\n"; } ?>
Top Ad
banner ad

இலக்கியம்

வபஷா தேசிய கழுகு மையம்

வபஷா தேசிய கழுகு மையம்

அமெரிக்காவின் தேசியச் சின்னமாக கழுகு இருப்பது, நாம் அனைவரும் அறிந்ததே. என்ன விதமான ஒரு டெரர் பறவையைத் தேசியச் சின்னமாக வைத்து இருக்கிறார்கள் என்று எண்ணுவது உண்டு. ஒருவேளை, அமெரிக்காவில் அதிகமாக கழுகு இருக்கிறதோ என்னமோ என்று நினைத்தால் அதுவும் இல்லை. சமீபகாலம் வரை இது அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் தான் இருந்தது. இப்போது 2007இல் தான், கழுகுகளின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கும் காரணத்தால், அந்தப் பட்டியலில் இருந்து கழுகு நீக்கப்பட்டுள்ளது. எண்ணிக்கை பார்த்துச் சின்னம் அமைப்பது […]

Continue Reading »

தமிழ் – சிங்கள வருடப் பிறப்பு

தமிழ் – சிங்கள வருடப் பிறப்பு

சூரியன் மேட இராசிக்குள் நுழைவது சித்திரை மாதப் பிறப்பு எனப்படும். தமிழில் சித்திரை மாதம் 31 நாட்களைக் கொண்டது. ஆங்கில நாட்காட்டியில் வரும் “ஏப்ரல்” மாதம் 14 ஆம் நாள் முதல் “மே” மாதம் 14 ஆம் நாள் வரை தமிழில் “சித்திரை” மாதமாகும். சித்திரை முதல் மாதம் என்பதால் இதுவே புதிய ஆண்டின் தொடக்கமும் ஆகும் என்ற நம்பிக்கை காலங்காலமாக எம்மவரிடம் நிலவி வருவதனால் சித்திரை மாதம் முதல் நாளைத் தமிழர்கள் அனைவரும் தமிழ் வருடப் […]

Continue Reading »

தப்புத் தாளங்கள்

Filed in இலக்கியம், கதை by on March 31, 2017 0 Comments
தப்புத் தாளங்கள்

”அம்மா, சுரேஷ் ரொம்ப நல்லவர்மா…. நன்னா பழகுவார், மரியாதையா நடந்துப்பார், எல்லாரண்டயும் பாசத்தோட இருப்பார்… என்ன, ஒரு நிரந்தரமான வேலை கெடையாது, சம்பளம் கெடையாது, மத்தபடி ஒரு குறையுமில்ல… நம்ம ஜாதி இல்ல… அதுனால என்ன?”….  சாருலதா தன் அம்மாவிடம் தனது காதலனைக் குறித்து வர்ணித்துக் கொண்டிருந்தாள். “நீ சொல்றது நேக்கு நன்னாப் புரியர்துடி… வேலை பாக்காட்டா என்ன, பொம்மணாட்டிய வச்சு நன்னா குடும்பம் நடத்தினாக்காப் போறாதா? …. ஜாதி கீதியெல்லாம் இந்தக் காலத்துல யாரு பாக்குறா… […]

Continue Reading »

பேர்ள் ஹார்பர்

பேர்ள் ஹார்பர்

ஒரு புறம் போருக்கான ஆயத்தங்கள் ரகசியமாக நடந்து கொண்டிருக்க, மறுபுறம் சமாதானத்திற்கான பேச்சுவார்த்தை முயற்சிகளும் நடைபெற்று வந்தன. ஜப்பானியப் பிரதமர் ஃபியூமரோ கோனோ , அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்டுக்கு, பேச்சு வார்த்தைக்கான அழைப்பினை விடுத்தார். பேச்சு வார்த்தை கூட்ட நேரங்களை வீணடிக்க வேண்டாம் என்று நினைத்த அதிபர் ரூஸ்வெல்ட், பேச்சு வார்த்தைக்கான நிரல்களையும், முடிவுகளையும் ஓரளவுக்கு உறுதி செய்து கொண்ட பின்னர் நேரில் சந்திப்பது உசிதமாக இருக்கும் என்று வலியுறுத்தினார். ஏற்கனவே ராணுவப் பிடியிலிருந்த பிரதமர் கோனோ, […]

Continue Reading »

உரிமைகள் மசோதா-2

உரிமைகள் மசோதா-2

முதல் சட்டத் திருத்தம் முதல் திருத்த வரைவிலக்கணத்தின்  தமிழாக்கம் (உரிமைகள் மசோதா – 1) அமெரிக்க அரசு, எந்தவொரு மத அமைப்பையும், அவற்றைக் கடைபிடிப்பதையும் ஏற்கவோ, மறுக்கவோ எந்தச் சட்டமும் இயற்றாது. இது பேச்சுச் சுதந்திரம், பதிப்பகச் சுதந்திரம், அமைதியாக இயங்கக் கூடும் இனக்குழுக்களின் சுதந்திரம் மற்றும் தங்களது குறைகளை அரசிடம் முறையிடும் சுதந்திரம் ஆகியவற்றுக்கும் பொருந்தும். மேலேயுள்ளவற்றில் பேச்சுச் சுதந்திரம் (freedom of speech) என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் அது கருத்துச் சுதந்திரம் என்ற பொருளிலேயே கையாளப்படுகிறது. […]

Continue Reading »

ஃபேஸ்புக் புர்ச்சியாளர்கள்

ஃபேஸ்புக் புர்ச்சியாளர்கள்

அதென்ன புர்ச்சி? எந்நேரமும் களத்தில் நின்று போராடினால், அது புரட்சி. டைம்பாஸுக்காக, இணையத்தில் உட்கார்ந்து அன்றைய தினத்தின் ஹாட் டாபிக்கிற்குச் சவுண்ட் விட்டுக் கொண்டிருந்தால், அது புர்ச்சி. 🙂 சமீப ஆண்டுகளில், இத்தகைய புர்ச்சியாளர்களின் புகலிடமாக, ஃபேஸ்புக் இருந்து வருகிறது. சமயங்களில், நம்ம சுற்று வட்டாரத்திலேயே இவ்வளவு புர்ச்சியாளர்களா என்று மலைக்க வேண்டியிருக்கிறது. இவர்களை அடையாளம் காண்பது எப்படி? கண்டிப்பாக, டெய்லி போஸ்ட் போடுவார்கள். போடாட்டி? ஆபீஸ்ல புழிஞ்சு எடுத்துட்டு இருக்காங்க’ன்னு புரிஞ்சுக்கோங்க!! சொந்தக் கதை, வீட்டு […]

Continue Reading »

ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ கவிதைகள்

    முதல் காதல் …! முகப் பொலிவோடு நான் முதலாய் அவன் …! முகமறியாக் காதலில் முழுவதுமாய் அவன் …! முப்பொழுதும் அவன் நினைவால் முழுநிலவாய் நான் …! முதல் காதல் முகவுரை ஆகுமா..? முடிவுரை ஆகுமா …?! மூர்ச்சையாகிறேன் நானே…!! **** உலகமயமாக்கல் ! முதுகெலும்பை முறித்து முடக்கியது விவசாயம் உலகமயமாக்கல் …! **** கருக்கலைப்பு கல்யாண நாளன்று கருக் கலைப்பு செய்தாள் தன் காதலை பெற்றோருக்காக…! **** மது – மாது …..! […]

Continue Reading »

சிதம்பரம் – பாகம் 3

Filed in இலக்கியம், கதை by on March 31, 2017 0 Comments
சிதம்பரம் – பாகம் 3

(பாகம் 2) பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் அஞ்ஞானத்தின் வடிவாகத் திகழ்ந்த அரக்கன் அபஸ்மரா. அஞ்ஞானத்தினால் பல தீமைகள் செய்தான். அவனை அழிக்கச் சிவபெருமான் நடராஜராக அவதரித்தார். அவர் அபஸ்மராவை வீழ்த்தி அவன் மேல் நடனம் புரிந்தார். இந்த நடனத்தை ஆனந்ததாண்டவம் என்பார்கள். அறியாமை எனும் திரை அகன்றால் நம்முள் உள்ள ஆனந்தம் தானாகக் காணப்படும். அபஸ்மரா இறக்கும் நேரம் வந்துவிட்டது. எமதர்மராஜன் காளை மேல் அமர்ந்து அங்கே வந்தார். அபஸ்மரா ஆத்மாவைக்  கொண்டு செல்ல தனது […]

Continue Reading »

வசந்தத்தின் தொடக்கம் (Spring Equinox)

வசந்தத்தின் தொடக்கம் (Spring Equinox)

இந்த ஆண்டு 2017 இல் மார்ச் 20ஆம் தேதியன்று வசந்த காலத்தின் தொடக்கமான சமப் பகலிரவு தினம் (Equinox) நிகழவிருக்கிறது. Equinox என்பது சமமான இரவு என்ற பொருளளிக்கும் லத்தீன் வார்த்தையில் இருந்து வந்த சொல். ஒரு வருடத்தின் இரு நாட்களில் மட்டுமே இரவும் பகலும் சமமான நேரம் கொண்டவையாக இருக்கும். ஒன்று, வசந்தச் சமப் பகலிரவு நாள் (Spring Equinox). மற்றொன்று, இலையுதிர் சமப் பகலிரவு நாள் (Autumn Equinox). ஏன் அனைத்து நாட்களிலும் இரவும், […]

Continue Reading »

சர்வதேச மகளிர் தினம்

சர்வதேச மகளிர் தினம்

மிகச் சமீபத்தில், சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடிவிட்டோம். கண்ணைக் கவரும் வாழ்த்தட்டைகளைப் பகிர்ந்து கொண்டாயிற்று; நமக்குத் தெரிந்த பெண்களுக்கும், ஊடகப் பொதுவெளிகளிலும் மனதை வருடும் வாசகங்களுடன் ‘மகளிர் தின வாழ்த்துகளை’ப் பதிவு செய்தாகிவிட்டது. நான் பெண்களை மதிப்பவன் என்று சட்டையில் அடையாள வில்லை குத்திக் கொண்டு அடுத்த வருட மார்ச் மாதம் எட்டாம் தேதி வரை மற்ற உலக வழக்குகளில் கவனம் செலுத்தலாம். ‘நள்ளிரவில் ஒரு பெண் நகைகள் அணிந்து பாதுகாப்பாக சென்று வர முடிகிறது என்றால் […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad