நாட்டிய நிகழ்வு!!
தரங்கிணி நாட்டிய பள்ளியின் முக்கிய நிகழ்வாக நிதி திரட்டுதல் (Fundraising) ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். இதன் நோக்கம் உயரியது . இதில் பங்கு கொள்வதும், நம்மால் இயன்ற சிறிய தொகையை வழங்குவதும், கடலில், சிறு துளியாய் நாமும் கலப்பது போன்றே!
ஓக் பாயிண்ட் தொடக்கப்பள்ளியில் (Oak Point PTO) உள்ள பெற்றோர் ஆசிரியர் அமைப்பிற்கு ஆதரவளித்து அவர்களை கைத்தூக்கி விடும் ஒரு சிறு முயற்சியே! பெற்றோர் ஆசிரியர் அமைப்பின் மாநாடுகள் அல்லது கூட்டங்கள் நடைபெறும் போதெல்லாம், கல்வியாண்டு முழுவதும் ஆசிரியர்களுக்கான மதிய உணவுப் பற்றாக்குறை ஏற்படுகிறது.
பெட் ஷாலோம் சபையின் நோக்கம், அதன் உறுப்பினர்களுக்கும் பரந்த சமூகத்திற்கும் ஆதரவளிக்கும் வகையில், ஆன்மீக வளர்ச்சி, கற்றல் மற்றும் கருணைச் செயல்களை மையமாகக் கொண்ட ஒரு வரவேற்கும் யூத சமூகத்தை வளர்ப்பதாகும். பரதநாட்டியத்தின் வழியாக பகிர்வேதாடு மட்டுமல்லாமல், ஒரு அர்த்தமுள்ள தாக்கத்தையும் ஏற்படுத்த முயல்கின்றனர். இந்த நற்காரியத்திற்கு நன்கொடை அளிப்பதன் மூலம், ஓக் பாயிண்ட் பெற்றோர் ஆசிரியர் சங்கமும் (OAk Point PTO) பெட் ஷாலோமும் (BET SHALOM CONGREGATION) பயனைடகின்றனர்.
இவ்வுயரிய நோக்கத்தை முன்னெடுத்து, அதை ஆண்டு தோறும் திறம்பட நடத்தி வரும் திருமதி. அமிர்தவல்லி அவர்களுக்கு நன்றிகள் பல. இது சிறிய காரியம் அல்ல! உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், தங்களின் நடனம் மூலம் நன்கொடை பெற்று அதை வழங்குகின்றனர். மாணவர்களுக்கு இது பெரிய உந்துதைலயும், தலைமைத்துவம், குழு பண்பு, மற்றும் நிதி அறிவு போன்ற முக்கிய வாழ்க்கைத் திறன்களை வளர்க்கவும், அதே நேரத்தில் சமூக உரிமை உணர்வை வளர்க்கவும், பயிலும் போதே உதவும் மனப்பான்மையையும் தருகிறது. இதில் பங்கு பெற்ற ஆறு மாணவர்களின் (அதிதி கௌசிகன், நித்யா குன்டரு, ராம்சரண் ஆத்தூர் பாலாஜி, அனன்யா கோலி, கிருத்தி தேனப்பன், மேகா ஸ்ரீதர்) நடனத்தில் நவரசத்தையும் உணரலாம். காண்போரை வியப்பில் ஆழ்த்தினர் என்றால் அது மிகையாகாது!
பாவம் (பாவனை), ராகம் (இசை), தாளம் (தாளம்), மற்றும் நாட்டியம் (நடனம்). இதன் வேர்கள், பரத முனிவரால் இயற்றப்பட்ட, கலைகள் பற்றிய பண்டைய சமஸ்கிருத நூலான நாட்டிய சாஸ்திரத்தில் உள்ளன.
நிருத்தம்: சிக்கலான தாள அமைப்புகளை எடுத்துக்காட்டும் தூய நடன அசைவுகள்.
நிருத்யம்: சைகைகள் மற்றும் முகபாவைனகள் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்துதல் மற்றும் கதை சொல்லுதல்.
நாட்டியம்: கதாபாத்திரங்கைளயும் கதைகளையும் நாடகீயமாகச் சித்தரித்தல்.
பரதநாட்டியம் என்பது வெறும் நடிப்பு மட்டுமல்ல, அது பூவுலகிற்கும் தெய்வத்திற்கும் இடையிலான ஒரு புனிதப் பயணம். மாணவர்கள் தொடங்கும் போது, அவர்களின் ஒவ்வொரு அசைவும் பக்தி, மகிழ்ச்சி, அமைதி ஆகியவை வடிவம் பெறும் ஓர் உலகிற்கு நம்மை எடுத்துச் செல்லும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!
புஷ்பாஞ்சலியின் தொடக்கத்திலிருந்து தில்லானா மற்றும் மங்களம் வரை, மாணவர்கள் நடனத்தின் மூலம் பார்வையாளர்களை ஆனந்தத்தில் மூழ்க வைத்தனர். காண்போர் மனதை கொள்ளை கொண்டனர்.
இசை, வெளிப்பாடு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் இந்தப் பயணத்தை நாம் நிறைவு செய்யும் இவ்வேளையில், இந்த அர்த்தமுள்ள தருணத்தில் பங்கேற்ற அனைவரும் தங்கள், வாழ்வில் ஒரு நற்செயலில் கை கோர்த்து உள்ளனர் எனலாம் .
“காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது”
சிறியதாக இருந்தாலும் சரியான நேரத்தில் வழங்கப்படும் உதவி, உலகத்தைவிட மிகவும் பெரியது. மாணவர்கள் இதை நிதி திரட்டல் மூலம் புரிந்துகொள்ள முடிந்தது.
இன்று வருகை தந்து உள்ள அனைவரின் வருகையும், ஆதரவும், கலைக்கு ஊக்கமளிக்கவும், இணைக்கவும், மாற்றத்தை உருவாக்கவும் உள்ள ஆற்றலுக்கு ஓர் சான்றாக விளங்குகிறது!
நன்றி
உமா 🙏🙏







