admin
admin's Latest Posts
நீரைத் தழுவும் காற்றின் சுகம்

நீரைத் தழுவும் காற்றின் சுகம் நெடுங்கோண இதழ்களால் சுட்டி நிற்கும் பிஞ்சுக் குழந்தையின் சிற்றொலி… இலவம் பாதம் நெகிழும் காற்றின் புல்வெளி … காலசைத்த புது உயிரின் விட்டம் பார்க்கும் சுட்டுவிழி…. எல்லாமாய் இயங்கும் புதிய சூரியனை கரங்களில் ஏந்துதல் உலகின் அப்பாக்களுக்கு நீரைத் தழுவும் காற்றின் சுகம். – முனைவர் சு.விமல்ராஜ்
தெய்வத் தமிழிசை – பாகம் 3

( * பாகம் 2 * ) “மனஸ்சேன லக்ணம் குரோரங்ரி பத்மே ததஹ் கிம் ததஹ் கிம் ததஹ் கிம் ததஹ் கிம்” என்ற ஆதி சங்கரரின் குரு அஷ்டகத்தின் வரிகளைத் துணைக் கொண்டு, குருவின் பாதங்களை சரணம் கொண்டபடி இந்த கட்டுரையைத் தொடங்குவது உசிதம் என நினைக்கிறேன். எவ்வளவு பெயர், புகழ், திடகாத்திரமான சரீரம், பணம் இருப்பினும் மனமானது குருவின் திருவடிகளை அடையாவிடில் என்ன பயன் என்ன பயன் என்ன பயன்.( ததஹ் […]
சூப்பர் பவுல் ஜோரில் மினசோட்டா

“ட்வின் சிட்டீஸில்” கண்கூடாகத் தெரிகிறது. மைனஸ் டிகிரி குளிரால், ஒரு பக்கம் வைரஸ் ஜூரம் இன்னொரு புறம் சூப்பர் பவுல் எனப்படும் ஃபுட்பால் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஜுரம். ஃபிப்ரவரி நான்காம் தேதியன்று நடக்கவிருக்கும் ஃபைனல் போட்டிக்காக இப்பொழுதே திருவிழாக் கோலமாகி விட்டது மின்னியாபொலிஸ் நகரம். பேருதான் அமெரிக்கக் கால்பந்து. ஆனால், அந்தப் பந்தைத் தூக்கிப் போட்டு விளையாடுவது கைகளால். என்ன தான் ஓடுவதற்குக் கால்கள் பயன்படுகிறது என்றாலும் இதைக் கால்பந்து என்று அழைப்பது வாழையடி வாழையாக அமெரிக்காவில் […]
எதிர்பாராதது…!? (பாகம் 9)

( * பாகம் 8 * ) ‘கிர்ர்ர்…கிர்ர்ர்…கிர்ர்ர்…’ -அந்த நள்ளிரவில் சவமாய்த் தூங்கிக் கொண்டிருந்த நந்தினி பதறியடித்து எழுந்தாள். பத்து மணிவரை ஷூட்டிங் முடித்துவிட்டு வந்து விழுந்திருந்ததால் உடம்பு கெஞ்சியது. வீட்டில் ஒருவரும் இல்லாத நேரத்தில் யார்? சற்றே உதறலெடுத்தது. வாட்ச்மேனை அழைக்க நினைத்தாள். மனைவிக்கு உடம்பு சரியில்லையென்று அவன் போயிருந்தது நினைவுக்கு வந்து பயமுறுத்தியது. இப்போது கதவைத் திறப்பதா வேண்டாமா? வாழ்க்கையே தனிமைதான். அதுவாகவே அப்படி அமைந்து போனதும் இப்போது பழகிப் போய்த்தான் கிடக்கிறது. […]
ஆண்டாள் கல்யாணம் 2018

ஜனவரி 13ம் தேதி 2018 அன்று மினசோட்டாவில் உள்ள S V கோவிலில் ஆண்டாள் கல்யாண விழா சடங்கு, நடனம் பாட்டு போன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்டாள் (கோதை) ரங்கநாதரை மார்கழி மாதம் கடைசி நாள் மணமுடிப்பதாக சம்பிராதயம். இந்த விழாவை மனிதர்கள் திருமன விழா போல் சிறப்பாக நடத்தினார்கள். மார்கழி மஹோத்சவம் 2017-18 ஒரு பகுதியாக மினசோட்டா தேவகணம் அமைப்பு சார்பில் நடைபெற்றது. இந்த விழாவை கடந்த மூன்றாண்டாக மினசோட்டா தேவகணம் அமைப்பு சார்பில் “ட்வின் […]
2018 – நுகர்வோர் நம்பிக்கையும் சில்லறை வர்த்தகமும்

அண்மையில் வெளியான அறிக்கை ஒன்றின்படி , அமெரிக்க விடுமுறைக் கால விற்பனை, சென்ற ஆண்டைக் காட்டிலும் 4.9 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது. 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு, சென்ற ஆண்டின் “வருடாந்திர வளர்ச்சி” (Year over year sales) கணிசமாக உயர்ந்துள்ளது. ‘ஆ !! சூப்பர், இனிமே பொருளாதாரப் பிரச்சனை எதுவுமில்லை’ என நினைத்து மகிழ்ந்து சுயநினைவுக்கு வருவதற்குள் ‘பொருளாதார வல்லுநர்கள் கணித்திருந்த வளர்ச்சியை விட இது சற்றுக் குறைவு.’ என்று இன்னொரு அறிக்கை வந்து விழுந்தது. அதைப் […]