\n"; } ?>
Top Ad
banner ad

முத்துக்கள் மூன்று

இவ்வளவு நேரம் நல்லா தானே பேசிட்டு இருந்தான்!

“நேற்று இரவு ஹாலிவுட்டில் ஒரு மிகவும் துயரமான சம்பவம் நிகழ்ந்தது. சிரமப்பட்டுக் கொண்டிருந்த, ஒரு காலத்தில் மிகவும் திறமையான திரைப்பட இயக்குநரும், நகைச்சுவை நடிகருமான ராப் ரெய்னர் மற்றும் அவரது மனைவி மிச்செல் ரெய்னர் மரணம் அடைந்தனர். அவர் மரணத்திற்கான காரணம் ‘டிரம்ப் மனநிலைச்சிதைவு நோய்க்குறி’ என்று அழைக்கப்படும், மனதில் ஊடுருவி குணப்படுத்த முடியாத ஒரு பெரும் பித்து நிலையால் அவர் மற்றவர்களிடையே ஏற்படுத்திய கோபம்தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

என் மீதான நீங்காத ஆவேசத்தால் மக்களை பைத்தியக்காரர்களாக ஆக்குவதில் அறியப்பட்டவர் ராப். நான் வெற்றி பெற்ற பிறகு அமெரிக்காவின் பொற்காலம் நம்மை வந்தடைந்தபோது, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, அவரது பகிரங்கமான மனக்கலக்கம் (paranoia) புதிய உச்சங்களை அடைந்தது. ராப் மற்றும் மிச்செல் அமைதியாக இளைப்பாறட்டும்.

  • ஹாலிவுட் நடிகரும் இயக்குனருமான ராப் ரெய்னர் மற்றும் அவரது மனைவி மிச்செல் ரெய்னர் கொல்லப்பட்டு இறந்ததையொட்டி, அதிபர் டானல்ட் ஜே டிரம்ப், ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்ட “இரங்கல் செய்தி”

***********

நான் எங்க எப்படி இருக்க வேண்டிய ஆளு தெரியுமா?

“கேன்சர் செல்களுக்கு சாதாரண செல்களைவிட 7 மடங்கு அதிக எனர்ஜி வேண்டும். அந்த எனர்ஜியை குறைச்சுட்டா கேன்சர் செல் செத்துப்போயிடும். 24 மணி நேரம் விரதம் இருந்தால் கேன்சர் செல்லுக்குப் போகும் எனர்ஜி கட்டாகி கேன்சர் செல் செத்துப்போயிடும்.எல்லார் உடம்புலேயும் கேன்சர் செல் இருக்கும். அது அதிகமாகும்போது தான் பிரச்சனை. வாரத்துல ஒருநாள் சாப்பிடாதீங்க. ஆட்டோமெட்டிக்கா உடம்புல இருக்கிற கேன்சர் செல் செத்துப் போயிடும்.  வருஷத்துக்கு ஒருக்கா ஏழு நாள் விரதம் இருங்க. மொத்த கேன்சர் செல்லும் செத்துடும்” 

  • பாஜக-வின் முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் மற்றும் முக்கிய நிர்வாகி அண்ணாமலை சஷ்டி விரதம் பற்றி சொன்னது.

********

எங்க தலைக்கு ‘தில்’ல பாத்தியா?

எட்டுக்கும் மேற்பட்ட போர்களை நிறுத்தியதற்காக உங்கள் நாடு எனக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டாம் என முடிவு செய்துள்ளதைக் கருத்தில் கொண்டு, இனி அமைதியைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டிய கட்டாயம் எனக்கு இருப்பதாக நான் உணரவில்லை. இருப்பினும் அமைதி என்பதே எப்போதும் பிரதானமாக இருக்கும், ஆனால் இப்போது அமெரிக்காவிற்கு எது நல்லது மற்றும் சரியானது என்பதைப் பற்றி என்னால் சிந்திக்க முடியும்.

  • கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க முயலும் அதிபர் டானல்ட் டிரம்ப், நார்வே பிரதமர் ஜானஸ் ஸ்டோருக்கு எழுதிய கடிதத்தில், தான் இனியும் அமைதி பற்றி சிந்திக்க வேண்டிய அவசியமில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

 

  • வோல்டெய்ர்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad