பலதும் பத்தும்
மருவிய மாமொழிகள்
பழ மொழிகள் நம் மொழியின் மிகச் சிறந்த பொக்கிஷமென்பது நாமறிந்ததே. பெரிய காப்பியங்களாகவோ அல்லது கவிதைகளாகவோ இயற்றப்பட்டவையல்ல. புகழ் பெற்ற கவிஞர்களால் பாடப்பட்டவையுமல்ல. பல பழமொழிகள் எழுதியவர் யாரென்றே தெரியாதவை. ஆனால் மிகவும் சுவையாகவும், சுருக்கமாகவும், கவித்துவத்துடனும் விளங்கும் பல பழமொழிகளை நாமறிவோம்.
காலத்தைக் கடந்து நிற்கின்றன பல பழமொழிகள். அவற்றில் சில, கால மாற்றத்தாலே மருவி அர்த்தம் மாறியுமுள்ளன. அந்த இடைச்செருகலை நீக்கி, சரியான கருத்தை விளக்கும் ஒரு சிறு முயற்சி இது.
பாமரனின் புரிதல்கள்
“அச்சம் இல்லாதவன் அம்பலம் ஏறுவான்” கூறும் சூழ்நிலை: தைரியமாக சாதிக்க வேண்டிச் சொல்வது! பொருள் : துணிந்து செய்யும் செயல் நிச்சயம் வெற்றி பெறும். அம்பலம் என்பது பொதுமக்கள் நிறைந்திருக்கும் சபை. அது போன்ற சபைகளில் அச்சமின்றி பேசுபவர்கள் புகழ் பெறுவார்கள். “அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது” கூறும் சூழ்நிலை: சரியான முனைப்பின்றி காரியம் செய்வோருக்கு சொல்வது. பொருள் : சரியான முனைப்பும், தலைமையும் இருந்தால் மட்டுமே செய்யும் செயல் வெற்றி பெறும். இல்லாவிட்டால் அச்சாணி […]






