இலக்கியம்
நட்பு
உடுக்கை இழந்தவன் கைதானோ – உள்ளக் கிடக்கை உணர்ந்தவன் அவன்தானோ படர்க்கை நிலையினில் வாழ்ந்திடிலும் நெஞ்சப் பதைப்பை உணர்ந்திடும் செவிதானோ! இடுக்கண் களைவானோ இடித்து உரைப்பானோ எடுத்த வினைகளெலாம் எதிர்த்து வெற்றியுற மடுத்த செவிகளுடன் மரணம்வரை வருவானோ அடுத்த அன்னையென அருகிருக்கும் நட்பவனோ!!! – மதுசூதனன் வெ. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ அவிழும் உடுப்பணிந்த அந்தக் காலத்தில் அமிழ்தும் இருந்தது நீயுரைத்த நட்புறவில்! அழிந்துவரும் இன்றைய அவசரக் கோலத்தில் அழகான அவ்வுறவுஇல்; அவிழா உடையணிகிறோம்! – ரவிக்குமார் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ […]
லம்பேர்ட்டனில் பண்டைய இரும்புத்தொழில்
இரும்புத் தாதுப் பொருள் பண்டையத் தமிழர் நாகரீகத்தில் இடம்பெற்ற முக்கியமானதொரு உலோகம். மினசோட்டா மாநிலமும் சென்ற இரண்டு நூற்றாண்டுகளில் மிகப்பெரிய இரும்புத்தாதுப் பொருள் அகழ்வுப் பிரதேசமாக இருந்து வருகிறது. தமிழ் வரலாற்றிலும் பாண்டிய தொன்மை காலத்தை இரும்பு காலமாக அகழ்வாராய்ச்சியாளர்கள் வகுத்து எமது தமிழ் நாகரீகத்தை படிக்கிறார்கள். இயந்திரமயமாக்கபட்ட நகர வாழ்க்கையில் நம்மில் பலருக்கு இரும்பினால் ஆன தளவாடங்களை வாங்கத் தெரியுமே தவிர அவை எவ்வாறு உருவாக்கப் பட்டன என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. என்னதான் யூடியூப்பிலே கானொளியாகப் […]
அன்னை மண்ணே…
அன்னை மண்ணே. அன்னை மண்ணே! சோகம் தீர்ப்பாயா எம் சோகம் தீர்ப்பாயா? கண்ணில் சிந்தும் பூக்கள் தூவி பாதம் பணிகின்றோம் – உன் பாதம் பணிகின்றோம் துடுப்பை இழந்த படகாய் எங்கள் வாழ்க்கை போனதம்மா வலிகள் சுமந்து புது வழிகள் தேடி விழிகள் அலைவதேனோ – எங்கள் மொழிகள் இழந்து மௌனியாகி வாயும் மூடியதேன்? யுத்தம் விளைந்த பூமியில் நாங்கள் செத்துப் பிழைக்கின்றோம் – தினம் ரத்தம் சிந்தி கொட்டும் போர் மழையில் செத்து மடிகின்றோம்! உண்ண […]
கடவுள்
கடவுள் என்றுண்டோ கற்பனை அதுதானோ கருத்துத் தெளிவதோ கலங்கிய குளமதோ கனவினில் உறைபவனோ கருத்தினை உரைத்தவனோ கதிரவனாய் ஒளிர்பவனோ கருஇரவில் கரைந்தவனோ கருணைக் கண்களோ கரம்மீது வாட்களோ கன்னியின் வடிவமோ கட்டிளங் காளையோ கருப்பு வண்ணமோ களைமிகு நல்லுருவமோ கங்கைத் தலையனோ கயலவள் மறுபாதியோ கன்னிகள் கேள்வனோ கற்பினுக் கரசனோ கனகத்தின் அதிபனோ கந்தலுடை யாசகனோ கள்வனின் காதலனோ களம்கண்ட காவலனோ கதைபல கொண்டவனோ கதைக்கவொண்ணா நிஜமவனோ கடவுள் ஒன்றுண்டோ கண்டவர் எவருளரோ கண்டிலாப் பொருளன்றோ கருத்தினில் […]
வ(ச)ந்த காலம் மாற்றம்
நேற்றைய மாலைப் பொழுதில்
என் வீட்டு முற்றத்தில் இரு சிறு குருவி
துளிர்விட்ட பசும்புல்லில் தீனி பொறுக்கி
குதூகலித்துக் கலவிகொண்டு மகிழ்ந்திருந்தன. .
வசந்தகாலத்தின் வரவுக்கண்டு
மரங்கள் குருத்தெறிந்து
மொட்டுவிட்டுக் கருத்தரிக்க
கொட்டும் மழையில்
தலை கழுவிச் சீவி முடித்துச் சிங்காரித்து
அம்மணமாக நின்றன.
அன்னையர் தினக் கவிதை
கற்பனையாய் நிலநிறை கடவுளர் பலரிருக்க
கனிந்துருகி நிதந்தோறும் கரங்கூப்பி நான்வணங்க
கண்விழித்து நான்கண்ட முதற் கடவுள்
கலையாமல் நிலைகொண்டாள் முழுதாய் என்னுள்!
கட்டிலாகக் கல்லறையும் உணவாக எலிக்கறியும்
வந்தோரை வாழவைத்தாய், பழையதையும் பகிர்ந்துண்டாய்
வான்முட்ட சின்னங்கள் வனப்பாக நீயே செய்தாய்
விண்மீன்கள் தோற்கடித்துக் காவியங்கள் பல படைத்தாய்
வீரத்தின் விளைநிலமே, பலபோரை கண்டுவிட்டாய்
உன் படைப்பில் நீ மெச்சும் ஒன்றேதென்றால்
ஊனுருக்கி நீ செய்த உன் குழந்தைதானே என்பாய்
யாக்கை நிலையாமை
பகலவன் எழுந்தாட
பனித்துளி பறந்தது
புள்ளினம் இசைபாட
புதுதினம் உதித்தது
கடிகாரம் வசைபாட
கனவு கலைந்தது
கலாம்
அறிஞரை மதிக்கலாம்; அன்னையைத் துதிக்கலாம்! அறிவியல் பெருக்கலாம்; அழகுகள் சமைக்கலாம்! அறநெறி உரைக்கலாம்; அல்லவை தவிர்க்கலாம்! அறிவாட்சி சிறக்கலாம்; அசதியைத் துறக்கலாம்! அறிவை வளர்க்கலாம்; அழிவைத் தடுக்கலாம்! அன்பைப் போதிக்கலாம்; அநீதியை எதிர்க்கலாம்! அணுவைப் படிக்கலாம்; அகிம்சை பழக்கலாம்! அக்னியை ஏற்கலாம்; அவனியை அணைக்கலாம்! கற்பதை நினைக்கலாம்; கசப்பதைத் தொலைக்கலாம்! கருணையில் திளைக்கலாம்; கர்வத்தை மறக்கலாம் களைப்பினைத் துடைக்கலாம்; களிப்புடன் சிரிக்கலாம்! கண்ணியம் வரிக்கலாம்; கடுந்தவம் தரிக்கலாம்! கழனியில் உழைக்கலாம் ; கணினியில் கதைக்கலாம்! கன்னித்தமிழ் கற்கலாம் […]
வாங்க…. ஃப்ரீயா பேசலாம் …
நான் பேசப்போற டாபிக்கை வெச்சு எனுக்கு ரொம்ப வயசாயிட்ச்சினு நெனுச்சுக்காதீங்கோ … யங் ஏஜூ தான் எனுக்கு.. இர்ந்தாலும் அப்பப்போ எதுனா ஃபீல் ஆவும் … போன வாரம் இப்டித்தான் ஃபீலாயிட்டேன்.. என் டாட்டரு, அதாம்ப்பா பொட்ட புள்ள, ரிபோர்ட் கார்டை எடுத்தாந்து நீட்டுச்சி … நம்பள மாரி இல்லாம ஏதோ நல்லா படிக்கும்னு வெச்சிக்கோ .. சரி நல்ல மார்க் வாங்கியாந்துக்கிறாளே எதுனா கிஃப்ட் குடுப்போம்னு ‘உனுக்கு என்னா ஓனும் கண்ணு?’ன்னு கேட்டேம்பா. டக்குனு ‘செல்ஃபோனு’ […]






