இலக்கியம்
சிட்டுக்குருவி
நான் அமெரிக்காவிற்கு வந்த புதிதில் வீட்டு நினைவுகளில் சிக்குண்டு பெரிதும் கலங்கியதுண்டு. உறவினர், நண்பர் இவர்களை விட்டு விட்டு வந்து இங்கே என்ன சாதிக்கப் போகிறோம் எனத் தோன்றியது உண்டு. நண்பர், உறவினர் மட்டுமில்லை, எனது வாழ்க்கை முறையையே தொலைத்து விட்டதாக நினைத்தேன். எங்கள் வீட்டுக்கு பெடல் இல்லாத சைக்கிளை ஓட்டி வந்து பேப்பர் போடும் பெரியவர், ‘எளன்’ என்று கூவி இளநீர் விற்பவர், காலை ஆறரை மணி சமீபத்தில் சாவியை மூன்று முறை கதவில் தட்டி […]
இரையைத் தேடி
விமானம் சிகாகோ ஓஹேர் எர்ப்போர்ட்டில் இறங்கிய போது மணி சரியாக 6.20 ஆகியிருந்தது. சிறிய, டி.சி. 9 வகை விமானம் என்பதால் பயணிகள் அதிகமில்லை. கிட்டத்தட்ட பத்து நிமிடங்களில் விமானத்தை விட்டு வெளியில் வந்தான் ராகவ். துபாய்க்குச் செல்லும் விமானம் இரவு பத்து பத்துக்குத் தான். நிறைய நேரமிருக்கிறது. லேசாகப் பசிப்பது போல் உணர்ந்தான் ராகவ். மினியாபொலிஸில் விமானத்தைப் பிடிக்க ஓடி வர வேண்டியதாகிவிட்டது. சாப்பிடக் கூட நேரமில்லை. அவசர அவசரமாகத் துணிகளை அள்ளிப் போட்டுக் கொண்டு […]
பகுத்தறிவு
பகலிரவு கண்விழித்துப் பலகாலம் தவமிருந்தேன்
சகம்முழுதும் காத்தருளும் சர்வேசன் வரவுநோக்கி!!
தகதகக்கும் பிரகாசமாய்த் தன்னிகரிலாக் கருணையுடன்
அகமுவந்து முன்னுதித்து அன்புடனே வினவிட்டான்
பெண்
விடியலின் கதிராய், வெள்ளியின் குளிராய்
விளக்கின் ஒளியாய், வெண்சங்கின் ஒலியாய்
விருட்சத்தின் விதையாய் வேள்வியின் பயனாய்
வினையிருக்கும் அவளிடத்தில் வீச்சிருக்கும்!
பனிக்கோலம்
சீவ நதி வற்றி போகும் – வறட்சி இல்லை
பட்ட மரம் மலர் சொரியும் – மாயம் இல்லை
துளையிட்டு மீன் பிடிப்போம் – பசியும் இல்லை
ஒல்லியனும் குண்டாவான் – கொழுப்பும் இல்லை
புதுமை
அது ஒரு மார்கழி மாத அதிகாலை நேரம். சூரியன் முழுவதும் எழுந்திராத துணிவில், மூடுபனி படர்ந்து கடல் அலையையும் அதனையடுத்த மணற்பரப்பையும், தலைவர்களின் சிலைகளையும் மூடி ஆட்கொண்டிருந்த காலம். மூடுபனியை ஊடுருவிக் காணும் அழகை ரசித்த இளஞ்சூரியன் அந்த அழகு கெடாமல் சிறிது நேரம் இருக்கட்டுமென தனது சூடான கிரணங்களைச் சுருட்டி மறைத்தது போல ஒளி குன்றியிருந்தான்…… அவன் ஒளி குன்றியிருப்பது தலைவர்களின் சிலை மீது பறவைகள் கழித்த எச்சத்தை வெளிச்சம் போட்டுக் காட்டாமலிருப்பதற்காகக் கூட இருக்கலாம்… […]
உறவுகள்
அது ஒரு சனிக்கிழமை. நவம்பர் மாத மினசோட்டாக் காற்று அந்த இளங்காலையைத் தொடர்ந்து குளிரூட்டிக் கொண்டிருந்தது. சற்றுத் தூக்கம் கலைந்தும் கலையாத ஒரு மோன நிலை. அடுக்களையில் மாலினி வெண்பொங்கலுக்குத் தாளித்துக் கொண்டிருந்த வாசனை எழுந்திருக்கச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்தது. இருந்தாலும் அந்தச் சனிக்கிழமை காலையை வீணடிக்க மனமின்றி, ரஜாயை நன்றாக இழுத்துப் போர்த்தித் தாளிக்கும் வாசம் மூக்கைத் தாக்காதவாறு திரும்பிப் படுத்தேன். ‘ஏங்க.. எழுந்திருங்க .. ’, மாலினியின் குரல் கேட்டது. ‘கொஞ்ச […]
கனவு மெய்ப்பட வேண்டும்
உழுவோர் ஊணுண்டு செருக்குற
நிலமிது வளம்பெற வேண்டும்!
உழைப்போர் உரிமையுடன் ஓய்வுற
நிலவது வசப்பட வேண்டும்!
தவிப்போர் தாகம் தீர்த்திட
தடையறு தண்ணீர் வேண்டும்!
அணைப்போர் அணைந்தே ஒழிந்திட
அடைமழை பொழிந்திட வேண்டும்!
கனவுகள் வாழ்கின்றன
தென்றல் காற்று முகத்தில் பட்டுத்தெறித்தது. கண்ணில் பட்ட இடமெங்கும் வெட்டவெளியாக வயல்வெளி பரவிக்கிடந்தது. தென்றலின் இனிய வாசத்தை அள்ளிச் சுவைத்தபடி மூக்கின் வழியே இழுத்து ஆசை தீர வாய்வழியே விட்டு வெளியனுப்பி அனுபவித்தேன். இதமான காலைப்பொழுதில் குளக்கட்டின் வழியே பொங்கிப் பிரவாகிக்கும் வயற்காற்று மருதமர இலைகளை அசைத்து நடனம் பயிற்றிக் கொண்டிருந்தது. நிறைமாதமாய் தளதளத்து முட்டிமோதியது குளத்து நீர். வான் பாய்ந்து அடங்கியதற்கான ஆதாரங்கள் அங்குமிங்குமாக உருக்குலைந்திருந்தன. மூன்றாண்டுகளின் பின் என் சொந்த மண்ணில்… நான் பிறந்து […]
ஒரு ஈழத் தாயின் இன்றைய தாலாட்டு
ஆராரோ ஆரிவரோ
ஆரடிச்சு நீயழுதாய்
அடித்தாரை சொல்லியளு
ஆக்கினைகள் பண்ணி வைப்பேன்
காத்து நுழையாத வீட்டினுள்ளே
காவாலி அவன் நுழைஞ்சான்
பாத்துப்பாத்து கட்டி வைச்ச
செல்வமெல்லாம் கொண்டுபோனான்






