ஹைக்கூ கவிதைகள்
முதல் காதல் …!
முகப் பொலிவோடு நான்
முதலாய் அவன் …!
முகமறியாக் காதலில்
முழுவதுமாய் அவன் …!
முப்பொழுதும் அவன் நினைவால்
முழுநிலவாய் நான் …!
முதல் காதல் முகவுரை ஆகுமா..?
முடிவுரை ஆகுமா …?!
மூர்ச்சையாகிறேன் நானே…!!
****
உலகமயமாக்கல் !
முதுகெலும்பை முறித்து
முடக்கியது விவசாயம்
உலகமயமாக்கல் …!
****
கருக்கலைப்பு
கல்யாண நாளன்று
கருக் கலைப்பு
செய்தாள்
தன் காதலை
பெற்றோருக்காக…!
****
மது – மாது …..!
வழியில் மயங்கி
வீழ்ந்தேன் – மது…!
விழியில் மயங்கிப்
போனேன் – மாது….!
மீசை
மீசைக்கும் இறக்கைகள் உண்டோ …?
மனம் ஏனோ
பறக்கிறதே வானில் …!
****
மின்னல் …!
அவள்
இமைகள் மூடி
திறக்கையில்
என்னுள் ஒர்
மின்னல் …!
****
தமிழ்
எழுதுகோலைப் பிடித்த கையில்
ஆண்ட்ராய்டைப் பிடித்ததால்
கொலை செய்யப்பட்டது
தமிழ் …!
***
நாணம் …!
நீ வீணையாய்
எனைமீட்ட
என்னுள்
நாணுகிறேனடா …!
****
மச்சம் …!
உன் உதட்டின் மேல்
அழகான புதுக்கவிதை நேற்று பூத்த பரு …!
***
அவளது இதழ்கள் …!
மலரொன்று
மலராமல்
மணம் வீசி
மயக்குகிறதே….!
***
மல்லிகை ….!
தரை தொடாத
விழுதுகளில்
ஊஞ்சலாடுகிறது
அவள் கூந்தலில்
மல்லிகை …!
****
ஒத்திகை …!
ஒத்திகை இல்லாத நடனம் ….
மழலையின் நடை …!
****
பூ….!
பறிக்க மனமில்லை
பதியமிட்டது
பாவை அவள்
அல்லவா…!
****
பூ …!
கறுத்த காட்டில்
நரைத்த மலர்கள்
மல்லிகைப்பூ …!
நாணல் …!
கரையில் நாணல்
அணைத்து விளையாட
ஆளில்லை ….!
*****
தரிசனம் …!
கண்மூடி வணங்கினேன்
கிடைத்தது
தேவியின் தரிசனம் ….!
கூடவே முத்தமும்
கரிசனமாய்…!
****
வளையல் ….!
காக்கும் கரங்கள்
அடகுக் கடையில்
வளையல் …!
****
நட்சத்திரங்கள் …!
புள்ளி வைத்த
வானப் பெண்
கோலமிட
மறந்தாளோ …..!?
வான் வீதியெங்கும்
நட்சத்திரங்கள் …!
****
முதிர் கன்னி …!
கருங்கூந்தலில்
வெள்ளி மின்னல் ….!
வாழ்வில்
கறுத்த மேகம் ….!
ஜன்னல் …!
மெல்லத் திறந்தது கதவு
அவளின் கரிசனம்
ரவிக்கையில் ஜன்னல் …!
****
திணறல் …!
துகிலுரிக்க முடியாமல்
துச்சாதனன் திணறல்
எதிரே நடிகை ..!
****
குற்றம் …!!
வீட்டில் மரம்
வளர்ப்பது குற்றமாமே
பிறகெப்படி நீ ….?
என் சந்தனமே …!
*****
டாஸ்மாக்…!!
நாட்டுக்கு வருவாய்
வீட்டுக்கு செலவாய்
டாஸ்மாக் …!
***
ஜனனம் ..!
ஒவ்வொரு உயிரும்
ஜனிப்பது
மோதலில் தான் …!
ஒவ்வொரு காதலும்
பிறப்பது
மோதலில் தான் …!
மதிப்பு …!
எண் ஒன்றாக நான்
பூஜ்ஜியங்களாக நீ
என்னில் …
இடமா….? வலமா…?
***
ஹைக்கூ ….
சிரிக்கின்ற பூக்களை விட
சிதறுகின்ற இதயங்களே
அதிகம் …!!
***
மானிடரா…?
மண்ணில் பிறந்த யாவரும் மானிடரா?
மனிதன் மிருகம் ஆகாத
வரை….!
****
மின்னல் ….!!
ஆண் மேகமும் பெண் மேகமும் முட்டி உரசுவதால்
பிறந்ததோ…!!
***
அந்திவானம்…!!
ஒப்பனை அதிகமென்று
மேகத்தினுள்
இளைப்பாருகிறதோ …..!!
****
திருநங்கை ..!!
பிரம்மனுக்கும்
மறதி உண்டு …!!
**
மழை …!!
வானம் அழுகிறது
பூமி சிரிக்கிறது …!
**
வியர்வை ..!
வறுமையைப்
போக்க வந்த
நதி ..!
***
பூக்காரி …!
மலர்ந்த மலரைக்
கண்டு வாடினாள்
பூக்காரி…!!
– உமையாள்
நேரத்தோடு நாம் பயணம்
செய்வோம்!…
நேரமும் நம்மோடு பயணம்
செய்யும்.!…
DORAI RAJ
(துரைராஜ்)
பூ பூவாய்
பூத்த பூ
மாலையாய்
சேர்த்த நார்