\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

ஐ.ஏ.எம் நன்றி நவில்தல் விழா 2019 (IAM Thanksgiving 2019)

அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள இந்தியன் அசோசியேஷன் ஆஃப் மினசோட்டா (Indian Association of Minnesota) அமைப்பு சார்பில் 2019 ஆண்டில் உதவிய அனைத்து தன்னார்வலர்களுக்கும்  நன்றி தெரிவிக்கும் விழா கொண்டப்பட்டது. இந்த விழா சென்ற வாரம், டிசம்பர் 6 ஆம் தேதி நியு பிரைட்டன் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. 

திருமதி. மீனா கோனார் நடனத்துடன் தொடங்கிய விழாவில், அமைப்பின் தலைவி திருமதி. நாஷ் அனைவரையும் வரவேற்று, தன்னார்வலர்களுக்கு நன்றி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து  இந்த ஆண்டின் செயற்குழுவில் பணியாற்றிய உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்து கௌரவித்தார். பின்பு 2020ஆம் ஆண்டுக்கான புதிய செயற்குழுவினரை அறிமுகப்படுத்தினார். 

செயற்குழுவின் புதிய  தலைவர் திரு. ஸ்ரீனி செக்கா  கூட்டத்தில் சிறப்புரை ஆற்றினார். விழா முடிவில் அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது. இதனைத்  தொடர்ந்து நடைபெற்ற நடன நிகழ்ச்சியுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.

அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில உங்களுக்காக!!

ராஜேஷ் கோவிந்தராஜன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad