\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

டி.என். பாலமுரளி – கலந்துரையாடல்

Filed in அன்றாடம், பேட்டி by on November 27, 2016 0 Comments

tnbalamurali18-620x411

பனிப்பூக்கள்: உங்களுக்குக் கர்நாடக சங்கீதத்தின் மேல் கொண்ட ஈர்ப்புக்குக் காரணம் என்ன? எப்படித் தொடங்கினீர்கள்?

டி.என். பாலமுரளி: எனக்கு ஐந்து வயது இருக்கையில் அம்மா என்னையும் என் சகோதரியையும் பாட்டுக் கிளாசில் சேர்த்தார்கள். என்னுடைய அம்மாவும், மாமாவும் இசையில் ஈடுபாடு கொண்டவர்கள். அம்மா மகாராஜபுரம் சந்தானம் அவர்களிடம் சங்கீதம் கற்றுக்கொண்டவர். நான் பல பாட்டுப் போட்டிகளில் பங்கெடுத்து வெற்றி பெற்றேன். Sri Lanka Broadcasting Corporation(SLBC) நிகழ்ச்சிகளில் பாடத் தொடங்கினேன். இவர்கள் எல்லோரும் கொடுத்த உற்சாகம் என்னைச் சங்கீதத்தில் ஈர்த்தது எனச் சொல்லலாம்.

இதைத் தவிர, நான் ஒவ்வொரு இசைக்கருவியாக வாசிக்கத் துவங்கினேன். முதலில் என் அம்மாவிடம் வீணை கற்றுக்கொண்டேன். என் மாமாவிடம் ஆர்மோனியம் வாங்கி நானே கற்றுக்கொண்டேன். இது தான் எனக்கு கீபோர்டு வாசிப்பதற்குத் தொடக்கமாக இருந்தது. என் மாமனாரிடம் புல்லாங்குழல் வாங்கி அதையும் கற்றுக்கொண்டேன். இந்தக் கருவிகள்எல்லாம் இருந்ததால் எனக்கு வாசிக்க நாட்டம் வந்தது.

நான் பத்தாம் வகுப்புப் படிக்கையில், ஒரு இசை நிகழ்ச்சியில் மோகன் ராஜு என்ற கீபோர்டு கலைஞரைச் சந்தித்தேன். அவர் வைத்திருந்த கீபோர்டை வாசிக்க எனக்கு ஆசையாக இருந்தது. அவரிடம் கேட்டு வாசித்துக் காட்டினேன். அவர் என்னை அவர் வீட்டுக்கு அழைத்து வாசித்துக் காட்டச்சொன்னார். அதைக் கேட்டுவிட்டு, அவரே எனக்குக் கற்றுக்கொடுக்கத் துவங்கினார். அவருக்கு தெரிந்த ஒரு இசைக்குழுவை என்னைத் தலைமை தாங்கச்சொன்னார்.

பனிப்பூக்கள்: இலங்கை சங்கீதத்துக்கும் தென் இந்திய சங்கீதத்துக்கும் ஏதேனும் வேறுபாடு உண்டா?

டி.என். பாலமுரளி: அப்படி ஒன்றும் வித்தியாசம் இல்லை. தென் இந்திய சங்கீதத்தை நாங்கள் கர்நாடகச் சங்கீதம் என்கிறோம், அதைத்தான் இலங்கையிலும் பின் பற்றிவருகிறோம். தென் இந்திய வித்துவான்கள் பலர் இலங்கைக்கு வந்து இந்தச் சங்கீதத்தை வளர்த்தனர். மகாராஜபுரம் சந்தானம் அவர்கள் அங்கே பள்ளி நடத்தி பலருக்குச் சொல்லிக் கொடுத்தார். சிங்களர்கள் இடையே வட இந்திய சங்கீதமான ஹிந்துஸ்தானி சங்கீதம் பிரபலமாக உள்ளது.

பனிப்பூக்கள்:. நீங்கள் நடத்தும் ஸ்ருதி இசைப் பள்ளியை பற்றிச் சற்று சொல்ல முடியுமா?

டி.என். பாலமுரளி: நான் கனடாவில் 2005 ஆம் ஆண்டு ஸ்ருதி மியூசிக் அகாடமியை ஆரம்பித்தேன். என்னுடைய தொழில்முறைபடிப்பு மாஸ்டர் இன் கம்ப்யூட்டர் இன்ஜீனீரிங். இப்பொழுதும் பேங்க் ஆப் அமெரிக்காவில் வேலை செய்துகொண்டுதான் இருக்கிறேன். நான் கற்றுக்கொண்டதை அடுத்த தலைமுறையினருக்குக் கற்றுக்கொடுத்து, அதை அவர்கள் உள்வாங்கி, பின் வெளிக்கொணரும்பொழுது அதில் இருக்கும் சந்தோஷத்திற்கு இணை ஏதும் இல்லை.

எங்களிடம் நூறு மாணவர்களுக்கு மேல் இருக்கிறார்கள். அவர்கள் வருடா வருடம் மே மாதம் ஒன்று கூடி நிகழ்ச்சிகள் நடத்துவோம். 2017 ஆண்டுக்கான பணி தொடங்கிவிட்டது. அவர்கள் படித்ததற்குச் சான்றிதழ் கொடுத்து ஒவ்வொரு நிலையாகக்கொண்டு சென்றிருக்கிறோம். எங்கள் பள்ளியில் வாய் பாட்டு, வயலின், புல்லாங்குழல், கீபோர்டுகற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

பனிப்பூக்கள்: திரைப்படங்களில் மேற்கத்திய சங்கீதம் அதிகம் பிரயோகப்படுத்தப் படுகிறது. இது நமது கலாச்சாரத்தை எவ்விதம் பாதிக்கிறது?

டி.என். பாலமுரளி: தியாகராஜ பாகவதர் காலத்தில் இருந்த மாதிரியே இப்போதும் இசை அமைக்க முடியாது. MSV சார் வந்து ஒரு வித்தியாசமான தனித்தன்மையுடன் மெலடி கொண்டுவந்தார். அவருடைய பாடல்களில் வயலின் போன்று மேற்கத்திய இசை கருவிகளைப் பயன்படுத்தி ஓப்பரா போன்று பாடல்கள் கொண்டுவந்தார். “எங்கே நிம்மதி” போன்ற பாடல்கள் எல்லாம் மேற்கத்தியச் சங்கீதத்தை ஒற்றி தான் இருக்கிறது. அவர் பாடல்கள் எல்லாம் அந்தக் காலத்தில் வரவேற்கப்பட்டதோடு இன்னும் அழியாமல் இருக்கின்றன. இன்றைக்கும் அவர் பாட்டுக் கேட்டால் ரசிக்கத்தக்க விதத்தில் இருக்கிறது.

அதற்குப் பிறகு இளையராஜா சார் கர்நாடக சங்கீதத்தை வைத்து, கல்யாணி ராகம் மாதிரி பல ராகங்களில் ஒரு சில மாற்றத்தைப் புகுத்தி தனித்தன்மை கொண்டுவந்தார். பிறகு A R ரஹ்மான் அவர்கள் கீபோர்டு, சிந்தசைஸர் போன்ற கருவிகள் பயன்படுத்திப் புதுமையைக் கொண்டுவந்தார். அவருடைய கர்நாடக ராகம் கொண்ட பாடல் பார்த்தால் கூட, அதில் ஒரு புது வித ரம்யம் இருக்கும். பீட்ஸ் எடுத்துக்கொண்டாலும், ஒரு அரேபிய பீட்ஸ் எடுத்து கர்நாடக பாடல்களுக்குக் கொடுத்து புதுமையைக் காட்டியுள்ளார்.

இதெல்லாம் பார்க்கும் பொழுது, இது ஒரு வளர்ச்சி என்று தான் சொல்லுவேன். பாதிப்பு என்று சொன்னால், இன்று வரும் பாடல்களில் கர்நாடகச் சங்கீதத்தின் கருவிகள் வீணை, நாதஸ்வரம், தவில் போன்ற இசைக்கருவிகள் குறைந்துவிட்டன.

பனிப்பூக்கள்: செயற்கை நுண்ணறிவு படைத்த கணினிகள் இசையை உருவாக்கத் துடங்கி உள்ளன. கர்நாடக சங்கீதமும் அவ்விதம் இசைக்கப் படும் நிலை வந்துவிடுமா?

டி.என். பாலமுரளி: இது போல் நாங்களும் செய்து கொண்டு இருக்கிறோம். ஒரு கல்யாணி ராகமோ அல்லது சங்கராபரான ராகமோ கணினியிடம் கொடுத்துவிட்டு, இத்தனை கவுண்டிற்கு இது வேண்டும் என்று சொன்னால், கணினி அதற்கேற்ப பீட் போட்டு கொடுத்து விடுகிறது. அதற்கு மேலே நாங்கள் பாட்டு பாடுவோம். அது போலவே தவறான ஸ்ருதியை பாடுபவர்களுக்காகப் பிட்ச் கரெக்க்ஷன் ப்ரோக்ராம் (pitch correction program ) வந்துள்ளது. பாடின பிறகு, அந்தப் பாடலை இந்த ப்ரோக்ராம் கொடுத்தால், தவறான ஸ்ருதியை சரிசெய்து கொடுத்து விடுகிறது. இந்தியாவில் பல பாடகர்கள்/பாடகிகள் இதனைப் பயன்படுத்துகிறார்கள்.

அந்தக் காலத்தில் இளையராஜா சார் நூறு பேருக்கு மேல் ஒரே சமயத்தில் வாசிக்க வைத்து ரெகார்டிங் பண்ணினார். இப்ப எல்லாம், இரண்டு பேர் பாடினாலும், யார் மற்றொரு பாடகர் என்று பாட்டு வெளியில் வரும் வரை தெரியாது. எல்லாமே தனித் தனியா எடுக்கிறார்கள்.

பனிப்பூக்கள்:. சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகள் சிறுவர்களைப் பாடச்செய்து உற்சாகப் படுத்துகின்றனர். அதைப் பற்றி உங்கள் கருத்து?

டி.என். பாலமுரளி: இலைமறை காய் போன்று இருக்கின்ற கலைஞர்களை வெளியில் கொண்டுவருவதற்கு ஊன்றுகோலாய் இருக்கிறது அந்த நிகழ்ச்சி. இந்தியாவில் சூப்பர் சிங்கர் இருக்கிற மாதிரி கனடாவிலும் சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சி இருக்கிறது. அதில் வெற்றி பெற்றவர்கள் இப்பொழுது பாடல் உலகில் முன்னிலையில் இருக்கிறார்கள்.

பனிப்பூக்கள்: நீங்கள் யேசுதாஸ், உன்னிகிருஷ்ணன் போன்றவருடன் இசை நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளீர்கள் . அந்த அனுபவத்தைப் பற்றிப் பகிர்ந்து கொள்ள முடியுமா?

டி.என். பாலமுரளி: நான் யேசுதாஸ், உன்னிகிருஷ்ணன் அவர்களுக்கெல்லாம் வயலின் வாசித்திருக்கிறேன். சுசிலா அம்மா, PB ஸ்ரீனிவாஸ், TM சௌந்தராஜன் அவர்களின் ப்ரோக்ராமில் எல்லாம் பங்கு பெற்றிருக்கிறேன். அதே போல், ஸ்ரீலங்காவில் இருக்கையில் SPB சார், சித்ரா அம்மா வந்திருந்தார்கள். அவர்கள் உடன் பங்குபெற்று இருக்கிறேன்.

அவர்கள் எல்லாம் முதிந்த கலைஞர்கள். ஆனாலும் எங்களைத் தட்டி கொடுத்து ஊக்குவிப்பார்கள். அவர்கள் எங்களை மேடையில் பாராட்டி உற்சாகப்படுத்துவார்கள்.

பனிப்பூக்கள்: திரைப்படங்களில் உங்களுக்குப் பிடித்த இசையமைப்பாளர் யார்?

டி.என். பாலமுரளி: இளையராஜா சார் தான். அதற்கப்புறம் MSV சார், அதுக்கப்பறம் AR ரஹ்மான் சார். ஆனாலும் மூன்று பெரும் மூன்று பரிமாணங்கள் என்று தான சொல்லுவேன். இளையராஜா சார் மெலடியைக் கையாண்ட விதம் மிக வித்தியாசமாக இருக்கும். ஒவ்வொரு ராகத்திலும், அதை எப்படி ஜனரஞ்சகமாக்கலாம் என்று யோசித்துச் செய்வார். MSV சார் மெலடி கேட்டால், அந்த டியூன் இன்றைக்கும் ஞாபகத்தில் இருக்கும். அது போலவே ARR சார் பாடல்கள். அவருடைய ஆர்க்கெஸ்ட்ரேஷன் கேட்டால் ஒரு இனிமையான உணர்வு கொடுக்கும். அவர் செய்திருக்கும் ஒவ்வொரு பாட்டிலும் வித்தியாசம் இருக்கும் .

அதுக்கப்பறம் வித்யாசாகர், இமான் பாடல்கள் கேட்க மிக இனிமையாக இருக்கிறது. ஆனால் தனித்தன்மை என்று எடுத்துக்கொண்டால் இளையராஜா சார் பாட்டு தான். அவருடைய ஒரு பாட்டு போல் இன்னொரு பாடல் இருக்காது.

T N Balamurali

-பிரபு ராவ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad