காத்திருப்பு

காத்திருப்பு சுகமானது காதலில்
காதலியின் வரவை எதிர்பார்த்துக் காதலனும்
காதலனுக்காக அவளும் காத்திருப்பாள்
கருவாச்சி மனதினுள் பொங்கிடுவாள்….!
கட்டிய கணவனைக் கனிவோடு வரவேற்றிட
கட்டைவிரலால் கோலமிட்டே வாசலிலே நின்றிடுவாள்
காளையவன்மீது தான் கொண்ட மோகத்தால்
காதல் ரசம் வழிந்தோட வாசலிலே வீற்றிருப்பாள் …!!
கோலமகள் தவித்திடுவாள் மனதினுள்
மணாளனை எண்ணி மருகியே
காலத்தின் விரைவுதனைக் கடிந்திடுவாள் ….
கண்ணாளனைக் கண்டவுடன் கண்களால் அளந்திடுவாள் ….!!
காத்திருந்தேனடா காலத்தோடு …..!!!
உமையாள்






