\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

நானே சிந்திச்சேன் – கிரகப்பிரவேசங்கள்

Filed in கதை, வார வெளியீடு by on March 13, 2024 0 Comments

 

சென்ற ஞாயிறன்று ஃபோன் போட்டு அரட்டையடித்துக் கொண்டிருந்த ஜனா, திடிரென்று, “வரதுக்கு ஃபோன் பண்ணா எடுக்கவே மாட்டேன்றான்.. ஒரு நிமிஷம் இரு.. கான்ஃப்ரன்ஸ் போட்டுப் பாக்கலாம் என்று சொல்லிவிட்டு என் பதிலுக்குக் கூட காத்திராமல் வரதுவை அழைத்துவிட்டான்.

சில நிமிடங்களில் சொல்லுங்கடா..எப்டி இருக்கீங்கஎன்று கேட்டுக் கொண்டே வரது இணைந்துகொண்டான்.

என்ன மாப்ளே ஆளப் பிடிக்கவே முடில .. பயங்கர பிசி போல” என்றான் ஜனா.

ஆமாடா மச்சி .. வரிசையா கிரகப்பிரவேசமா அமைஞ்சு போச்சு..

கிரகப்பிரவேசமா? என்னடா சொல்ற?”

நடந்ததைதான் சொல்றேன்டா.. போன அக்டோபர்ல நியு ஜெர்சில ஒரு பிரம்மாண்ட வீடு முடிஞ்சு கிரகப்பிரவேசம் ஆச்சு ..

எங்களையெல்லாம் கூப்பிடணும்னு தோணவேயில்லையா உனக்கு” ஜனா கொதித்தான்

நானே போகலஅந்த நேரத்துல எலக்‌ஷன் அது இதுன்னு கொஞ்சம் பிளானிங் பண்ண வேண்டியிருந்தது..

எலக்‌ஷனா? “

டேய், டேய் எல்லாத்துக்கும் இப்படி ஓவரா அதிர்ச்சியாவதஎங்க ஆஃபிஸ் யூனியன் எலக்‌ஷனைச் சொன்னேன்”

ஓ..சரி சரி.. எலக்‌ஷன்னா தூக்கிவாரிப் போடுதாயில்லையா? சரி மேல சொல்லு

அப்புறம், எங்க ஆன்செஸ்டர்ஸ் ப்ராப்பர்ட்டி ஒண்ணு.. இந்தியால .. 500 வருஷமா இழுத்தடிச்சிக்கிட்டிருந்தது..

“500 வருஷமாவா?”

அட ஆமாடா.. எங்க தாத்தா ஒர்த்தர் அங்க வேற எவனோ கட்டி வெச்சிருந்த பில்டிங்கை இடிச்சுத் தள்ளிட்டாரு.. அப்புறம் அது கேசாயிடுச்சு..

இடிச்சிட்டாரா? எப்படி இன்னொருத்தர் பிராப்பர்ட்டியை இடிச்சாரு ..

அங்கதான் எங்க தாத்தா நேக்கா ஒரு வேலை பண்ணாரு.. எங்க குடும்ப அடையாளமான சில பாத்திர பண்டங்களை அந்த ப்ராப்பர்ட்டில கொண்டு போய் வெச்சுட்டு, பாத்தீங்களா இது எங்க குடும்பச் சொத்துதான்னு சொன்னாரு..அப்றம் எவன் கேக்க முடியும்?”

கேசாயிடுச்சுன்னு சொன்னியே, அப்ப கோர்ட்ல கேட்டிருப்பாங்கல்ல”

ஆங்.. உன்ன மாதிரி ஆளுங்க கெளம்பி வருவீங்கன்னு தெரியும்.. எங்க தாத்தா எங்க அப்பாகிட்ட அதுக்கும் ஒரு யோசனை சொல்லிட்டு போயிருக்காரு.. என்னிக்காவது இது கோர்ட்டுக்கு வந்து பிரச்சனையாச்சின்னா, அந்த ஜட்ஜை நம்ப ஜமீன்ல இருக்கிற ஏதாவது ஊருக்கு சூபர்வைசரா போட்டுடு.. எல்லாம் சுபமா முடியும்னு ஐடியா கொடுத்துருக்காருஎங்கப்பாவும் அதே மாதிரி ஜட்ஜ் கிட்ட போய் பேசினாரு.. ஜட்ஜ், இங்க தோண்டி பாத்ததுல உங்க குடும்ப அடையாளம் எதுவும் கிடைக்கல .. ஆனாலும் உங்க குடும்பம் அங்க இருந்ததா நீங்க சொல்றீங்க .. உங்க நம்பிக்கையைப் பாழடிக்க கூடாதுன்றதால, இது இனிமே உங்க சொத்துதான்னு தீர்ப்பு கொடுத்துட்டாரு.. மேட்டர் ஓவர்..

ஓவரானது மேட்டர் இல்லடா .. நீதிடா, நேர்மைடா, நியாம்டா ன்னு நாட்டாமை சொல்வாரே .. அதெல்லாமே ஓவராயிடுச்சு..ஜனாவின் பேச்சில் லேசான எரிச்சல் தெரிந்தது.

 அது நாட்டாமையோட தலையெழுத்து.. எங்க குடும்பத்துக்கு என்ன வந்தது சொல்லு?”

அடப்பாவிஅப்போ அந்த எடத்துல நீ வீடு கட்டிட்டே அப்படிதானே.. ஜட்ஜையாவது சூபர்வைசரா ஆக்கனீங்களா அதுவும் இல்லையா?”

ஒரு டீசண்ட் பெர்சனாலிட்டியைப் பாத்து கேக்கற கேள்வியா இதுஅதெல்லாம் கொடுத்த வாக்குல சுகுரா இருப்பாங்க எங்காளுங்க.. அடுத்த மாசமே அவருக்கு வேற வேலை போட்டு கொடுத்துட்டோம்.. இல்லைனா எங்க குடும்பத்துக்கு அந்தாளு வயித்தெரிச்சலும் பாவமும் வந்து சேந்துடும்..

ஏற்கனவே இல்லாததா புதுசா வரப்போவுது? சரி அத விடு.. கிரகப்பிரவேசம் நல்லபடியா முடிஞ்சுதா?”

அதை கிரகப்பிரவேசம்னு சொல்ல முடியாது.. சும்மா ஒரு ஃபங்க்‌ஷனு வெச்சிட்டோம்.. ஒரு அக்கம்பிளிஷ்மெண்ட் மாதிரின்னு வெச்சுக்கோயேன்..

அது வேறயா? இப்ப எல்லாம் முடிஞ்சிடுச்சில்ல.. இனிமேலயாச்சும் ஆஃபீஸ் வேலையெல்லாம் ஒழுங்கா பாப்பியா?”

எங்க பாக்குறது? இது முடிஞ்ச ஒடனே எங்க ஃப்ரெண்டு ஒருத்தரு அபுதாபில இருக்குறவரு.. என் கிட்ட நெறய லேண்ட் இருக்குது.. உனுக்கு ஒரு 125 ஏக்கர் குடுக்குறேன்னு சொன்னாரு .. சரி அதை ஏன் விடுவானேன்னு அங்க ஒரு பில்டிங் கட்டிட்டோம்.. நியு ஜெர்சில சொன்னேன்ல, அதே ஆளுங்க தான்.. பிரம்மாண்டமா கட்டி முடிச்சிட்டாங்க.. அதை ஃபார்மலா கிரகப்பிரவேசம் பண்ணிட்டோம்..

இது எப்ப? அதுக்கு நீ போயிருந்தியா?”

பின்ன நான் போவாமலா.. ஃபங்க்‌ஷன் நல்லா கிராண்டா நடந்து முடிஞ்சிடுச்சு.. இப்பப் பாரு எல்லா ஊர்லயும் நமக்கு.. அதாவது எனக்கு.. பிராப்பர்ட்டி இருக்குவரதுவின் குரலில் ஒரு பெருமிதம் ஒலித்தது.

சூப்பர்டாநெஜமாவே பெரிய அச்சீவ்மெண்ட் .. கங்கிராட்ஸ்டா..என வாழ்த்தினான் ஜனா.

இதுவரையில் எந்தக் கேள்வியும் கேட்காமல் இருந்து வந்த வோல்ட், “எனக்கு ஒரு டவுட்டு மாப்ளே.. இதுவரைக்கும் எல்லாத்தையும் சாதிச்சிட்டே .. எதோவொரு எடத்தையே எங்க குடும்ப எடம்னு அங்கிருந்தத இடிச்சு தள்ளிட்டிங்களே, நாளைக்கு நியு ஜெர்சில இருக்குறவனும், அபுதாபில இருக்குறவனும், நீங்க சொன்ன மாதிரி, இது எங்க மூதாதையர் எடம், அதனால இது எங்களுக்கு தான் சொந்தம்னு உங்க பில்டிங்கை இடிச்சுத் தள்ளிட மாட்டானா?”

ப்ளீச்சிங் பவுடர் போட்டு வாயைக் கழுவுடா பன்னாட.. வாழ்த்து சொல்லலைனாலும் பரவாயில்ல.. இப்படி அபசகுனமா கேள்வி கேப்பியா நீயி.. மவனே நேர்ல இருந்திருந்தே ஈடி (ED) வந்திருக்கும் இந்நேரம்.. ஃபிரெண்டா போயிட்டதால பாக்குறன்..வரது கோபத்தில் கத்தினான்.

வோல்ட் விடவில்லை.. வயசானா எல்லா ஆம்பிளைக்கும் ஈடி(ED) வரத்தான் செய்யும்டா.. சும்மா ஒரு சந்தேகத்துக்காகக் கேட்டேன்.. நீங்க எதுக்கும் உஷாரா இப்பவே பிளான் பண்ணி வெச்சுக்குங்க..

எல்லாம் எங்களுக்குத் தெரியும் .. நீ ஒண்ணும் சொல்லத் தேவயில்ல.. எவனாவது எங்க பில்டிங்கில கைய வெக்க முடியுமா? எங்க சொந்த பந்தமெல்லாம் ஒண்ணா தெரண்டுடமாட்டோம்.. ஒரே ஒரு கோஷம், ஜெய்… “

டேய் டேய்.. சும்மா ஒரு பேச்சுக்கு கேட்டேன்.. உணர்ச்சி வசப்பட்டு அரசியல்லாம் பேசாத..

இதுல என்ன அரசியலு.. ஒரே ஒரு கோஷம் ஜெய்சங்கர் மாதிரி கத்திக்கிட்டே எகிறிக் குதிச்சு எதிரிங்களைப் பந்தாடிடுவோம்னு சொல்ல வந்தேன்.. நீ தப்பா புரிஞ்சிகிட்டு அரசியலாக்காத..

ஒகே .. ஒகே.. நான் தான் தப்பா புரிஞ்சிகிட்டேன் போல .. அப்றம் உங்க வீட்டு நெலத்துல வேலை செய்ற விவசாயிங்கெல்லாம்..வோல்ட்டு முடிப்பதற்குள்

சரிடா, எனக்கு நேரமாவுது.. பூஜைக்குப் போவணும்..”  என்று சொல்லி லைனைத் துண்டித்தான் வரது.

 

  • வோல்டெய்ர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad