Tag: நாதஸ்வரம்
நாதஸ்வர ஆசான் திரு. ரவிச்சந்திரன் நேர்காணல்
நாதஸ்வர ஆசான் முனைவர் காரியாப்பட்டி திரு. க. ரவிச்சந்திரன் அவர்கள் சமீபத்தில் மினசோட்டா வந்திருந்து, இங்குள்ள ஆர்வமுள்ள மாணவர்களுக்கு நாதஸ்வரம் வாசிக்க கற்றுக் கொடுத்தார். அவருடன் நாம் உரையாடிய நேர்காணல் காணொலியை இங்கு காணலாம். இந்த நேர்காணலில் அவர் தனது குடும்பம், கடந்த வந்த இசை பயணம் ஆகியவற்றைப் பற்றி கூறியுள்ளார். நேர்காணல் எடுத்தவர் – சரவணகுமரன் ஒளிப்பதிவு – இராஜேஷ் கோவிந்தராஜ்
மரபிசைக் கலைஞர்களுடன் ஒரு சந்திப்பு – பாகம் 1
மினசோட்டா தமிழ்ச்சங்கத்தினர், தமிழ் மரபு கலைகளைப் போற்றும் விதத்தில் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தமிழர் இசையான நாதஸ்வரம், தவில் மற்றும் பறையிசையை இங்குள்ளவர்கள் பயிலும் வண்ணம் தமிழகத்திலிருந்து இவ்விசைக் கலைஞர்களை வரவழைத்துள்ளனர். திரு. ராமச்சந்திரன், நாதஸ்வர இசையிலும், திரு. சிலம்பரசன் தவில் இசைப்பதிலும், திரு. சக்தி பறையிசையிலும் மிகுந்த தேர்ச்சிப் பெற்றவர்கள். கடந்த சில வாரங்களாக இவர்கள், மினசோட்டாவில் பயிற்சிப் பட்டறையை நடத்தி வருகின்றனர். பனிப்பூக்கள் சார்பில் இக்கலைஞர்களுடன் ஒரு நேர்முக […]






