இலக்கியம்
இருவேறு படங்கள், ஒரே தாக்கம்…
மனித இனத்தில், அன்றாட வாழ்வில், தான் உண்டு தன் சொந்த வாழ்க்கையுண்டு என்று வாழ்பவர்கள் அதிகம். இவர்களின் கவனம் அசாதாரணச் சூழ்நிலைகளைச் சற்றேனும் உற்று நோக்குவதில் சிறிதளவேனும் திளைப்பதில்லை. இவர்களின் கவனத்தையும் கவர்ந்திழுக்கும் சக்தி சில படங்களுக்கும் நிகழ்வுகளுக்கும் உண்டு. அவற்றில் இரண்டு படங்களையும் நிகழ்வுகளையும் ஒப்பு நோக்குவதுதான் இந்தச் சிறிய கட்டுரை. வியட்நாம் போரின் உச்சத்தில் 1972ஆம் ஆண்டு புகைப்பட நிபுணர் நிக் உட் அவர்கள் எடுத்த இந்தக் கருப்பு/வெள்ளை படம் ஒரு பெரும் தாக்கத்தை […]
குழந்தை மனசு
விமானம் கிளம்புவதற்கு இன்னும் அரைமணி நேரமாவது ஆகும் என்பதால் அதுவரை இருக்கையில் இருக்க மனமில்லாமல் எழுந்து என் கைப் பையில் இருந்த புத்தகங்களில் ஒன்றை எடுத்துப் படிக்கத் தயாரானபோது என் மகள் குறுக்கிட்டாள். “அப்பா இன்னும் எவ்வளவு நேரத்திலை நாங்கள் யாழ்ப்பாணத்துக்குப் போகலாம்” “இன்னும் ரெண்டு நாள் ஆகுமட செல்லம்…” “ரெண்டு நாளோ… அப்ப இண்டைக்கு திங்கள்… செவ்வாய்… புதன் கிழமை நாங்கள் யாழ்ப்பாணத்திலை நிப்போம் என்னப்பா…” நான் ஆம் என்பதற்குப் பதிலாகத் தலையை ஆட்டினேன். அவளும் […]
சொர்க்கத்திலே முடிவானது
அதிகப் பரபரப்பில்லாமல் இருந்தது நெடுஞ்சாலை. துலூத் – 94 மைல்கள் எனக் காட்டியது வண்டியிலிருந்த ஜி.பி.எஸ். அமைதியாக வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான் ரத்தன். முன்னால் செல்லும் வண்டி மெதுவாகச் செல்வது போல தோன்றியது. பொதுவாகச் சாலையில் குறிப்பிட்ட வேகத்துக்கும் குறைவான வேகத்தில் செல்வோர் இடத்தடத்தில் சென்றால் அவர்கள் மீது அவனுக்கு கடுங்கோபம் வரும். அதுவும் அவர்கள் கையில் கைப்பேசியோ, உதட்டுச்சாயக் குச்சியோ இருந்துவிட்டால் அவர்களைக் கடக்கையில் கண்களில் கோபத்தைக் காட்டிச் செல்வான். இன்று அப்படியில்லாமல் வலத்தடத்துக்கு மாறி […]
அடைந்ததென்ன? இழந்ததென்ன?
இலவசம் – அடைந்ததென்ன? இழந்ததென்ன?
சந்தையிலே விற்பதற்கு – மண்ணெண்ணை இலவசம்
சாதிச்சலுகை பெயரில் – வேலையுமே இலவசம்
மின்னிணைப்பு இல்லை – தொலைக்காட்சி இலவசம்
மீளாத்தடங்கல் என்றும் – மின்சாரம் இலவசம்
உன்னுரிமை வாக்களிக்க – ஐநூறு இலவசம்
ஊன்வளர்க்க அரிசிகூட – மலிவுவிலை இலவசம்
மனசாட்சி
விடிந்தும் விடிந்திராத காலைப் பொழுது.. அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த கணேஷ் தன் தலையில் இடி விழுந்தது போன்றதொரு பெரும் சத்தமொன்றை உணர்ந்தான். மனிதன் தூங்கிக் கொண்டிருக்கும்போதும், அவனுக்குள் ஏதோவொன்று தூங்காமல் விழித்துக் கொண்டு நடப்பவற்றைக் கவனித்துக் கொண்டிருக்குமாம், அதனால்தான் பத்துக் குழந்தைகள் அடுத்தடுத்துப் படுத்து தூங்கும் கல்யாண மண்டப வராந்தாவில் கோபியின் அம்மா வந்து “கோபி, கோபி” என்றழைக்கும்போது கோபி மட்டும் எழுகிறான், மற்ற ஒன்பது சிறுவர்களும் நிம்மதியாகத் தூக்கத்தைத் தொடர்கின்றனர். உறங்கும் கோபியினுள்ளே உறங்காமல் விழித்துக் […]
மினசோட்டா
கனடாவின் எல்லைக் கோடாய்
அதன் உறவுப் பாலமாய்
கனடாவுடன் இணைத்தும் பிரித்தும்
அழகான அமைவிடத்தில் மினசோட்டா
இது கவிதைக்கான வெறும்
கற்பனைச் சிதறல்கள் அல்ல
உண்மை ஊற்றுக்களின் பிரவாகம்
சிட்டுக்குருவி
நான் அமெரிக்காவிற்கு வந்த புதிதில் வீட்டு நினைவுகளில் சிக்குண்டு பெரிதும் கலங்கியதுண்டு. உறவினர், நண்பர் இவர்களை விட்டு விட்டு வந்து இங்கே என்ன சாதிக்கப் போகிறோம் எனத் தோன்றியது உண்டு. நண்பர், உறவினர் மட்டுமில்லை, எனது வாழ்க்கை முறையையே தொலைத்து விட்டதாக நினைத்தேன். எங்கள் வீட்டுக்கு பெடல் இல்லாத சைக்கிளை ஓட்டி வந்து பேப்பர் போடும் பெரியவர், ‘எளன்’ என்று கூவி இளநீர் விற்பவர், காலை ஆறரை மணி சமீபத்தில் சாவியை மூன்று முறை கதவில் தட்டி […]
இரையைத் தேடி
விமானம் சிகாகோ ஓஹேர் எர்ப்போர்ட்டில் இறங்கிய போது மணி சரியாக 6.20 ஆகியிருந்தது. சிறிய, டி.சி. 9 வகை விமானம் என்பதால் பயணிகள் அதிகமில்லை. கிட்டத்தட்ட பத்து நிமிடங்களில் விமானத்தை விட்டு வெளியில் வந்தான் ராகவ். துபாய்க்குச் செல்லும் விமானம் இரவு பத்து பத்துக்குத் தான். நிறைய நேரமிருக்கிறது. லேசாகப் பசிப்பது போல் உணர்ந்தான் ராகவ். மினியாபொலிஸில் விமானத்தைப் பிடிக்க ஓடி வர வேண்டியதாகிவிட்டது. சாப்பிடக் கூட நேரமில்லை. அவசர அவசரமாகத் துணிகளை அள்ளிப் போட்டுக் கொண்டு […]
பகுத்தறிவு
பகலிரவு கண்விழித்துப் பலகாலம் தவமிருந்தேன்
சகம்முழுதும் காத்தருளும் சர்வேசன் வரவுநோக்கி!!
தகதகக்கும் பிரகாசமாய்த் தன்னிகரிலாக் கருணையுடன்
அகமுவந்து முன்னுதித்து அன்புடனே வினவிட்டான்
பெண்
விடியலின் கதிராய், வெள்ளியின் குளிராய்
விளக்கின் ஒளியாய், வெண்சங்கின் ஒலியாய்
விருட்சத்தின் விதையாய் வேள்வியின் பயனாய்
வினையிருக்கும் அவளிடத்தில் வீச்சிருக்கும்!






