\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

இருமலைப் போக்க எவ்வளவு காலம்?

Filed in அன்றாடம் by on February 21, 2013 0 Comments

cough420x279நாம் நுண்ணுயிர் எதிர் மருந்துக்களை (Anti Biotics) பாக்டீரியாக் கிருமிகளுக்காக உட்கொள்ளினும், பெரும்பாலான நோயாளிகள் வைரஸ் கிருமிகளினால் தொற்றுவியாதிக்கும் இதை  உட்கொள்வார்கள். இந்த மருந்து வகைகளை  உட்கொள்ளும் அரைவாசியிலும் மேற்பட்டோருக்கு இருமலும், செருமலும் வருவது நெஞ்சின் சுவாசப் பிராணப்பாதையில் வைரஸ் கிருமி ஏற்படுத்தும் தடுமன், சளி போன்ற தொற்று நோய்களினால் ஆகும். ஆயினும் இவற்றில் பத்து சதவீதமானவர்களே  பாக்டீரியாக் கிருமியின் தாக்கத்திற்கு ஆளானவர்கள்.

எனினும் ஏன் தான் நோயாளிகள் நுண்ணுயிர் எதிரி மாத்திரைகளை எடுத்தவாறு உள்ளனர்  என்பது மிகவும் வியப்பான விடயமாகவுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட அனல்ஸ் ஆஃப் ஃபேமிலி மெடிசின் (Annals of Family Medicine) என்னும் வெளியீட்டில் உள்ள ஆராய்ச்சிக் கட்டுரையின்படி பெரும்பாலான நோயாளிகள் தமது இருமல் எவ்வளவு காலம் நிலைத்திருக்கும் என்பதைப் பற்றித் தவறாகக் கணித்துக் கொண்டே போகின்றனராம். நோயாளிகள் இயற்கையாகவே தமது உடம்பு தேறும் முன்னர் தேறவேண்டும் என்று நினைத்து வைத்தியரிடம் மருந்து வாங்குவது தற்போது வழக்கமாகிவிட்டது.

ஜோர்ஜியாப் பல்கலைக்கழக மருத்துவர் மருத்துவ கலாநிதி மார்க் எபெல்லும் அவர் ஆராய்ச்சிக்குழுவும் ஏறத்தாழ 500 வயதிற்கு வந்தவர்களை பேட்டி கண்டபோது அவர்கள் யாவரும் தமது இருமல்கள் 7-9 நாட்களில் தணிந்து விடும் என்றார்களாம்.

ஆயினும் தற்கால மருத்துவ சிகிச்சைக் குறிப்புக்கள் கட்டுரைகள் சாதாரண மக்கள் எண்ணங்களிலும் உண்மையில் இரு தடவைக்கு மேலே அதாவது 18 நாட்கள் வரை இருமல் நீடிக்கலாம் எனத் தெரிவிக்கிறது.

சாதாரண நோயாளிகள் ஏன்தான் இப்பேர்ப்பட்ட குறைந்த நாளில் இருமல் அகன்றுவிடும் என்று எண்ணுகிறார்கள் என்றும் தெரியவில்லை. மருத்துவர் எபேலின் கருத்து   சாதாரண காய்ச்சல் 7 நாட்களில் மாறிவிடும், ஆனால் மக்கள் அதனை மறந்து குழப்பிக்கொள்ளுகிறார்களோ என்னவோ என்கிறார்.

நோயாளிகள் பிழையோ சரியோ முன்பு நுண்ணுயிர் எதிரி மருந்துக்களைப் பாவித்திருந்தால் தமது வைரஸ் கிருமித் தாக்கம் அந்த மருந்தால் தீரும் என்றும் வழமைக்கு மாறாகத் தொடர்ந்து நம்புகிறார்களாம்.

தேவையில்லாமல் நுண்ணுயிர் எதிரி மருந்துக்களை அடுத்தடுத்து எடுப்பதன் காரணத்தால் ஒரு வகையில்  பாக்டீரியாக்கிருமிக்கு எதிரான சிகிச்சைகளுக்குப் பாழடைவையும் கொண்டு வர வழிவகுக்கலாம் என அமெரிக்க நோய்தடுப்பு முகாமைத்துவம் அறிவித்துள்ளது. இதனால் தேவையான தடுப்புச் சிகிச்சைகளை மட்டுமே கையாளுங்கள் என பொதுசனத்திற்கு அமெரிக்காவில் தொடர்ந்து அறிவித்தவாறும் உள்ளனர்

 – யோகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad