\n"; } ?>
Top Ad
banner ad

இலக்கியம்

காணாத அழகு

Filed in இலக்கியம், கவிதை by on October 31, 2016 0 Comments
காணாத அழகு

அவளின் உதட்டுச் சிவப்பைக் கண்டிருந்தால்
இளங்கோ சிலப்பதிகாரம் எழுதாமல்
சிவப்பதிகாரம் எழுதியிருப்பாரோ ?

அவளின் குரலைக் கேட்டிருந்தால்
வள்ளுவன் குறளை எழுத மறந்து
குரலை ஆராய்ந்து எழுதியிருப்பாரோ?

Continue Reading »

மினசோட்டாவில் கார் ட்ரைவிங் லைசன்ஸ் வாங்குவது எப்படி?

Filed in இலக்கியம், கட்டுரை by on October 31, 2016 0 Comments
மினசோட்டாவில் கார் ட்ரைவிங் லைசன்ஸ் வாங்குவது எப்படி?

பொறுப்புத் துறப்பு – இது தனிப்பட்ட, சொந்த அனுபவம் சார்ந்து எழுதபட்டது. ஆளாளுக்கு வேறுபடலாம். ஓட்டுனர் உரிமம் வாங்க, கார் ஓட்ட தெரிந்தால் மட்டும் போதாது. அது ஓரளவுக்குச் சுலபம். வாகனத்துறை தேர்வாளரைத் திருப்திபடுத்துமளவுக்கு, கார் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். அது தான் சிரமம். தேர்வாளர் மனதிற்குள் வைத்திருக்கும் அளவுகோல்கள் ஊருக்கு ஊர் மாறுபடும். ஆளாளுக்கு மாறுபடும். அது புரிபட்டு விட்டால், உங்களுக்கான லைசன்ஸ் தயார். மேலோட்டமாகச் சொல்லுவது என்றால், கார் லைசன்ஸ் என்னும் மாயக் கிளியை […]

Continue Reading »

மனிதத் தத்துவம்

Filed in இலக்கியம், கவிதை by on October 31, 2016 0 Comments
மனிதத் தத்துவம்

மனிதனே…
உன்னையே திரும்பிப் பார்
உள்ளம் சென்ற வழியில்
துள்ளித் திரிந்தாய்
இளமையில்….

இருப்பது பொய்
போவது மெய்
உணர்ந்து கொண்டாய்
முதுமையில்….

Continue Reading »

ஆட்டிஸ அன்புத் தம்பியுடனான அன்றாட வாழ்க்கை

Filed in இலக்கியம், கட்டுரை by on October 31, 2016 0 Comments
ஆட்டிஸ அன்புத் தம்பியுடனான அன்றாட வாழ்க்கை

பத்து வருடங்களுக்கு மேலாகி விட்டது. ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட என் தம்பி சஞ்சித் எனக்குக் கிடைத்ததை ஆசிர்வதிக்கப்பட்டதாகவே கருதுகிறேன். இந்தப் பத்து வருட காலத்தில், பல ஏற்றத்தாழ்வுகள் வாழ்க்கையிலே, ஆனால் எந்தச் சந்தர்ப்பத்திலும் இது போன்ற ஒரு தம்பி கிடைத்தது தவறு என்று எண்ணியதில்லை, இனிமேலும் எண்ணப்போவதில்லை என்பது உறுதி. அன்பான, அறிவான, பாசம் மிகுந்த அற்புதக் குழந்தை என் தம்பி, வாழ்க்கையில் ஒரு நாள் மிகவும் உயர்ந்த நிலைக்கு வருவான் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. […]

Continue Reading »

காதல் பிசாசே ..

Filed in இலக்கியம், கதை by on October 31, 2016 0 Comments
காதல் பிசாசே ..

ஒன்பது மணிக்கே வெயில் சுட்டெரித்தது. பரங்கிமலை ரயில் நிலையத்தில் வெயிலைப் பொருட்படுத்தாது  கூட்டம் நிரம்பி வழிந்தது. நீலப் புடவை கட்டிய பெண் ஒருத்தி ‘பரக் .. பரக்’ என்று இரண்டு கைகளிலும் தென்னந் தொடப்பத்தைப் பிடித்து பெருக்கிக் கொண்டிருந்தார். யாரோ சாப்பிட்டுவிட்டுப் போட்ட கொய்யாப் பழத்தின் ஒரு பாதி உருண்டோடியது. எங்கிருந்தோ விர்ரென்று பறந்து வந்த காகம் அரை செகண்ட் அமர்ந்து, தலையைத் திருப்பித் திருப்பிப் பார்த்து, கா கா என்று கரைந்து பழத்தைக் கொத்திக் கொண்டு […]

Continue Reading »

வன்முறை மறுப்பு நாள் – NON VIOLENCE DAY

Filed in இலக்கியம், கட்டுரை by on October 31, 2016 0 Comments
வன்முறை மறுப்பு நாள் – NON VIOLENCE DAY

இந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி இந்தியாவின் தேசத் தந்தை ஆன காந்தியின் 147 ஆவது பிறந்த நாளை “வன்முறை மறுப்பு நாள்” (NON-VIOLENCE DAY) முதன் முறையாக மினசோட்டா மாநிலத்தின் தலைநகரக் கட்டிட அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவை  இந்திய மினசோட்டா அசோசியேஷன் மற்றும் மினசோட்டா இந்துக் கோவில்இரண்டும் இணைந்து  ஏற்பாடு செய்து இருந்தனர். புருஷ் கோரி இந்திய மினசோட்டா அசோசியேஷன் சார்பில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழக்கினார். மினசோட்டா மாநில அமைப்பு சார்பில்  மாநில உறுப்பினர்கள் […]

Continue Reading »

அன்பின் பெருமை

Filed in இலக்கியம், கட்டுரை by on October 31, 2016 1 Comment
அன்பின் பெருமை

அன்பு என்பது நாம் சுவாசிக்கும் மூச்சுக் காற்று போல அவசியமானது. “அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது “ என்பது  வள்ளுவர் வாக்கு. இல்லறம் நல்லறம் ஆக அன்பு இன்றியமையாதது அன்பினால் கிடைக்கக்கூடிய பலன்கள் எண்ணிலடங்கா. நமது ஆற்றல், மன வலிமை, உடல் வலிமை, அறிவாக்கம் இவற்றுக்கு உறுதுணையா‌க நிற்பது அன்பே. நமது வாழ்க்கை ஒரு கணித மேடை போன்றது. நமது நண்பர்களையும், சுற்றத்தாரையும் கூட்ட வேண்டும் (+) பகைவரை விலக்க வேண்டும் (-) […]

Continue Reading »

தீபாவளி ஃப்ளாஷ்பேக்

Filed in இலக்கியம், கவிதை by on October 31, 2016 0 Comments
தீபாவளி ஃப்ளாஷ்பேக்

கொளுத்திப் போட்ட பட்டாசு கதைகள் பலவும் சொல்லிடுது….. குழந்தைப் பருவ தினங்களிலே குதூகலம் நிறைந்த தீபாவளி…. மாதம் இரண்டு முன்னமேயே மாறாது மலர்ந்திடும் கனவதுவே…. முழுதாய் நீளும் கால்சட்டையோ முன்னம் போலே அரைக்காலோ தந்தை சற்று மனம்வைத்து தனக்குப் பிடித்ததைத் தருவாரோ? விரும்பி வாங்கிய துணிமணியை விரைவாய் டெய்லரும் தைப்பாரோ… தினமும் அவரின் கடைசென்று திரும்பி வந்தோம் வெறுங்கையாய் !! முந்தைய தினத்தின் நள்ளிரவில் முடித்தே கொடுக்க, மகிழ்ந்தோமே !! தெருவில் முதலாய் நம்வீட்டில் தெறிக்க வேண்டும் […]

Continue Reading »

கவித்துளிகள்

கவித்துளிகள்

இயற்கையின் சாரல் வறட்சியின் வெற்றி மழைத்துளி மண்ணைத் தொடும் வரை… வந்தபின் வறட்சியின் சுவடு மறைந்தே போய்விடும்…. மண்ணின் வாசமும் மழையின் சாரலும் மகிழ்ச்சியில் மனம் இலேசாகி நம் நாசித் துவாரங்களை ஊடுருவும் ….!! தளிர்கள் செழித்து செடியாகி செடி நுனியில் வண்ணமிகு மொட்டுக்கள் நாணி மலர்ந்து தலை துவட்டும் …..!! மொட்டுக்கள் நனைந்திடக் கூடாதென இலைகள் கேடயக் குடைகளாகும் காற்றின் சலசலப்பில் இலைக் குடைக்குள் மறைந்தபடி கண்ணாமூச்சி விளையாடும் மழைத்துளிகளோடு…..!! மனம் கமழ் பூமணங்கள் காற்றில் […]

Continue Reading »

க்ளோத்திங் ஆப்ஷனல்

க்ளோத்திங் ஆப்ஷனல்

ட்ரிங் ட்ரிங் ட்ரிங்….. என்று அசுர தொனியில் அலாரம் அடித்துக் கொண்டிருந்தது…. எதிர்பாராத நேரத்தில், தலையில் பெரிதாக ஏதோ விழுந்தது போல துள்ளிக் குதித்து எழுந்தாள் ஷாலினி. எழுந்து இருட்டில் சுற்று முற்றும் பார்த்தாள். இருட்டு கண்களுக்குப் பழகும் வரையில் ஒன்றும் புரியவில்லை. படுக்கைக்குப் பக்கத்திலிருக்கும் நைட் ஸ்டாண்டில் உள்ள அலாரம் க்ளாக் ஆறு மணி பதினைந்து நிமிடம் என்று நீல நிற நியான் ஒளியில் கண்களைக் கூசிக் கொண்டு, கூச்சல் போட்டுக் கொண்டிருந்தது…. இப்பதான் படுத்த […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad