சலங்கை பூஜை
 மினசோட்டாவில் வசிக்கும் குமாரி கிரன்மாயி அவர்களின் சலங்கை பூஜை  ஹாப்கின்ஸ் கம்யூனிட்டி அரங்கில் ஜூன் 4 ம் தேதி நடைபெற்றது. 12 வயதே நிரம்பிய கிரன்மாயி  மேபிள் குரோவ் பள்ளியில் ஆறாம் நிலையில் படிக்கிறார்.

கிரன்மாயி தனது ஐந்தாம் வயதிலிருந்து பரத நாட்டியம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தாராம். ஆசிரியர் திருமதி பத்மஜா தாமிபிரகாடாவிடம் தொடங்கி, பின்பு ஆசிரியர் திருமதி சுசித்ரா சாய்ராம் அவர்களிடம் தொடர்ந்து பரத நாட்டியம் கற்றுக் கொண்டுள்ளார்.– ”கலா வந்தனம்” எனும் இந்த பரதநாட்டியப் பள்ளியில் தந்து பத்தாம் வயதிலிருந்து நாட்டியம் பயிலும் இவர், இந்த நிகழ்ச்சியின் மூலம் தனது சலங்கை பூஜையைச் செய்வித்து, நடன அரங்கேற்றம் செய்தார். கிரன் இதற்கு முன்னர் மினசோட்டாவில் உள்ள மேபிள் குரோவ் கோவில், மினசோட்டா விபா மற்றும் எடினா கோவில் போன்ற இடங்களில் நடைபெற்ற பரதநாட்டிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பல பரிசுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சலங்கை பூஜையை கிரனின் பெற்றோர் மற்றும் நண்பர்கள் முன்னின்று சிறப்பாக நடத்தி முடித்தனர். அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படம்:

செல்வி கிரண்மாயி சலங்கை பூஜை சிறப்பாக நடந்தமைக்கு வாழ்த்துக்கள்.சிறுமியின் ஆற்றலும் ஆர்வமும் மகிழவைக்கிறது.பல்லாண்டு சீரும் சிறப்புடன் வாழ்க.