இலக்கியம்
தொழிலாளர் தினம் – கவிதை
இலக்குகளை நோக்கிய பயணத்தில்
அடி சறுக்கி மூச்சு முட்டி வாய் மண்தொட்டு
உதடு சிதறுண்டு செங்குருதி சிந்திடினும்
இலக்கே கொள்கையென்று நேர்வழியில் வீறுகொண்டு
தொழில் முடித்து காத்திருப்போம் தொழிலாளர் நாங்கள்
மழை – வெயில் – மூடு பனி தாண்டி வரிசைகள் நீண்டாலும்
காத்திருத்தல் ஒன்றே நேரிய வழியென்று காத்திருப்போம் கூலிக்காய்
‘செய்யாதே’ என்றால் செய்யாமல் இருப்பதற்கும்
‘செய்’ என்றால் செய்வதற்கும் பழக்கப்படுத்தப்பட்டு
பலமாய் சபிக்கப்பட்ட பூமிப் பந்தில் நாதியற்று நாட்கள் கழிப்போம்
துரதிர்ஷ்டவசமாக எம் வாழ்வை உம்மிடம் ஒப்படைத்து
உமக்கான பயணத்தில் எம்மை நாம் தொலைத்து
அன்பின் அகிலம்
அன்றலர்ந்த தாமரையாய் அந்தமுகம் விலகவில்லை…..
அன்பிற்கு நிரூபணமாய் அன்னையன்றி வேறொன்றில்லை !!
அளவில்லாப் பெருவலியும் அவளுக்குப் பொருட்டில்லை
அவதிகளைத் தாங்கியன்றோ அருமையுடன் ஈன்றாள்பிள்ளை !!
அவள்பட்ட துயரமெல்லாம் அன்றோடு நிற்கவில்லை
அக்கறையாய் வளர்த்தெடுக்க அவள்துயர் எல்லையில்லை
அரும்பாகத் தானுதித்து அரசாளும் யோகமில்லை
அதனாலே கிள்ளையதை அவளென்றும் விலக்கவில்லை !
புத்தாண்டு பூத்தது
ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி, 1990 ஆம் வருடம்….. தமிழ் வருடப் பிறப்பு என்பதினால் பூஜைக்குத் தயாராகிக் கொண்டிருந்தது வீடு. .…… வழக்கம் போல அன்று காலையும் வீட்டின் முன் ஹாலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த கணேஷின் முகத்தில் காலைச் சூரியன் தன் கிரணங்களை வீசி, விடிந்துவிட்டது என்பதை நளினமாய் உணர்த்தினான். அடுத்த மாதம் வர இருக்கும் பொறியியற் கல்வியின் நான்காம் செமஸ்டர் தேர்வுகளுக்குத் தயார் செய்வதற்காக, இரவு நெடுநேரம் விழித்திருந்ததால் காலையில் எழுவதற்குத் தாமதமானது. […]
உங்கள் மின்னிணைய வரலாறு ஏலத்தில்
மின் வலயமானது அதன் ஆரம்பத்தில் சிற்சில புத்திஜீவிகள், கணனித் தொழினுட்பவியலாளர்கள் குழுக்கள் தமது அறிவியல் தேவைக்காக அமைக்கப்பட்டது. மின் வலயம் திறந்த மனப்பாங்குடன் கருத்துப் பரிமாறலையும் ஒருவர் தன்னிச்சையான கருத்துக்களைப் பரிமாறும் இடமாகவும் கருதப்பட்டது. இந்தப் புரிந்துணர்வு பெருமளவில் தற்போது மாறிவிட்டது. இன்று நுகர்வோர் அந்தரங்கங்களைப் பகிரங்கமாக்குதல் ஆதாயமான விடயம். இந்த வர்த்தகக் குறிக்கோளை நோக்கி நுகர்வோரைப் பாதுகாக்கும் அமெரிக்கச் சட்டங்கள் பலவீனமாக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய மின் இணையம் ஆக்கப்பூர்வமான படைப்பாளிகளுக்கு இடமல்ல; வெறும் நுகர்வோர் மையங்களே. […]
பேர்ள் ஹார்பர்
ஒரு புறம் போருக்கான ஆயத்தங்கள் ரகசியமாக நடந்து கொண்டிருக்க, மறுபுறம் சமாதானத்திற்கான பேச்சுவார்த்தை முயற்சிகளும் நடைபெற்று வந்தன. ஜப்பானியப் பிரதமர் ஃபியூமரோ கோனோ , அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்டுக்கு, பேச்சு வார்த்தைக்கான அழைப்பினை விடுத்தார். பேச்சு வார்த்தை கூட்ட நேரங்களை வீணடிக்க வேண்டாம் என்று நினைத்த அதிபர் ரூஸ்வெல்ட், பேச்சு வார்த்தைக்கான நிரல்களையும், முடிவுகளையும் ஓரளவுக்கு உறுதி செய்து கொண்ட பின்னர் நேரில் சந்திப்பது உசிதமாக இருக்கும் என்று வலியுறுத்தினார். ஏற்கனவே ராணுவப் பிடியிலிருந்த பிரதமர் கோனோ, […]
உரிமைகள் மசோதா-2
முதல் சட்டத் திருத்தம் முதல் திருத்த வரைவிலக்கணத்தின் தமிழாக்கம் (உரிமைகள் மசோதா – 1) அமெரிக்க அரசு, எந்தவொரு மத அமைப்பையும், அவற்றைக் கடைபிடிப்பதையும் ஏற்கவோ, மறுக்கவோ எந்தச் சட்டமும் இயற்றாது. இது பேச்சுச் சுதந்திரம், பதிப்பகச் சுதந்திரம், அமைதியாக இயங்கக் கூடும் இனக்குழுக்களின் சுதந்திரம் மற்றும் தங்களது குறைகளை அரசிடம் முறையிடும் சுதந்திரம் ஆகியவற்றுக்கும் பொருந்தும். மேலேயுள்ளவற்றில் பேச்சுச் சுதந்திரம் (freedom of speech) என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் அது கருத்துச் சுதந்திரம் என்ற பொருளிலேயே கையாளப்படுகிறது. […]
ஃபேஸ்புக் புர்ச்சியாளர்கள்
அதென்ன புர்ச்சி? எந்நேரமும் களத்தில் நின்று போராடினால், அது புரட்சி. டைம்பாஸுக்காக, இணையத்தில் உட்கார்ந்து அன்றைய தினத்தின் ஹாட் டாபிக்கிற்குச் சவுண்ட் விட்டுக் கொண்டிருந்தால், அது புர்ச்சி. 🙂 சமீப ஆண்டுகளில், இத்தகைய புர்ச்சியாளர்களின் புகலிடமாக, ஃபேஸ்புக் இருந்து வருகிறது. சமயங்களில், நம்ம சுற்று வட்டாரத்திலேயே இவ்வளவு புர்ச்சியாளர்களா என்று மலைக்க வேண்டியிருக்கிறது. இவர்களை அடையாளம் காண்பது எப்படி? கண்டிப்பாக, டெய்லி போஸ்ட் போடுவார்கள். போடாட்டி? ஆபீஸ்ல புழிஞ்சு எடுத்துட்டு இருக்காங்க’ன்னு புரிஞ்சுக்கோங்க!! சொந்தக் கதை, வீட்டு […]
ஹைக்கூ கவிதைகள்
முதல் காதல் …! முகப் பொலிவோடு நான் முதலாய் அவன் …! முகமறியாக் காதலில் முழுவதுமாய் அவன் …! முப்பொழுதும் அவன் நினைவால் முழுநிலவாய் நான் …! முதல் காதல் முகவுரை ஆகுமா..? முடிவுரை ஆகுமா …?! மூர்ச்சையாகிறேன் நானே…!! **** உலகமயமாக்கல் ! முதுகெலும்பை முறித்து முடக்கியது விவசாயம் உலகமயமாக்கல் …! **** கருக்கலைப்பு கல்யாண நாளன்று கருக் கலைப்பு செய்தாள் தன் காதலை பெற்றோருக்காக…! **** மது – மாது …..! […]
ராஜா – SPB – என்னதான் பிரச்சினை?
இந்தியச் சமூக ஊடகங்களின் இப்போதைய ஹாட் டாபிக் இளையராஜா மற்றும் SPB என்ற இரு மிகப் பெரிய ஆளுமைகள் பற்றிதான். பரபரப்புக்கு காரணம் பதிப்புரிமையும்(Copyright) அதைப் பற்றி எந்த விதமான அடிப்படை புரிதலும் அற்ற வீண் விவாதங்களும் என்று சொன்னாலும் சாலப் பொருந்தும். இந்தப் பதிவின் நோக்கம் இசை படைப்பாளிகள் மற்றும் தயாரிப்பாளர்களின் அறிவுசார் சொத்து (Intellectual Property) குறித்த நடைமுறை என்ன என்பதை அலசுவதே! அதற்கு முன்பு ஒரு சிறிய பிளாஷ்பேக்…! “ரெடி! ஒன், டூ, […]






