கட்டுரை
வாங்க…. ஃப்ரீயா பேசலாம் …
நான் பேசப்போற டாபிக்கை வெச்சு எனுக்கு ரொம்ப வயசாயிட்ச்சினு நெனுச்சுக்காதீங்கோ … யங் ஏஜூ தான் எனுக்கு.. இர்ந்தாலும் அப்பப்போ எதுனா ஃபீல் ஆவும் … போன வாரம் இப்டித்தான் ஃபீலாயிட்டேன்.. என் டாட்டரு, அதாம்ப்பா பொட்ட புள்ள, ரிபோர்ட் கார்டை எடுத்தாந்து நீட்டுச்சி … நம்பள மாரி இல்லாம ஏதோ நல்லா படிக்கும்னு வெச்சிக்கோ .. சரி நல்ல மார்க் வாங்கியாந்துக்கிறாளே எதுனா கிஃப்ட் குடுப்போம்னு ‘உனுக்கு என்னா ஓனும் கண்ணு?’ன்னு கேட்டேம்பா. டக்குனு ‘செல்ஃபோனு’ […]
சமூக வலைத்தளங்களும் அதன் பயன்பாடுகளும்
இந்த நூற்றாண்டில் உலகளாவிய முறையில் எங்கெல்லாம் மனித சஞ்சாரம் இருக்குமோ அங்கெல்லாம் இலத்திரனியல் / மின்னனுவியல் (electronics) தகவல் சாதனங்கள் காணப்படுகின்றன. தகவல் உச்சமமான தற்போதைய தசாப்தத்தில் தொழிநுட்ப முன்னேற்றங்கள் எவ்வாறு எமது அன்றாட வாழ்க்கையில் பலனையும், பாதகங்களையும் உண்டாக்கலாம் என ஒரு சில நிமிடங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இது எமது குடும்பத்திற்கும் உடல் மற்றும் உள நலத்திற்குப் பயனாகவும், மன நிம்மதியைத் தரவும் வழிவகுக்கும். எம்மில்லங்களில் வளரும் பிள்ளைகளில் பெரும்பாலானோர் பாலகர்களாக இருக்கையிலேயே ஓடுபட […]
மூளைவளர்ச்சியும் மொழி கற்றலும்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்கிறது நம் முதுமொழி. இது மூளை வளர்ச்சியிலும் மொழிகற்றலிலும் தகுமான அறிவுரை என்பது தற்போதைய மொழியியல் கல்வி ஆராய்ச்சிகளில் இருந்து தெரிய வருகிறது. மொழி தெரிந்து கொள்ளல் மனித இனத்தின் பிரதான குணாதிசயங்களில் ஒன்று. மொழி கற்றல் மூளை வளர்ச்சியில் பிரதான மாற்றங்களை உண்டு பண்ணுகிறது என தற்பொழுது பரீட்சார்த்த ஆராய்ச்சி மூளைப் படங்கள் மூலம் தெளிவாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியின் பிரதான அவதானிப்பு என்ன வென்றால், மனித மூளை […]
மதுரை
சில நகரங்கள் தோன்றும் மறையும் அது உலக இயல்பு. ஆனால் ஒரு சில நகரங்கள் மட்டுமே தொடர்ந்து மக்கள் வாழத் தகுதி உள்ளதாகவும் அதன் பெருமை குறையாமலும் இருக்கும். அத்தகைய ஒரு மாநகரம் மதுரை. கடைச்சங்கம் வளர்த்தப் பாண்டியத் தலைநகர், மல்லிகை நகரம், தூங்கா நகரம் என மக்களால் புகழப்படும் மாநகரம் மதுரை. எந்தப் பக்கச் சார்புள்ள வரலாற்று ஆசிரியர்களாலும் இதன் இருப்பைக் குறைந்தது 2500 ஆண்டுகளுக்குக் கீழ் சொல்ல இயலாது. மதுரையின் வரலாற்றைச் சொல்லக் கி.மு,கி.பி […]
இருவேறு படங்கள், ஒரே தாக்கம்…
மனித இனத்தில், அன்றாட வாழ்வில், தான் உண்டு தன் சொந்த வாழ்க்கையுண்டு என்று வாழ்பவர்கள் அதிகம். இவர்களின் கவனம் அசாதாரணச் சூழ்நிலைகளைச் சற்றேனும் உற்று நோக்குவதில் சிறிதளவேனும் திளைப்பதில்லை. இவர்களின் கவனத்தையும் கவர்ந்திழுக்கும் சக்தி சில படங்களுக்கும் நிகழ்வுகளுக்கும் உண்டு. அவற்றில் இரண்டு படங்களையும் நிகழ்வுகளையும் ஒப்பு நோக்குவதுதான் இந்தச் சிறிய கட்டுரை. வியட்நாம் போரின் உச்சத்தில் 1972ஆம் ஆண்டு புகைப்பட நிபுணர் நிக் உட் அவர்கள் எடுத்த இந்தக் கருப்பு/வெள்ளை படம் ஒரு பெரும் தாக்கத்தை […]
சிட்டுக்குருவி
நான் அமெரிக்காவிற்கு வந்த புதிதில் வீட்டு நினைவுகளில் சிக்குண்டு பெரிதும் கலங்கியதுண்டு. உறவினர், நண்பர் இவர்களை விட்டு விட்டு வந்து இங்கே என்ன சாதிக்கப் போகிறோம் எனத் தோன்றியது உண்டு. நண்பர், உறவினர் மட்டுமில்லை, எனது வாழ்க்கை முறையையே தொலைத்து விட்டதாக நினைத்தேன். எங்கள் வீட்டுக்கு பெடல் இல்லாத சைக்கிளை ஓட்டி வந்து பேப்பர் போடும் பெரியவர், ‘எளன்’ என்று கூவி இளநீர் விற்பவர், காலை ஆறரை மணி சமீபத்தில் சாவியை மூன்று முறை கதவில் தட்டி […]
தஞ்சை வரலாறு
இஞ்சியும் மஞ்சளும் கொஞ்சித் தவழும் தஞ்சை மாநகர். என்னடா தஞ்சை மாநகர்னு சொல்லுறான், அது ஒரு சின்ன நகரம் அவ்வளவுதானே என்று நினைச்சிங்கன்னா உங்களுக்கு இந்தக் கட்டுரை வியப்பா இருக்கும். இன்னைக்கு மாநகர்ன்னு சொல்ற முக்கால்வாசி நகரங்கள் உருவாவதற்கு முன்னாடியே தஞ்சாவூர் ஒரு மாநகர். அதுவும் சும்மா இல்ல, தெற்காசியாவின் மிக முக்கியமான மாநகர். ஒரு உவமைக்குச் சொல்லனும்னா இப்போ இருக்கிற வாஷிங்டன் மாதிரி. இந்த ஊர் தலைநகரா இருந்த போது இதன் ஆட்சிக்குக் கீழ் இருந்த […]
பல்லாங்குழி
மிகத் தொன்மையான தமிழர் விளையாட்டு, கிட்டத்தட்ட 8000 ஆண்டுகள் பழமையானது எனலாம். பல்லாங்குழி பற்றிய குறிப்புகள் பல தமிழ்ச் சங்க இலக்கியங்களிலும் காணப்படுகின்றன. மொழி ஞாயிறு தேவனேயப்பாவாணர் தமிழரின் தொன்மையான, தமிழ் மண்ணின் மரபு மாறாத விளையாட்டுகளைப் பற்றி ஒரு தனி நூலே எழுதியிருக்கிறார். இந்நூலில் பாவாணர் எழுதிய முகவுரையிலிருந்து சில பகுதிகள் இதோ; . ”விளை என்றால் விருப்பு என்றும், ஆட்டு என்றால் ஆட்டம் பொருளாகும். எனவே, விரும்பியாடும் ஆட்டு, விளையாட்டு என்றானது. விரும்பப்படுதல், செயற்கெளிமை, […]
உலகத் தாய்மொழி தினம்
தமிழே, உயிரே வணக்கம். ஒரு இனத்தின் அடையாளம் மொழி, இனக்குழுக்கள் தம் இனத்தவரிடையே தன் உணர்வுகளை வெளிப்படுத்தத் தனித்தன்மையான முறைகளைக் கையாண்டதன் விளைவே மொழிகளின் தோற்றம். உலகில் பல மொழிகள் தோன்றி மறைந்திருக்கின்றன, இதற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு, அரசாட்சி நடந்த பல்லாயிரம் ஆண்டுகளில் அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி அதற்கு மொழியும் விதிவிலக்கல்ல. பேரரசுகள் காத்த மொழிகள் அனைத்தும் இன்றும் தழைத்தோங்குகிறது. கடந்த சில நூற்றாண்டுகளிலும் இதே நிலைதான். நாட்டு எல்லைகளை அதிகரிக்கவும், தன் அதிகாரங்களை […]
மாந்தை – Mantai
பண்டைய தமிழ்த் துறைமுகம் மாந்தை இலங்கை அகழ்வாராய்ச்சி ஆய்வுகளில் மாந்தை அல்லது மாந்தோட்டை மணல்மேடு தமிழ் மக்களின் சரித்திரத்தைப் பொறுத்தளவில் முக்கியத்துவம் வகிக்கின்றது. மாந்தையானது சைவர்கள் போற்றும் திருக்கேதீச்சரம் ஈசன் தலத்தை ஒற்றியும் அமைந்தது எனலாம். திருக்கேதீச்சரம் ஆனது திரு+கேது+ஈச்சரம் என்னும் தமிழ் சொற்களின் ஒன்றிணைப்பே ஆகும். மாந்தை இலங்கை நாட்டின் வடமேற்கில் தலை மன்னாரிற்கு நேர்ப்புறமாக கடற்கரையோரத்திலுள்ள ஒரு நகரம். . இதன் பிரதான அம்சம், 22 அடிகளுக்கு (6.7 மீட்டர்) மேல் கடலில் இருந்து […]






