\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

இயேசு பிறப்பு நற்செய்தி

ஆண்டின் இறுதியும் – புதிய

ஆண்டு புகுமுன் நிகழும்

ஆண்டவர் பிறப்பு நற்செய்தியும்

ஆவல் தூண்டிட

 

ஆயிரம் வர்ண விளக்குகள்

ஆதவன் அடங்க மின்னி

ஆகாயம் ஒளிர்ந்து

ஆனந்தம் பொங்கிட

 

ஆடம்பரத் திருவிழா

ஆட்டங்கள் களைகட்ட 

ஆன்ம இசை விருந்துகள் 

ஆசையாய் அரங்கேற

 

ஆகம வார்த்தையானவரை 

ஆனந்த பாசுரம் பாடி 

ஆலயத்திலும் அகத்திலும்

ஆராதித்துப் போற்றிட

 

ஆதி இல்லாதோன் மகனே

ஆன்ம நேசராய் அகிலம் காக்க

ஆவியார் அன்னை மரியை

ஆட்கொள்ள அவதரித்தாரே

 

ஆரவாரமின்றி அவனியே

ஆனந்திக்க அன்னை மடியிலே

ஆயர்கள் வானவரோடு பாட 

ஆனந்தமாய் அயர்ந்த

 

ஆண்டவர் இயேசு பாலன் 

ஆசீர் பெற்று மகிழ்ச்சி பரவ 

ஆயத்தமாவோம் அன்பாய்

ஆர்வமாய் அமைதியாய் !

 

ஆ. ரெக்ஸ் மோகன் குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad