Rotating Banner with Links
ad banner
Top Ad

முகவுரை

தலையங்கம்

தலையங்கம்

வாசகர்களுக்கு வணக்கம் ! அக்னிக் குஞ்சொன்று கண்டேன் – அதை அங்கொரு காட்டினில் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு – தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ!!! – மகாகவி சுப்பிரமணிய பாரதி அன்றாட வாழ்வில் நாம் கணக்கற்ற அக்னிக் குஞ்சுகளைச் சந்திக்கின்றோம். எழுத்துத் திறமை, பேச்சுத் திறமை, ஓவியம் வரைதல், கதை சொல்வது, பாட்டுப் பாடுதல், அகழ்வாராய்ச்சி, வரலாற்று உண்மைகளின் தெளிவு, நிகழ்வுகளைத் திறனாய்வு செய்யும் திறமை என ஏதோவொரு துறையைக் கை வந்த […]

Print Friendly

கவிதை

தொழிலாளர் தினம் – கவிதை

தொழிலாளர் தினம் – கவிதை

இலக்குகளை நோக்கிய பயணத்தில்
அடி சறுக்கி மூச்சு முட்டி வாய் மண்தொட்டு
உதடு சிதறுண்டு செங்குருதி சிந்திடினும்
இலக்கே கொள்கையென்று நேர்வழியில் வீறுகொண்டு
தொழில் முடித்து காத்திருப்போம் தொழிலாளர் நாங்கள்

மழை – வெயில் – மூடு பனி தாண்டி வரிசைகள் நீண்டாலும்
காத்திருத்தல் ஒன்றே நேரிய வழியென்று காத்திருப்போம் கூலிக்காய்
‘செய்யாதே’ என்றால் செய்யாமல் இருப்பதற்கும்
‘செய்’ என்றால் செய்வதற்கும் பழக்கப்படுத்தப்பட்டு
பலமாய் சபிக்கப்பட்ட பூமிப் பந்தில் நாதியற்று நாட்கள் கழிப்போம்

துரதிர்ஷ்டவசமாக எம் வாழ்வை உம்மிடம் ஒப்படைத்து
உமக்கான பயணத்தில் எம்மை நாம் தொலைத்து

Print Friendly
Filed in இலக்கியம், கவிதை by on April 30, 2017 0 Comments
அன்பின் அகிலம்

அன்பின் அகிலம்

அன்றலர்ந்த தாமரையாய் அந்தமுகம் விலகவில்லை…..
அன்பிற்கு நிரூபணமாய் அன்னையன்றி வேறொன்றில்லை !!
அளவில்லாப் பெருவலியும் அவளுக்குப் பொருட்டில்லை
அவதிகளைத் தாங்கியன்றோ அருமையுடன் ஈன்றாள்பிள்ளை !!

அவள்பட்ட துயரமெல்லாம் அன்றோடு நிற்கவில்லை
அக்கறையாய் வளர்த்தெடுக்க அவள்துயர் எல்லையில்லை
அரும்பாகத் தானுதித்து அரசாளும் யோகமில்லை
அதனாலே கிள்ளையதை அவளென்றும் விலக்கவில்லை !

Print Friendly
Filed in இலக்கியம், கவிதை by on April 30, 2017 0 Comments

ஆன்மிகம்

பகுத்தறிவு – பகுதி 5

பகுத்தறிவு – பகுதி 5

(பகுதி – 4) நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் இந்தத் தலைப்பைத் தொடர்வது என்ற முடிவுக்கு வந்துள்ளேன். சென்ற பகுதிகளுக்கு வந்த விமரிசனங்களும், கருத்துக்களும், கேள்விகளுக்கும் மனதுக்கு மிகவும் உற்சாகமூட்டுவதாக அமைந்தது. என் கருத்தோடு உடன்படாதவர்களின் கேள்விகளும் உற்சாகமூட்டுவதாகவே அமைந்தன. நிச்சயமாக, மாற்றுக் கருத்துள்ளவர்களின் மன ஓட்டத்தையும் அறிந்து கொள்ள வேண்டுமென்பதே எனது ஆசையும்கூட. பின்னூட்டங்கள் உற்சாகமாக அமையும் அதே சமயத்தில், நேரடியாக அனுப்பப்பட்ட சில கேள்விகளும், சந்தேகங்களும், மேலும் பொறுப்புணர்ச்சியோடு எழுத வேண்டுமென்ற எண்ணத்தைத் தூண்டுவதாக […]

Print Friendly

சமையல்

ஆட்டு மூளை வறுவல்

ஆட்டு மூளை வறுவல்

ஊர் கோவில் திருவிழாவிற்கு, படையலுக்கு ஆடு அடித்து உணவு சமைக்கும் போது, ஆட்டின் எந்தப் பாகத்தையும் விட்டு வைக்க மாட்டார்கள். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு உணவு பதார்த்தம் செய்துவிடுவார்கள். மூளையை உப்பு போட்டு வறுத்துக் குழந்தைகளுக்கு, சிறுவர்களுக்குக் கொடுப்பார்கள். சிலர் முட்டை, வெங்காயம் போட்டு பூர்ஜி மாதிரியும் செய்வார்கள். உலகமெங்கும் உள்ள நாடுகளில், விதவிதமான வகைகளில், மூளை சமைக்கப்படுகிறது. இங்குக் கொடுக்கப்பட்டுள்ளது, நம்மூர் வறுவல் வகை. குழந்தைகளுக்குத் தேவையான DHA, மூளையில் மிகுந்து இருப்பதால், அவ்வப்போது சமைத்துக் கொடுக்கலாம். […]

Print Friendly
Filed in அன்றாடம், சமையல் by on April 30, 2017 0 Comments

திரைப்படம்

ராஜமெளலி – இந்தியாவின் நம்பர் 1 இயக்குனரா?

ராஜமெளலி – இந்தியாவின் நம்பர் 1 இயக்குனரா?

எந்தவொரு மனிதனும் அவன் சார்ந்த பிராந்தியத்தில், மக்களின் மனங்கவர்ந்து வெற்றிகளைப் பெற்ற பின், தனது அடுத்த இலக்காகத் தனக்கான எல்லைகளை விரிவாக்க எண்ணுவான். அரசியலோ, சினிமாவோ அல்லது அது எந்தவொரு துறையாக இருந்தாலும் வளர்ச்சி என்பது இப்படியே அடையப்படும். சினிமாவிலும் இப்படி ஒரு மாநிலத்தில் பெயர் பெற்ற கலைஞர்கள், புகழ் ஏணியில் மேலும் ஏற, தங்கள் மாநில எல்லையைக் கடப்பார்கள். அதனால் தான், ஒரு மொழியில் நன்கு வெற்றியடைந்த ஹீரோக்கள், அடுத்துப் பக்கத்து மாநிலத்தைக் குறி வைப்பார்கள். […]

Print Friendly
காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (ஏப்ரல் 2017)

காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (ஏப்ரல் 2017)

கடந்த இரு மாதங்களில் வெளிவந்த பாடல்களில் சில, இங்கு உங்கள் பார்வைக்கு. எங்களது முந்தைய தொகுப்பைக் காண இங்கு செல்லவும். காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (ஃபிப்ரவரி 2017) டோரா – எங்க போற எங்க போற “லேடி சூப்பர் ஸ்டார்“ என்று அழைக்கப்படும் (!!) நயன்தாரா இப்போதெல்லாம் தனி ஆவர்த்தனம் செய்யத் தொடங்கிவிட்டார். நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வருகிறார். டோராவும் அப்படியே. படம் ரிலீஸ் அன்று நயன்தாராவுக்குகென்று, சென்னையில் […]

Print Friendly

கதை

தாய்மை

தாய்மை

கையில் இருந்த காய் கறி கூடையை மறு கைக்கு மாற்றியபடி வாசல்  கதவைத் திறந்தாள் அகல்யா.  உள்ளே இருந்து முனகல் சத்தம் கேட்டதும், பதட்டத்துடன் வேகமாக வழி நடையைக் கடந்து வீட்டிற்குள் பிரெவேசித்தாள். காய்கறி கூடையைச் சமையல் அறையின் கதவின் முன் வைத்து விட்டு, வீட்டின் உள் அறையை நோக்கி வேகமாக எட்டெடுத்து வைத்தாள். “ஹாசினி பட்டு எழுந்திட்டியா .. அம்மா வந்துட்டேன்.” அந்த அறையில் உள்ளே ஒரு பெரிய தொட்டி போல வைக்கப்பட்ட அந்தப்  படுக்கையில் […]

Print Friendly
Filed in இலக்கியம், கதை by on April 30, 2017 0 Comments
தலைக்கு மேல வேல….

தலைக்கு மேல வேல….

ஞாயித்துக் கெழம காலங்காத்தால……. மனைவியின் “எழுந்திருங்கோ….. எட்டு மணி ஆயிடுத்து” குரல் எங்கோ கிணற்றுக்குள்ளிருந்து கேட்பது போல் ஒலித்தது எனக்கு… அதனை இக்னோர் செய்துவிட்டு புரண்டு படுத்தேன். பாத்ரூமிலிருந்து எட்டிப்பார்த்த சகதர்மிணி, “சொல்லிண்டே இருக்கேன்… அப்டி என்ன இன்னும் தூக்கம்? என்னமோ வெட்டி முறிச்சாப்போல…. நேக்கு மாத்திரம் சண்டே சாட்டர்டே எதுவுமில்ல….” என்று விரட்டிக் கொண்டிருந்தாள். எனக்கு ஏதோ வேலை வைத்திருக்கிறாள் என்பதைவிட, தான் எழுந்துவிட்டோம் இன்னும் இவன் மட்டும் தூங்குகிறான் என்ற பொறாமைதான் அதிகமாய்த் தொனித்தது. […]

Print Friendly
Filed in இலக்கியம், கதை by on April 30, 2017 0 Comments

நிகழ்வுகள்

எஸ்பிபி 50 – சிகாகோ இசைக் கச்சேரி

எஸ்பிபி 50 – சிகாகோ இசைக் கச்சேரி

“பாடும் நிலா” என்று இசை ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும், பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் ஐம்பது ஆண்டுத் திரையுலகப் பயணத்தைக் கவுரவிக்கும் விதமாக, எஸ்பிபி 50 என்ற பெயரில் உலகமெங்கும் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார் அவருடைய புதல்வரான எஸ்.பி.பி.சரண். இந்தத் தொடர் இசை கச்சேரிகளின் ஒரு நிகழ்ச்சி, சிகாகோ நகர் ஓடியம் அரங்கில் ஏப்ரல் 15 ஆம் தேதியன்று நடந்தது. இந்த இசை நிகழ்ச்சிக்குத் திரையிசை ரசிகர்கள் குடும்பத்துடன் அக்கம் பக்கத்து மாநிலங்களில் இருந்தும் வந்திருந்தனர். தமிழ், […]

Print Friendly
வாழையிலை விருந்து

வாழையிலை விருந்து

மினசோட்டா தமிழ் சங்கம் மூன்றாவது ஆண்டாக வாழையிலை விருந்து விழாவை, இந்தாண்டு ஏப்ரல் 8ஆம் தேதியன்று ஹாப்கின்ஸ் கம்யூனிட்டி செண்டரில் நடத்தியது. முந்தைய ஆண்டுகளைப் போல, இந்தாண்டும் தமிழர் பாரம்பரிய உணவு வகைகளை, வாழையிலையில் பரப்பி விருந்து படைத்தனர். முருங்கைக்காய் சாம்பார், மோர் குழம்பு, வேப்பம்பூ ரசம், வெண்டைக்காய் கூட்டு, திணை பாயாசம், அப்பளம் என சுவையான தமிழர் விருந்து, வந்திருந்த விருந்தினரைக் கவர்ந்தது. அன்றைய நிகழ்வின் புகைப்படங்கள், உங்கள் பார்வைக்கு இங்கு. சரவணகுமரன்  

Print Friendly
நாட்டிய மஞ்சரி நடனப் போட்டி 2017

நாட்டிய மஞ்சரி நடனப் போட்டி 2017

ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி  ஸ்ரீ நாட்டியமஞ்சரிக் குழுவினரின் நடனப் போட்டி மினசோட்டா மாநிலத்தில் ப்ளூமிங்க்டன் நகரிலுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலில் நடைபெற்றது. இந்த நிகழ்வு தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட ஒன்று.   கடந்த ஆண்டு இப்போட்டியில்  பல குழுக்கள் இடம் பெற்றிருந்தனர்.  எனவே இந்த ஆண்டு போட்டியை 11 மணிக்குத் துவங்கி  இரவு 7 மணி வரை நடத்தி, போட்டியில் பங்கேற்றவர்களுக்குப் பரிசளித்து சிறப்பித்தனர். இந்த ஆண்டும் பரதநாட்டியம், பாலிவுட் மற்றும் நாட்டுப்புற நடனங்கள் […]

Print Friendly
MN தமிழ் பள்ளியின் ஆண்டு விழா  2017

MN தமிழ் பள்ளியின் ஆண்டு விழா  2017

ஏப்ரல் 8ம் தேதி பள்ளியின் 9ம் ஆண்டு விழா ஹாப்கின்ஸ் கம்யூனிட்டி அரங்கில் நடைபெற்றது. மதியம் 3 மணிக்கு பள்ளி ஆண்டு விழா ஆரம்பித்து இரவு 7 மணி வரை நடைபெற்றது. பள்ளி ஆண்டு விழாவை, பள்ளிக்குழுவினர்,  உட்பரி ஆசிரியர்கள், ஷாப்கின்ஸ் ஆசிரியர்கள் மற்றும் 8ம் வகுப்பு மாணவ மாணவியர்கள் சேர்ந்து ஏற்பாடு செய்திருந்தார்கள். 8ம் வகுப்பு மாணவ மாணவியர்கள் விழாவைத்  தொகுத்து வழங்கினார்கள். சிறப்பு விருந்தினராக பேராசிரியர் திரு. குமார் மல்லிகார்ஜுனன் பங்கேற்று வாழையிலை  விருந்து […]

Print Friendly
தமிழ்த் தேனீ 2017

தமிழ்த் தேனீ 2017

மார்ச் 26, 2017 ஆம் தேதியன்று  மினசோட்டா தமிழ்ச்சங்கப் பள்ளியின் சார்பில் “தமிழ்த் தேனீ ” போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டி, பொதுப் பள்ளிகளில் அவரவர்  படிக்கும் நிலைகளை வைத்து பிரிக்கப்பட்ட மூன்று பிரிவுகளில் பல சிறுவர், சிறுமியர் கலந்துகொண்டனர். போட்டியில் பங்கேற்றவர்களுக்கு 200 சொற்கள் கொண்ட பட்டியல் முன்னதாக அனுப்பப்பட்டிருந்தது. அதிலிருந்து எடுக்கப்பட்ட சொல்லை நடுவர்கள் முன்னிலையில் எழுதி அடுத்தடுத்த சுற்றுகளுக்குப் போட்டியாளர்கள் முன்னேறினர். கடுமையான போட்டி நிலவிய பல சுற்றுகளுக்குப் பிறகு, ஒவ்வொரு பிரிவிலும் […]

Print Friendly

திரைப்படச் செய்திகள்

தமிழ் திரைப்படச் செய்திகள்

தமிழ் திரைப்படச் செய்திகள்

அன்றாடத் தமிழ்த்திரைப்படச் செய்தி குறுகிய தலைப்புத் தகவல்கள்.

Print Friendly

சிறுவர் உலகம்

Kids – Color it

Kids – Color it

Harini Drawings

Harini Drawings

 

Print Friendly
கயல்விழியும் கடல் கன்னியும்

கயல்விழியும் கடல் கன்னியும்

கடற்கரையோரக் குடிசையில் கீரிமலைக்கிராமத்தில் கயல்விழி எனும் பெண் தனது அம்மா அப்பாவுடன் வாழ்ந்து வந்தாள். கடலோரக் குடிசையோ சற்று பழையது, பூவரச மரத்தூண்கள் காலாகாலத்தில் சற்று உக்கி வாசல் சற்று தொய்ந்து போய்க் காணப்பட்டது. மேலும் யாழ்ப்பாண வலிகாமம் வடக்குப் பருவகாலத்தைப் பொறுத்து ஒன்றில் வடகிழக்கு வாடைக்காற்று மழை பனையோலையால் அமைக்கப்பட்ட கூரையில் இருந்து இடையிடையே மழை நீர் ஒழுகவும், அல்லது செவ்வானச் சூரியன் செங்கதிர்கள்  தூசியின் ஊடுறுழையவும் செய்தது. கயல்விழி காலையில் நித்திரை விட்டு எழும்புவாள். […]

Print Friendly

Mid Month Release

Kids – Color it

Kids – Color it

Filed in Mid Month Release by on May 15, 2017 0 Comments
மே மாதம் மினசோட்டா மீன் பிடிப்பு ஆரம்பம்

மே மாதம் மினசோட்டா மீன் பிடிப்பு ஆரம்பம்

பல்லாயிரம் மாநில வாசிகள் தம் பனிகாலத்தைப் பின்வைத்து கோடையில் காலெடுத்து வைக்கும் முதல் பொழுதுபோக்கு நாள் மினசோட்டா மீன் பிடிப்பு தொடக்க நாள் எனலாம். இது வழமையாக அன்னையர் தினத்திற்கு முதல் நாள் வருவதினால்  சில வீடுகளில் தகராறு ஏற்படுவதுண்டு. எனினும் மினசோட்டாவில் மீன் பிடிக்கும் அன்னையருக்கு இது இரு கொண்டாட்டங்களினால் உவகையடையும் நாள் என்று  நாம் கருதிக்கொள்ளலாம். இயற்கையன்னை தனது எழிலை இதமாகப் படைத்துள்ளாள் எம் மாநிலத்தில். மினசோட்டா மாநிலத்தை 10,000 ஏரி மாநிலம் என்று […]

Print Friendly
Filed in Mid Month Release by on May 15, 2017 0 Comments
பாகுபலி – The Conclusion

பாகுபலி – The Conclusion

பாகுபலி வழக்கமான இந்தியச் சினிமா அல்ல என்பது நிச்சயம். பல ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அதிசயம். பல ஆண்டுகளைத் தாண்டியும் பேசப்படப் போகும் படம். பேருழைப்பு தாங்கிய அசாதாரண வணிகச் சினிமா. இந்தியப் புராண அம்சங்களைக் கமர்ஷியலாகச் சொல்லத் துணிந்த கதை. மிகுந்த பொருட்செலவில், பலரது கடும் உழைப்பில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு, மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. முதல் பாகத்தின் இறுதியில் எழுப்பப்பட்ட கேள்வியான “கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்?” இப்படி எதிர்பார்ப்பு எழுப்ப நன்றாகவே உதவியது. […]

Print Friendly
Filed in Mid Month Release by on May 15, 2017 0 Comments
மினசோட்டா  பன்னாட்டு பன்சமூகக் கொண்டாட்ட விழா 2017

மினசோட்டா  பன்னாட்டு பன்சமூகக் கொண்டாட்ட விழா 2017

பன்தேச விழாவானது குதூகலமாக சென்ற 85 வருடங்களாக மினசோட்டா மாநில சர்வதேச நிறுவனத்தினால் (The International Institute of Minnesota) நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் புதிதாகக் குடிபுகுந்த அமெரிக்கரையும் அவர்களின் கலாச்சாரத்தையும் மினசோட்டா மக்களுடன் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டது. இந்தக் கொண்டாட்டம் பனிகாலம் மாறி இளவெனில் காலத்தின் வெய்யில் உந்தலில் உள்ளூர் மக்கள் உற்சாகமாகக்  கலந்து கொள்ளும் வகையில் அழகிய ஆற்றோரக் கரை மண்டபத்தில் வருடந்தோறும் நடைபெறுகிறது. இந்த ஆண்டு இவ்விழா மே மாதம் 4இல் […]

Print Friendly
Filed in Mid Month Release by on May 15, 2017 0 Comments
மினசோட்டாத் தமிழர்கள் பல்தேசகொண்டாட்டத்தின் மத்தியிலே மங்கள மத்தாப்பு

மினசோட்டாத் தமிழர்கள் பல்தேசகொண்டாட்டத்தின் மத்தியிலே மங்கள மத்தாப்பு

செயின்ட் பால் நகர ரிவர் சென்டரில் நாதஸ்வர கானம் தனியாகத் தமிழன் செவிக்குச் செழிப்பைத் தருகிறது. அதனுடன் வருகை தந்த யாவரும் அவர் இதயத் துடிப்புடன் இன்பமாக இணைகிறது இனிய தவில் மேளம், அதி உற்சாகத்துடன் கால்களைச் சும்மா ஒரிடத்தில் நின்று பார்க்காமல் துள்ள வைக்கிறது ஆடி அடிக்கும் தமிழ்ப்பறை வித்தகர் அருகில் கூடிக் குதிக்கிறார்கள் இளம் நாட்டியத் தம்பதிகள். ஏறத்தாழ 90 சமூகங்களில் 30 மேற்பட்ட சமூகக் கண்காட்சிக் கூடாரங்களில் தமிழர் கூடாரத்தின் கும்மாளம் வருவோர் […]

Print Friendly
Filed in Mid Month Release by on May 15, 2017 0 Comments

கட்டுரை

இவ்வருடப் புதிய காய்கறி வகை 2017

இவ்வருடப் புதிய காய்கறி வகை 2017

மினசோட்டாவிற்கும் அயல் மாநிலங்களுக்கும் ஏப்ரல் மாதம் மழையும் வந்துவிட்டது இனி மே மாதத்தில் மிருதுவான புற்தரைகளும், பூக்களும் துளிர் விடும். பூச்செடிக் கடைகளுக்குப் போனால் (Garden centers) அப்பப்பா ஆயிரம் ஆயிரம் வகை தாவரங்கள், நமக்கு இருப்பதோ குறுகிய நிலமும் பூச்சாடிகளும் என்பர் இவ்விட வாழ் தமிழ் இயற்கையாளர் பலர். மினசோட்டா , ஒன்ராரியோ கனடா விவசாய திணைக்களம், மற்றும் பூங்கா அமைப்பாளர் குழுமியங்கள் வருடா வருடம்  புதிய, அனுபவமுள்ள பூச்செடி, காய்கறி வளர்ப்பாளர்களுக்கு இளவேனில் ஆலோசனை […]

Print Friendly
உரிமைகள் மசோதா – 3

உரிமைகள் மசோதா – 3

(உரிமைகள் மசோதா-2) அமெரிக்க உரிமைகள் மசோதாவின் முதல் திருத்தத்தில் பேச்சுச் சுதந்திரத்தின் நீட்சியாக மதச் சுதந்திரமும் சேர்ந்துள்ளது. மதச் சுதந்திரம் – வரைவிலக்கணம் அமெரிக்கச் சட்ட வரைவுகள் அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு, தங்களது சொந்த மத நம்பிக்கைகளை, அல்லது மத நம்பிக்கையின்மையைப் பின்பற்றும் உரிமையுள்ளது. அடிப்படையில் இன்றைய ஐக்கிய அமெரிக்க நாடுகள், பல நாடுகளிலிருந்து குடிபெயர்ந்து வந்தவர்களால் உருவாக்கப்பட்டது. இவர்கள் பல்வேறு மதப் பின்னணியிலிருந்து வந்தவர்கள். அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் தேவாலயங்கள் இயங்க வேண்டும் (Separation of Church […]

Print Friendly
உழவர் சந்தைகள்

உழவர் சந்தைகள்

உலகில் இருக்கும் பனிரெண்டு மண் வகைகளில், ஒன்பது வகை மண்ணைக் கொண்ட மினசோட்டா ஒரு விவசாயப் பூமியாக இருப்பதால், மினசோட்டாவாசிகளுக்கு ஒரு அனுகூலம் உள்ளது. ஃப்ரெஷ்ஷாக உணவு உண்ணலாம். அதுவும், உணவுக் குறித்த விழிப்புணர்வு பெருகியுள்ள இக்காலத்தில், இது போன்ற வாய்ப்பு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. புத்தம் புதியதாக விவசாய நிலத்தில் இருந்து வரும் விளைப் பொருட்கள், மக்களை உடனடியாகச் சென்றடைய உதவுபவை, உழவர் சந்தைகள். அந்த வகையில், மினசோட்டா மாநிலமெங்கும் நடக்கும் உழவர் சந்தைகள் (Farmer’s […]

Print Friendly
தொழிலாளர் தினம்

தொழிலாளர் தினம்

வட அமெரிக்காவில் தொழிலாளர் இயக்கம் 1886, மே 1ஆம் திகதி தொடங்கப்பட்டது. ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் மட்டுமே வேலை தரவேண்டும் எனக் கோரி வேலை நிறுத்தத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதன்விளைவாகத் தொழிலாளர்களின் தினசரி வேலைநேர அளவு நிர்ணயிக்கப்பட்டது. இதன் பயனாக ஒருநாளில் எட்டு மணிநேரம் வேலை எட்டு மணிநேரம் பொழுதுபோக்கு மற்றும் எட்டு மணிநேரம் ஓய்வு ஆகியவற்றை வாதிட்டு வரையறுக்கப் பட்டது. உலக சமவுடமையின் தந்தையான கார்ல் மார்க்ஸ் மற்றும் அவரது நண்பன் எங்கெல்ஸ் (Karl […]

Print Friendly
புத்தாண்டு பூத்தது

புத்தாண்டு பூத்தது

ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி, 1990 ஆம் வருடம்….. தமிழ் வருடப் பிறப்பு என்பதினால்  பூஜைக்குத் தயாராகிக் கொண்டிருந்தது வீடு. .…… வழக்கம் போல அன்று காலையும் வீட்டின் முன் ஹாலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த கணேஷின் முகத்தில் காலைச் சூரியன் தன் கிரணங்களை வீசி, விடிந்துவிட்டது என்பதை நளினமாய் உணர்த்தினான். அடுத்த மாதம் வர இருக்கும் பொறியியற் கல்வியின் நான்காம் செமஸ்டர் தேர்வுகளுக்குத் தயார் செய்வதற்காக, இரவு நெடுநேரம் விழித்திருந்ததால் காலையில் எழுவதற்குத் தாமதமானது. […]

Print Friendly
உங்கள் மின்னிணைய வரலாறு ஏலத்தில்

உங்கள் மின்னிணைய வரலாறு ஏலத்தில்

மின் வலயமானது அதன் ஆரம்பத்தில் சிற்சில  புத்திஜீவிகள், கணனித் தொழினுட்பவியலாளர்கள் குழுக்கள் தமது அறிவியல் தேவைக்காக அமைக்கப்பட்டது. மின் வலயம்  திறந்த மனப்பாங்குடன் கருத்துப் பரிமாறலையும் ஒருவர் தன்னிச்சையான கருத்துக்களைப் பரிமாறும் இடமாகவும் கருதப்பட்டது.  இந்தப் புரிந்துணர்வு பெருமளவில் தற்போது மாறிவிட்டது. இன்று நுகர்வோர் அந்தரங்கங்களைப் பகிரங்கமாக்குதல் ஆதாயமான விடயம். இந்த வர்த்தகக் குறிக்கோளை நோக்கி நுகர்வோரைப் பாதுகாக்கும் அமெரிக்கச் சட்டங்கள் பலவீனமாக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய மின் இணையம் ஆக்கப்பூர்வமான படைப்பாளிகளுக்கு இடமல்ல; வெறும் நுகர்வோர் மையங்களே. […]

Print Friendly

காப்பகங்கள் (Old posts)

பிரிவுகள் (Categories)

banner ad
Bottom Sml Ad