதேச ரீதியாகவோ அல்லது இலங்கை, இந்தியா போன்ற ஆசிய நாடுகளிலோ தைப்பொங்கல் என்பது விவசாயம் சார்ந்த ஒரு பொது விழாவாகக் கொண்டாடப்படுவதில்லை. சங்க இலக்கிய காலத்தில் இருந்தே தைப்பொங்கல் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்பட்டு வருகின்றது. மழைக்கு அதிபதியாகிய இந்திரனைக் குறிக்கும் […]
எதிர்பாராதது…!? (பாகம் 8)

( * பாகம் 7 * ) டச் அப் பாயை அழைத்தான். கண்ணாடியைப் பிடுங்கி முகத்தைத் துடைக்கப்போனான். அப்படித் திடீரென்று துடைப்பதற்கு என்ன வந்தது? அப்படியானால் அன்று படப்பிடிப்பு அவ்வளவுதானா? தன்னை நம்பிக் காத்திருக்கும் மொத்த யூனிட்டும் தன்னைப் பற்றி என்ன நினைக்கும்? கண்ணாடியில் முகம் வித்தியாசமாய் இருப்பதை அப்பொழுதுதான் கூர்ந்து உணர்ந்தான் பிரேம். உண்மையிலேயே தன் முகம் முற்றி விட்டதா என்ன? வயதான கதாபாத்திரத்திற்கு இப்படிப் பொருந்துகிறது? இரட்டை வேடத்தின் இன்னொரு பாத்திரமான […]
சங்கமம் 2018

மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தும் சங்கமம் விழா, இவ்வாண்டு ஜனவரி 13ஆம் தேதியன்று ஹாப்கின்ஸ் ஹை ஸ்கூலில் கோலாகலமாக நடைபெற்றது. இது பத்தாவது ஆண்டு விழா என்பது குறிப்பிடத்தக்கது. மதியம் 12 மணிக்குச் சிறப்புப் பொங்கல் விருந்துடன் தொடங்கிய இவ்விழாவில், மினசோட்டாவில் வசிக்கும் தமிழ் மக்கள் பெருமளவில் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டனர். கருப்பட்டிப் பொங்கலுடன் தமிழ் பாரம்பரிய மதிய உணவு பரிமாறப்பட்டது. மதிய விருந்திற்குப் பிறகு, 2 மணிக்குத் தமிழ் தாய் […]
எதிர்பாராதது…!? (பாகம் 7)

( * பாகம் 6 * ) ரங்கபாஷ்யம் ஏன் இப்படி விருட்டென்று காரை எடுத்துக்கொண்டு போனார் என்று புரியாது நின்றாள் நந்தினி. பார்கவி உட்கார்த்தி வைத்து விட்டு வந்ததாகச் சொன்னவுடனே, கிளம்ப முடியலைதான். பாதியில் நிற்கும் ஷாட்டை விட்டுவிட்டு எப்படி வருவது? அதுவும் அதே மேக்கப் டிரஸ்ஸோடு? தொடை தெரியும் இந்த உடையில் அவர் முன்னால் போய் நிற்க முடியுமா? மேக்கப் அறைக்குள் நுழைந்து வெளியே வந்திருக்கிறேன். அதற்குள் போய்விட்டார்களே? உடன் ஒருவரும் வந்திருக்கும்போது எப்படி? […]
தெய்வத் தமிழிசை – பாகம் 2

( * பாகம் 1 * ) டிசம்பர் 30ம் தேதியன்று, லயசாரம் மற்றும் “க்ளோபல் ஆர்கனைசேஷன் பார் டிவினிட்டி ” (Global Organization for Divinity) இணைந்து நடத்தி வரும் Spirits of Margazhi 2018 “தெய்வத் தமிழ் இசை” நிகழ்ச்சியின் மூன்றாவது வாரமாக நடந்த கச்சேரியில் முதலில் “தேவ கானம் ” குழுவினரின் கானம் அழகாக இருந்தது . சிறிய குழந்தைகள் பாசுரம் பாடியது பக்தியோடு கூடிய பாமாலை. சங்கீத வித்துவான்கள் ஒரு அஷ்டாவதானி […]
குளிர் படுத்தும் பாடு

இடம் – மின்னியாபொலிஸ் சென்ற வருடம் டிசம்பர் ஆரம்பத்தில் மக்கள் ஜாகிங் போய்க் கொண்டிருந்ததைக் கண்ட போது ஆச்சரியமாக இருந்தது. குளிர் காலம் வந்ததும் தெரியவில்லை. போனதும் தெரியவில்லை. சில நாட்களே குளிர் இறங்கி அடித்தது. இந்த வருடம் அப்படி இல்லை. டெம்ப்ரேச்சர் முள், ஃபாரன்ஹீட்டில் சைபருக்குக் கீழேயே காட்டிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவெங்கும் இந்த நிலைமையே. ஏன், இந்தியாவிலும் இதைத் தான் சொல்கிறார்கள். நூறாண்டு காலச் சரித்திரத்தில் இடம் பெறக் கூடிய பல குளிர்ந்த நாட்கள், கடந்த […]
பகுத்தறிவு – 9 – மாதமோ மார்கழி….

( * பாகம் 8 * ) பகுத்தறிவு குறித்த நமது தொடரைச் சற்று, காலங்களுக்கொப்ப திருப்பிச் செல்லலாம் என்ற நோக்கத்தில் எழுதப்பட்ட கட்டுரை இது. தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் மார்கழி மாதத்தைத் தொடர்புபடுத்தி எழுதலாம் என்று தோன்றியதன் விளைவே இந்த வாரப் பகுத்தறிவுக் கட்டுரை. தமிழ் மாதங்களில் மிகவும் சிறப்பானது என்று போற்றப்படும் மார்கழி என்ற உடனே, அந்த அதிகாலைப் பொழுது நம் மனதை ஆக்கிரமித்து விடும். குழந்தைப் பருவத்தில், நம் கிராமத்து அக்கிரகாரத்து வாசலில் […]
மணியோசை

அறையில் ஏர் கண்டிஷனர் ‘ஹுஸ்ஸ்ஸ்’ என்ற சத்தத்துடன் ஓடிக் கொண்டிருந்தது. சவிதாவின் நீள விரல்கள் லேப்டாப்பில் சடசடவென்று தட்டிக் கொண்டிருந்த சத்தமும் கூடவே சேர்ந்து கேட்டது. அவ்வளவு ஏன், அடுத்து என்ன எழுதுவது என்று சவிதா தன் கட்டைவிரல் நகத்தால் தனது லிப்ஸ்டிக் உதட்டை வருடியது கூட தெளிவாகக் கேட்டது. ‘ட்ரிங்… ட்ரிங்…’ …காலிங்பெல். யாராக இருக்கும்? ரூம் சர்விஸ் கூட எதுவும் சொல்லவில்லையே. ஒரு வேளை விஸ்வா ஏதாவது சொல்லியிருப்பானோ? ‘ட்ரிங்…. ட்ரிங்… ட்ரிங்… ட்ரிங்…’ […]