admin
admin's Latest Posts
நியூ இயர் ரெஸொல்யூஷன்

”ஏன்னா… அடுத்த வாரம் வருஷப் பொறப்பு… என்ன ரெஸொல்யூஷன் எடுக்கறதா இருக்கேள்?..” ஏதோ பொடி வைத்துக் கேட்கிறாள் என்பதாக உணர்ந்த கணேஷ், உஷாரா இருக்கணும் என்ற உள் மனக் குரலுக்கு மதிப்பளித்து, “ஏன்.. ஏன் கேக்குற?” என்று பொதுப்படையாகக் கேட்டு வைத்தான். ”இல்லன்னா.. எல்லாரும் ஏதேதோ ரெஸொல்யூஷன் எடுத்துக்கறாளே.. அது போல நீங்களும் ஏதாவது கெட்ட பழக்கத்த விடப்போறேன்னு சொல்லுவேளோன்னு பாத்தேன்” என்றாள் லக்ஷ்மி. ”ஏண்டி, நோக்கு ஏன் இந்த வம்பு? நான் பாட்டுக்கு தேமேனு டி.வி. […]
எம்.ஜி.ஆர்.

மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்ற இவர், ‘எம்.ஜி.ராமச்சந்திரன்’ என்றும், ‘எம்.ஜி.ஆர்’ என்றும் அன்போடு அழைக்கப்பட்டார். இந்தியாவின் சிறந்த வெற்றிப்பட நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்த இவர், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் மிகப் பெரிய வெற்றிகளைக் கண்டவர். அவருக்கு நடிப்பும், அரசியலும் இரு கண்களாக அமைந்திருந்தன. இளமைக் காலத்திலேயே, பல நாடகக் குழுக்களில் பிரபலமாகத் திகழ்ந்தார். காந்தியடிகள் மீதும் அவரது கொள்கைகள் மீதும் பெரிதும் பற்றுக் கொண்டு, இளம் வயதிலேயே இந்திய தேசிய காங்கிரஸில் தீவிரமாக ஈடுபட்டவர் எம்.ஜி.ஆர். அநேக சிரமங்களுக்கிடையில் திரைப்படவுலகில் காலடி எடுத்து வைத்த எம்.ஜி.ஆர், முதல் சில படங்களுக்குப் […]
பிட் காயின் அலை

சென்ற வருடம், ஏறத்தாழ இதே சமயம், இந்தியாவில் பலர், திருவோடு ஏந்தாத குறையாக ஏ.டி.எம்.களில் ஸ்தலவாசம் செய்திருந்தனர். ‘கேஷ்லெஸ் எகானமி’ என்ற பொருளாதாரத் தத்துவம் தலை தூக்கியது. ஒரு வேளை அப்படி நடந்துடுமோ என்று வயிற்றில் புளி கரைய, பணத்தைச் சேமிக்க, மாற்று வழி தேட ஆரம்பித்தனர் சிலர். சில மாதங்களுக்கு முன்பு ‘வான்ன க்ரை’ (wanna cry) எனும் ‘ரான்சம் அட்டாக்’ நடத்தியவர்கள் தாங்கள் கேட்ட மீட்புத் தொகையை கரன்சி எனும் நாணய வடிவில் […]
ஆழ்மன ஆசைகள்

காலையில் எழுகையில் கருத்தெலாம் கடவுள் காரிருள் குவிகையில் கனவெலாம் காதல்! வைகறை மலர்கையில் வாய்முழுக்க மந்திரம் வானிலொளி மறைகையில் வாய்த்திடும் மன்மதம்! விடிந்து எழுகையில் விதைத்திடும் ஆக்கம் விலக்கிய போர்வையில் விளைந்திடும் ஏக்கம்! பகற்பொழுது பார்க்கையில் பெண்மையொரு யாகம் படுக்கையில் இருக்கையில் பாழ்மனமெங்கும் மோகம்! மேடையில் முழங்குகையில் மேதாவியாய் வாதம் மேலாடை விலகுகையில் மேன்மையிலாக் காமம்! ஆண்களின் உள்ளமது ஆசைகளின் இருப்பிடம் ஆழ்மன அழுக்குகள் ஆராய்வது அவசியம்!! – வெ. மதுசூதனன்
2017 டாப் 10 சாங்ஸ்

இந்த வருடம் நாம் அவ்வப்போது பார்த்து வந்த டாப் சாங்ஸ் வரிசைகளைப் பின்வரும் இணைப்புகளில் காணலாம். ஃபிப்ரவரி 2017 ஏப்ரல் 2017 ஜூலை 2017 செப்டம்பர் 2017 நவம்பர் 2017 கீழ் வருபவை அனைத்தும் இவ்வருடம் இதுவரை வெளியான படங்களில் உள்ள பாடல்கள். ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’, ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘2.0’ போன்ற படங்களிலிருந்து பாடல்கள் வெளியாகி இருந்தாலும், படங்கள் இன்னும் வெளியாகாததால் அவற்றை இவ்வரிசையில் சேர்க்கவில்லை. பத்து பாடல்கள் தான் என்று ஒரு […]
கார்ப்பரேட் கனவுகள்

“ரேணு. நேத்து ஒரு வரன் ப்ரோஃபைல் சொன்னேனே அதைப் பார்த்தியா? பிடிச்சிருக்கா?” “ “ “என்னடி பதிலையே காணோம்?” “அம்மா. நீங்க முழுமையா பாருங்க எனக்கு எது ஒத்துவரும். வராது என்று நீங்க ஒரு ஐடியா வச்சிருப்பீங்க. இல்லையா? அதற்கெல்லாம் ஓகே என்றால் எனக்குச் சொல்லுங்க.. அப்புறம் நான் என் ஒபினியனைச் சொல்கிறேன்” “இப்படிப் பொத்தாம் பொதுவாப் பேசினா எப்படிடி? உனக்குப் பொருத்தமான வரன் என்று பார்த்து 100 சதவீதம் நாங்க திருப்தியானப்பறம் தான் உனக்குச் சொல்றோம். […]
எதிர்பாராதது…!? (பாகம் 5)

* பாகம் 4 * “என்னம்மா நீங்க… உணர்ச்சி வசப்பட்டுட்டீங்க போலிருக்கு…? அவசரப்பட்டுட்டீங்களே?” – டச்சப் பார்கவி ஆறுதலாய் முன் வந்தாள். “ஆமா…. அவன் அழகு நடிப்புங்கிறதைக் கூட மறக்கடிச்சிடுதுப்பா…. ஒரு சிரிப்புச் சிரிக்கிறான் பாரு…. கண்ணை மயக்கி, உதட்டைச் சுழிச்சி… அந்தச் சிரிப்பு வெறும் நடிப்பில்லைப்பா…. உண்மைலயே எம்மேலே அவனுக்கு ஆசை இருக்குன்னு தோணிடிச்சு….. அவன் அணைக்கிறபோது நடிப்புங்கிறதையே மறந்திடுறேன் நான்…. எதுக்காக அவன் மேலே இப்டி ஆசை வந்திச்சின்னே தெரில….. ஆனாலும் நடிக்கிறபோது சில்மிஷம்ங்கிறது ஓவர்…. […]
சுதந்திரம் ஒரு முறை தான்

“சார்ள்ஸ்டன் கரோலைனா” என்னும் ஊரில் “கெனத்” எனும் இளைஞன் புகையிலைகள் மத்தியில் கொட்டும் வெய்யிலில் களை எடுத்துக் கொண்டிருந்தான். அவன் பாதங்கள் மண்ணில் வெறுமையாகப் பரவியிருந்தன. கருங்கல் போன்ற தோல் உருவம், அடர்த்தியற்ற கருமைத் தலைமுடிகள்… அவன் வியர்வைத் துளிகள் வெய்யிலில் உலர்கின்றன. துணிமணி இல்லாத… ஆங்காங்கே கை, கால், முதுகு, தொடை என பல இடங்களில் காயத் தழும்புகள் கொண்ட பரிதாப இளம் உடல். ஆமாம் பாவம் ‘கெனத்’, அவன் ஒரு வெள்ளை எசமானது […]