admin
admin's Latest Posts
நம்மில் ஓர் அன்பின் ஒளி பிறந்தது…….

டிசம்பர் மாதம் என்றாலே குளிர்காலம் வந்துவிட்டது என்பதை அறிவோம். நீண்ட விடுமுறை நாட்கள் கிடைக்கும். இந்த விடுமுறை, குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டாடும் அன்பான நேரங்களைக் கொண்டது. டிசம்பர் 25ம் தேதி உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் இயேசு பிறந்த நாளான கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நீங்கள் எல்லாரும் இறைமகன் இயேசு பிறந்த கிறிஸ்துமஸ் பண்டிகையைப் பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்படுவீர்கள் என்று நினைக்கிறேன். ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன், மரியாள் என்ற ஒரு […]
எதிர்பாராதது…!? (பாகம் 4)

உறக்கமின்றிப் புரண்டு கொண்டிருந்தான் பிரேம்குமார். திரும்பத் திரும்ப அவன் கை, அடிபட்ட அந்தக் கன்னத்தை நோக்கியே சென்று, தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தது. தடம் தெரிகிறதா என்று எழுந்து சென்று கண்ணாடியின் முன் அமர்ந்து கூர்மையாகப் பார்த்தான். பளிச்சென்று தெரிந்தது.. நான்கு விரல்கள் அப்படியே பதிந்திருந்தன. மேக்கப் கலைத்த பின்பு தெரியாது என்றுதான் நினைத்தான். அந்த அளவுக்கு ஆழமான, அழுத்தமான அடி. மனதுக்குள் ரணம் புகுந்திருந்தது வேதனைப்படுத்திக் கொண்டிருந்தது. எரிச்சல் அதிகமாகி, வெறியைக் கிளப்பிக் கொண்டிருந்தது. படுக்கையின் மேல் […]
அருவி – திரை விமர்சனம்

தவிர்க்கவே முடியாத, தவிர்க்க கூடாத ஒரு சினிமா தமிழில் வந்திருக்கிறது. போஸ்டர் டிசைன், டீஸர், ட்ரைலர், பாடல்கள் என ஏகத்துக்கும் எகிறிவிட்ட எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்திருக்கிறதா இந்த அருவி என்றால், நிச்சயமாகச் செய்திருக்கிறது, சொல்லப் போனால் எல்லா எதிர்பார்ப்பையும் மீறி இருக்கிறது இந்தப் படம். ஜோக்கர், தீரன் இப்போது அருவி போன்ற நல்ல படங்களைக் கொடுக்கும் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்குப் பாராட்டுகள். இப்படி ஒரு கதையையும் காட்சியமைப்பையும் யோசித்த இயக்குனருக்கு அன்பின் முத்தங்கள்.. சரி படத்துல […]
அமெரிக்கக் குடிவரவு மாற்றங்கள் 2017

2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்கக் குடிவரவு சட்டக் கையாளல்கள் பல்வேறு மாற்றங்களிற்கும் உள்ளாகியுள்ளது. இது சென்ற வருட சனாதிபதி தேர்தல் வாக்களிப்புகளின் பிரதி விளைவாக உருவாகியுள்ளது எனலாம். புதிய அமெரிக்க சனாதிபதி டோனல்ட் டிரிம்ப் பதவியேற்றதிலிருந்து ஏறத்தாழ 21 குடிவரவுத் தணிப்புக் கட்டளைகள் அமுலுக்கு வந்துள்ளன. இது சில அரசியல் ஐதீகங்கள் அடிப்படையில் அமைந்திருப்பினும் இந்தத் திருப்பம் அமெரிக்கப் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வாறு வழி வகுக்கும் என்பது கேள்விக்குரிய விடயமே. சென்ற ஐம்பது ஆண்டுகளில் […]
நன்றி நவிலும் நந்நாள் ஓட்டப் பந்தயம்

ஓவ்வொரு ஆண்டும் நன்றி நவிலும் நந்நாளன்று (Thanksgiving Day) காட்டேஜ் குரோவ் நகரத்தில் 5 மைல் ஓட்டம் நடைபெறும். உள்ளூரிலிருந்து பெருமளவு மக்கள் இந்தப் பந்தயத்தில் கலந்து கொள்வர். இந்த வருடம், இந்த ஓட்டப் பந்தயத்தில் சுமார் 500 பேர் பங்கேற்றனர். இதில் வசூலாகும் தொகையை உள்ளுரில் உள்ள சில தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கினர். இந்த ஓட்டத்தில் கலந்து கொண்ட சிறுவர், சிறுமியர் மற்றும் பெரியவர்களுக்கு முத்திரை பதித்த மேற்சட்டை வழங்கப்பட்டது. சீருடை போல் இதனை […]
சொற்சதுக்கம் 7

கீழே கட்டத்துக்குள் இருக்கும் ஒன்பது எழுத்துக்களைக் கொண்டு சொற்களை உருவாக்குங்கள். சொற்கள் இரண்டெழுத்தாகவோ அல்லது அதற்கு மேற்பட்டதாகவோ இருக்கலாம். ஒரே எழுத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பாவிக்கலாம். சொற்கள் பொருள் பொதிந்தவையாக இருக்க வேண்டும். இருபது சொற்களுக்கு மேல் உருவாக்கினால் நீங்களே உங்களுக்கு தமிழ்ப் புலி என்ற பட்டமளித்துக் கொள்ளலாம். விடைகள்
சொற்சதுக்கம் – விடைகள்

ஆ தவம் தடம் ஆல் கல் தபால் ஆவல் கடம் கவளம் பாடல் வடம் தடகளம் பாகம் வளம் ஆடல் பால் களம் கடகம் பாடம் வடகம் ஆதவம் தளம் தகவல் பாகவதம் பாளம் பாதகம் வதம் பாவம் பாதம் வடல்
நிலாவில் உலாவும் மான் விழியே

கலையழகு மிக்க கயல்விழியே குலையாத காதல் கொண்டேன் அழகியே நிலையாக வாராமல் ஓடி ஒளிவதேன் அலையாக வந்து மோதிச் செல்கிறாய்! தேடவே கிடைக்கா தெள்ளமுதே நாடவே செய்திடும் உன் அழகு கோடான கோடி மக்களின் பேரழகி! பாடவே வைக்கிறாய் கவிஎழுதி! நிலாவில் உலாவும் மான் விழியே நிம்மதி தேடி அலைய வைக்காதே நினைவிலும் கனவிலும் உன் முகமே நிறைந்திடும் நீவந்தால் என் அகமே! கருகான பயிர்போல் நான் வாடுறேன் உருகாத மனம்போல் நீ நடிக்கிறாய் அர்த்தமற்ற […]
எதிர்பாராதது…!? (பாகம் 3)

( * பாகம் 2 * ) அப்பா தனக்கு இப்போதைக்குக் கல்யாணம் பண்ணி வைக்க மாட்டார் என்று உறுதியாய் அறிவாள் கல்பனா. அம்மா பவானிதான் அரித்தெடுக்கிறாள். பஞ்சாபகேசன் அசைவதாயில்லை. “உனக்கு ஒண்ணும் தெரியாதுடி….நாம என்ன ஆம்பிளைப் பிள்ளையா பெத்து வச்சிருக்கோம்…ஒரு பொண்ணுதானே இருக்கு…. உனக்கும் எனக்கும் பென்ஷனா வருது? ஏதோ வியாபாரத்தைப் பார்த்தேன்…. காலத்தை ஓட்டினேன். கஷ்டப்பட்டு ஒரு பொண்ணைப் படிக்க வச்சிட்டேன்… என் தங்கச்சி லலிதா இருந்தா… அவ வேலைக்குப் போனதால கூடக் கொஞ்சம் […]
கோடை மழை

மூணு மணிக்கெல்லாம் இருட்டிட்டு வந்தது. இன்னும் செத்த நேரத்துக்கெல்லாம் மழை புடி புடினு புடிக்கப்போவுது. கல்லு வீட்டு மாடியில் காயவைத்திருந்த சோத்து வத்தலை அதைப் பிழிந்து வைத்திருந்த புடவையோடு சுருட்டிக் கொண்டு ஓடி வந்து வீட்டில் ஒரு அறையின் மூலையில் வைத்துவிட்டு திரும்புகையில் மின்சாரம் போனது. “புடுங்கிட்டான் கரண்டை.. இனி எப்ப வருமோ..?” -அம்மா “இடியும் மின்னலுமா இருக்குன்னு நிறுத்தி இருப்பான்.. மழை விட்டொடனே குடுத்திடுவான்”.- அப்பா. “தோட்டத்துல கிடக்குற அந்த காஞ்ச செராவை (சிறியதாக பிளக்கபட்ட […]