இலக்கியம்
வாட்ஸ்அப் தசாப்தம்
வாட்ஸ்அப் மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிறது. யாஹு நிறுவனத்தில் இருந்து விலகிய ப்ரையனும், ஜேனும் 2019 ஜனவரியில் ஆப்பிள் ஆப்ஸ்டோரில் மெசெஜிங் செயலிக்கு இருக்கும் வெற்றிடத்தை நிரப்ப, வாட்ஸ்அப் கொண்டு வந்தனர். பத்தாண்டுகளுக்கு முன்னர் இதே போன்ற ஒரு ஃபிப்ரவரியில், சரியாகச் சொல்வதென்றால் 2009 பிப்ரவரி 24ஆம் தேதியன்று கலிஃபோர்னியாவில் வாட்ஸ்அப் நிறுவனம் அவர்களால் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் அவர்களது செயலி ரொம்பவே மக்கர் செய்தது. அடிக்கடி நின்று போகும். இருந்தாலும், இடைவிடாமல் முயன்று அதை […]
துணுக்குத் தொகுப்பு
வட, தென் அமெரிக்க நாடுகளில் மட்டுமே காணப்படக்கூடிய ‘ஹம்மிங் பேர்ட்’ எனும் ரீங்காரச் சிட்டு, பளபளக்கும், வண்ணச், சிறகுகளுடைய சிறிய பறவை. நொடிக்கு ஏறத்தாழ 80 முறை சிறகை அடிக்கும் திறனைப் பெற்ற இந்த அபூர்வப் பறவை, சிறகடிக்கும்பொழுது ஏற்படுத்தும் விர்ரென்ற ரீங்கார (ஹம்மிங்) ஒலியால் இப்பெயர் பெற்றது. இப்பறவையின் மெல்லிய கீச்சொலியைக் கேட்பது மிகவும் அரிது. ஒசனிச் சிட்டு, ஞிமிர்சிட்டு, முரல் சிட்டு என பல பெயர்களால் அழைக்கப்படும் இந்தப் பறவையின் அறிவியல் பெயர் ‘Trochilidae’. […]
லவ் பேர்ட்ஸ்
2019 ஆம் ஆண்டு, ஃபிப்ரவரி மாதம், பதினான்காம் தேதி… மாலை ஐந்து மணி……… பாக்மேன்ஸ் ஃப்ளவர் ஷாப்…. அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் வழியில், மனைவி லக்ஷ்மிக்கு வேலண்டைன்ஸ் டே ரோஸஸ் வாங்கிக் கொண்டு செல்லலாம் என்று திட்டம். பாக்மேன்ஸ் பார்க்கிங்க் லாட்டுக்குள் நுழைந்தால், எங்கெங்கு காணினும் கார்களடா எனும் வகையில், தேர்க் கூட்டம், திருவிழாக் கூட்டம். பார்க்கிங்க் லாட்டில், இரண்டு மூன்று முறை சுற்றி, ஒரு வழியாக கடையின் எண்ட்ரன்ஸிலிருந்து வெகு தொலைவில் ஒரு ஸ்பாட் கிடைத்து, […]
அழகிய ஐரோப்பா – 13
(அழகிய ஐரோப்பா – 11/அறை எண் 316) போகும் வழியில் ஹோட்டலில் கிடைத்த காலை உணவில் பிள்ளைகள் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. அதனால் போகும் வழியில் எங்காவது இந்தியன் ரெஸ்டாரெண்ட் இருக்கிறதா என என் மனைவி கூகிளில் தேடி ஒருவழியாகக் கண்டுபிடித்தாள். காலை 10:30க்கு எல்லாம் ரெஸ்டாரெண்ட் வாசலுக்குச் சென்றுவிட்டோம். ஆனால் ரெஸ்டாரெண்ட் திறக்க 11:00 ஆகுமென எழுதியிருந்தது. சுற்றியிருந்த கடைத் தொகுதிகளைப் பார்வையிட்ட பின் 10:50 அளவில் மீண்டும் உணவகத்தின் வாசலில் சென்று நின்றோம். வரவேற்க […]
ஆசையில் ஒரு கடிதம்
வேகமாக வண்டியைத் திருப்பி வீடு நோக்கிச் செலுத்தினாள் கயல். வண்டியின் கைச் சக்கரத்திற்கு பின் மணி ஆறு எனக் காட்டியது . சாலையில் கூட்ட நெரிசல். ஏதோ கட்டுமானப் பணி நடந்து கொண்டு இருப்பதால் இரு பகுதிகள் ஒன்றாக ஆக்கப்பட்டு இருந்தன. மெல்ல ஊர்ந்த வண்டிகளுக்குள் கயலும் தன் வண்டியைச் செலுத்தினாள். பாட்டு கேட்பதற்கு மனம் செல்லவில்லை. பரபரவென்ற வாழ்க்கை வெறுப்பாக இருந்தது. சின்னக் குருவி, பசுமையான தோட்டம், அம்மா கைகள், அழகிய மருதாணி, கருவேப்பிலைச் செடிகள், […]
அமெரிக்க படிப்புக் கடன் ஒரு மாயக் குமிழ்?
மாணவர் படிப்புக் கடன் மீளச் செலுத்துதல் அமெரிக்காவில் மிகவும் கவலைக்குரிய பொருளாதார நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இன்று வரை அமெரிக்கத் தற்போதைய மாணவர் ,பழைய மாணவர்கள் படிப்பிற்காக $1.5 டிரில்லியன் டொலர்களைக் கடனாகப் பெற்றுள்ளனர். இந்த மேல் படிப்பு நல்வாழ்வு என்ற அவாவினால் அவஸ்தைப் படுபவர் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. __ இன்று அமெரிக்கப் பொருளாதாரத்தில் பல விடயங்கள் பட்டப்பகலில் பலகாரக் கொறிப்புப் போன்று பேசியவாறு அரசியல்வாதிகள் தமது சுயநலத்திற்காக பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர். கடன் வழங்குவர்களுக்குச் சாதகமாக […]
அழகிய ஐரோப்பா – 12
(அழகிய ஐரோப்பா – 11/நடுச் சாமம்) அறை எண் 316 பல வழிகளில் முயன்று பார்த்து விட்டோம் ஆனால் என்ன நடந்தது என்பதைக் கண்டு பிடிக்க முடியவில்லை. “இனி என்ன செய்யலாம்… விடியும் வரை வேனுக்குள்ளேயே படுப்போம்” என்றபடி களைப்பு ஒரு பக்கம் நித்திரை ஒருபக்கம் என விரட்ட… சித்தப்பா அப்படியே சீட்டில் சாய்ந்தார்… “அப்ப இண்டைக்கு நாங்கள் ஹோட்டலுக்கு போக முடியாது…” என்றான் மகன் இடியுடன் மின்னல் வெட்டியது. சிறிது நேரத்தில் மழை சற்று தணிந்தது […]
எல்லைப் பாதுகாப்புச் சுவரும் மக்களின் எதிர்பார்ப்பும்
உலக வரலாற்றில், பல நாடுகள் எதிரி நாடுகளிடமிருந்து காத்துக் கொள்ள எல்லைச் சுவர்களை எழுப்பியிருக்கின்றன . சுமேரிய நாகரீகம் தொடங்கி, ஏதென்ஸ் சுவர், சீனப் பெருஞ்சுவர், பெர்லின் சுவர், இந்திய வங்கதேச எல்லைச் சுவர் எனப் பட்டியல் நீள்கிறது. காலச் சுழற்சியில் இவற்றில் சில சுவர்கள் பலமிழந்து விழுந்து அழிந்தன. நாடுகளிடையே அரசியல் நல்லிணக்கம் ஏற்பட்டதால் சில சுவர்கள் தகர்க்கப்பட்டன. கடந்த சில மாதங்களாக புதிய எல்லைச் சுவர் பற்றிய தர்க்கமொன்று முளைத்து, கொழுந்துவிட்டு எரிந்து கொண்டுள்ளது. […]
காவியக் காதல் – பகுதி 1
திடீரென்று படுக்கையிலிருந்து துள்ளி எழுந்தான் சித்தார்த். அவனால் விவரிக்க முடியாத கனவு அது. ஏ.சி. யின் முழுவதுமான குளிர்ச்சியிலும், அவன் முகம் முழுவதும் வியர்த்திருந்தது. அது கனவுதான் என்று உறுதிப் படுத்திக் கொள்வதற்கே அவனுக்குச் சில வினாடிகள் பிடித்தன. அந்தக் கும்மிருட்டில், தனது வலதுபுறம் இருந்த சிறிய அலார்ம் க்ளாக் மூன்று மணி, பதினேழு நிமிடம் எனக் காட்டி, சிறிதளவு ஒளி வீசிக் கொண்டிருந்தது. கண்களை இடுக்கி, இருட்டிற்குப் பழக்கப்படுத்திக் கொண்டு இடதுபுறம் திரும்பிப் பார்க்க, மனைவி […]






