\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

பாலுமகேந்திரா ஒரு சகாப்தம்

balumahendra_520x5201939 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் நாள்  ஈழத் திருநாட்டின் மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பில்  “அமிர்தகழி” என்ற சிற்றூரில் பிறந்தவர். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் பாலநாதன் மகேந்திரன் என்பதாகும். சிறு வயது முதலே படப்பிடிப்பில் ஆர்வம் மிக்க இவர் லண்டனில் தன்னுடைய இளநிலைக் கல்வி படிப்பினை முடித்து பின்னர் திரைப்பட ஒளிப்பதிவுக்கலை பற்றிய படிப்பில் 1971ல் தங்கப்பதக்கம் பெற்றார். தனது பட்டப் பின் படிப்புக்காக முழுவதும் இயற்கை ஒளியைக் கொண்டு வடிவமைத்த திரைப்படமே அவரை மிகவும் உச்சத்துக்குக் கொண்டு போனது.

ஒளிப்பதிவில் சுயம்பாக வளர்ந்த மனிதன் எனப் பெயரெடுத்த இவர் தனக்கு என்று ஒரு புதிய பாணியினை அமைத்துக் கொண்டார். இயற்கை ஒளியினை அதிகமாக பயன்படுத்துவது இவருடைய தனித்துவம். புகழ் பெற்ற மலையாள திரைப்பட இயக்குனரான  “ராமு காரியத்” என்பவர் தனது  ‘நெல்லு’ என்ற மலையாளப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய அழைத்தார். அதற்கு முன்னர் யாரிடமும் உதவியாளராகக் கூட இருந்த அனுபவம் எதுவும்மின்றி அப்படத்துக்கு தனது சொந்த முயற்சியால் ஒளிப்பதிவு செய்தார். அந்த ஆண்டில் (1972) சிறந்த ஒளிப்பதிவுக்கு கேரள மாநில விருது பெற்றார். அதைத் தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். கெ. எஸ். சேதுமாதவனின் ‘சுக்கு’, ‘ஜீவிக்கான் மறந்நு போய ஸ்தீரி’ ‘சட்டக்காரி’ பி என் மேனோனின் ‘பணிமுடக்கு’ போன்றவை முக்கியமான படங்கள். தெலுங்கில் பிரபலமான சங்கராபரணம் படத்தை ஒளிப்பதிவு செய்தார்.

. தனக்கு நிகர் தானே எனத் தவிர்க்க முடியாத ஒளிப்பதிவாளராக வலம் வந்து கொண்டிருந்த பாலு மகேந்திரா  1977 இல் இயக்குனராக அவதாரம் எடுத்தார். தனது முதல் படமான ‘கோகிலா’வை கன்னட மொழியில் இயக்கினார். அதன் பின்னர் அதே ஆண்டு பாலுமகேந்திரா ஒளிப்பதிவுசெய்த முதல் தமிழ்படம் “முள்ளும் மலரும்” வெளியாயிற்று. பின்னர் 1978ல் தனது இயக்கத்தில் வந்த முதல் தமிழ் படமான ‘அழியாத கோலங்கள்’ ஐ இயக்கி பெரும் புகழ் பெற்றார்.

இயக்குனர் மணிரத்தினம் உட்படப் பல புகழ் பெற்ற இயக்குநர்களின் படங்களுக்கு பாலு மகேந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். சிறந்த மேடைப் பேச்சாளராகவும் நல்லாசானாகவும் வாழ்ந்து காடியவர். பேச்சுக்களின் போது படைப்பாற்றல், நுண்ணுணர்வு பற்றி பின்வருமாறு கூறுவார் “ஒரு படைப்பாளிக்கு அடிப்படைத்தேவை நுண்ணுணர்வு. அந்த நுண்ணுணர்வு இல்லையென்றால் அவன் படைப்பாளியே அல்ல” என்பதாகும்.

“வீடு”, “சந்தியாராகம்”, “வண்ண வண்ண பூக்கள்”. ஆகிய மூன்று படங்களுக்கும் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது பெற்றுள்ளார். “கோகிலா” – கன்னடம் “மூன்றாம் பிறை”- தமிழ் ஆகியன ஒளிப்பதிவுக்கான தேசிய விருதுகளைப் பெற்றன. இவை தவிர “கோகிலா”, “அழியாத கோலங்கள்” ஆகியவை மாநில அரசு விருது பெற்றன. “ஜூலி கணபதி” சிறந்த படத்தொகுப்புக்கான சாந்தாராம் விருது பெற்றது. இம்மூன்று துறைகளிலும் விருதுபெற்ற ஒரே திரைப்பட நிபுணர் அவரே.

யாரையும் மனம் நோகும் படி பேசத் தெரியாத பாலுமகேந்திரா அவர்கள் என்றுமே சில குறிப்பிட்ட ரகமான படங்களை மட்டுமே தெரிவு செய்து பங்காற்றியுள்ளார். எந்தக் கரணம் கொண்டும் பணம் சம்பாதிக்கும் நோக்கில் படமெடுப்பவராகத் திகழாமல் இருந்தது இவரின் மிகப் பெரும் சிறப்பு. திரைப்படத் துறை மட்டுமன்றி எழுத்தாளர்களை ஊக்குவிப்பவராகவும் இவர் திகழ்ந்தார். அழையாத விழாவாக இருந்தாலும் அது ஒரு புத்தக வெளியீடு என அறிந்தால் அந்த இடத்துக்கு முதல் ஆளாகச் செல்வது அவரின் வழக்கம்.

பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ததுடன்  மட்டுமன்றி துடிப்பு மிக்க புதிய தலைமுறையை வளர்த்தெடுத்த பெருமையும் இவரைச் சாரும். பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய பலர் தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற இயக்குநர்களாக உள்ளனர். “சேது”, “நந்தா”, “பிதாமகன்” போன்ற படங்களை இயக்கிய பாலா, பாலு மகேந்திராவின் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். இவருடன் ராம், வெற்றி மாறன், சீமான் போன்றவர்களும் இன்னும் பலரும் உதவியாளர்களாக இருந்தவர்கள். தமிழின் முக்கியமான பல படைப்பாளிகளின் ஆக்கங்களை  ‘கதைநேரம்’ என்ற சின்னத்திரை நிகழ்ச்சியூடாக காட்சிப்படுத்தி தமிழ் ரசிகர்களுக்குக் கொண்டுசென்ற பெருமையும் இவரைச் சாரும்.

இந்திய சினமாவின் தவிர்க்க முடியாத பாலு மகேந்திரா ஒரு சுயம்பாக வளர்ந்த மனிதன், இவர் இயக்கி வெளியிட்ட படங்கள் 26. தேசிய விருதுகள் பெற்றவை 5. மாநில அரசு விருதுகள் பெற்றவை 3. நந்தி விருதுகள் 2. சினிமாவுக்காகவே கடைசிவரை வாழ்ந்த ஒரு தன்னிகரில்லாத் தமிழன் தனது தள்ளாத வயதில் “தலைமுறைகள்” படம் மூலம் தனது நடிப்புத் திறனை முதன்முதலாக வெளிக்கொண்டு வந்தார். துரதிஷ்டவசமாக அதுவே அவரது கடைசிப் படமாகவும் அமைந்தது. தமிழ் திரையுலகம் அழுது கண்ணீர் வடிக்க மீளாத் துயிலினை 2014 ஆம் ஆண்டு மாசி மாதம் 13 ஆம் நாள் மேற்கொண்டார். இன்னுடல் மறைந்தாலும் அவர்தம் புகழ் பல்லாண்டு வாழும். வாழ்க அவர் தம் புகழ். வளர்க தமிழ் .

பின்னிணைப்பு

தேசிய விருதுகள்

ஆண்டு திரைப்படம் மொழி          துறை

1978            கோகிலா             கன்னடம்          ஒளிப்பதிவு

1983            மூன்றாம் பிறை தமிழ்                      ஒளிப்பதிவு

1988            வீடு            தமிழ் இயக்கம்

1990 சந்தியா ராகம் தமிழ் இயக்கம்

1992 வண்ண வண்ண பூக்கள் தமிழ் இயக்கம்

மாநில அரசு விருதுகள்

ஆண்டு திரைப்படம் மாநில அரசு துறை

1974 நெல்லு கேரளம் ஒளிப்பதிவு

1975 பிரயாணம் கேரளம் ஒளிப்பதிவு

1977 கோகிலா கர்நாடகம் திரைக்கதை

நந்தி விருதுகள்

ஆண்டு திரைப்படம் மொழி துறை

1978 மனவூரி பண்டவலு தெலுங்கு ஒளிப்பதிவு

1982 நீர்க்காசனா தெலுங்கு ஒளிப்பதிவு

இயக்கிய திரைப்படங்கள்

கோகிலா

அழியாத கோலங்கள்

மூடுபனி

மஞ்சு மூடல் மஞ்சு (மலையாளம்)

ஓலங்கள் (மலையாளம்)

நீரக்ஷ்னா (தெலுங்கு)

சத்மா (ஹிந்தி)

ஊமை குயில்

மூன்றாம் பிறை

நீங்கள் கேட்டவை

உன் கண்ணில் நீர் வழிந்தால்

யாத்ரா

ரெண்டு தொகல திட்ட (தெலுங்கு)

இரட்டை வால் குருவி

வீடு

சந்தியாராகம்

வண்ண வண்ண பூக்கள்

பூந்தேன் அருவி சுவன்னு

சக்ர வியூகம்

மறுபடியும்

சதி லீலாவதி

அவுர் ஏக் ப்ரேம் கஹானி (ஹிந்தி)

ராமன் அப்துல்லா

ஜூலி கணபதி

அது ஒரு கனாக்காலம்

தலைமுறைகள்

– ஈழக்குருவி –

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad