\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

வாழ்த்து மடல் – தரணி

Filed in வாசகர் பக்கம் by on February 25, 2014 1 Comment

மினசோட்டாவில் உள்ள பனிப்பூக்கள் தமிழ்நாட்டில் உள்ள வள்ளுவர் கலைக்கல்லூரியில் கலைப்பூக்களாக பூத்துக் குலுங்குகிறது.  இணையதளத்தில் வள்ளுவர் கல்லூரிக்கு வாய்ப்புகளை வழங்கும் பனிப்பூக்களுக்கு இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

பனிப்பூக்கள் இணையதளத்தில் வள்ளுவருக்கு எப்படி மாணவர்களின் திறமையை ஊக்குவிக்கிறது என்பதனை உங்கள் முன் பகிர்ந்து கொள்கிறோம்.  பனிப்பூக்களானது நாணயத்தின் இருபுறமும் உள்ளது போல் செயல்படுகிறது.  ஒருபுறம் கலை, கட்டுரை, கவிதை, சிந்தனை போன்ற வளரும் குழந்தைகளின் திறமைகளை ஊக்குவிக்கிறது.  மறுபுறம் அன்பு, அரவணைப்பு என கட்டித் தழுவுகிறது.

அமெரிக்காவில் உள்ள தமிழர்களிடம் பேசுவது என்பது பனிப்பூக்களால் அண்டை வீட்டாரிடம் உறவாடுவது போன்ற ஒரு உணர்வு.  உறவுகளையும், உணர்வுகளையும் பகிர்வது என்பது ஒரு தாய்ப்பசு தன் கன்றினை நுகர்வது போல் உள்ளது.  தமிழர்களுக்கு நீங்கள் காட்டும் தமிழ்;ப்பாசம் ஒரு குழந்தை தன் தாயின் மடியில் தலைவைத்துக் கொள்வது போன்ற உணர்வினைக் கொடுக்கிறது. அங்குள்ளவர்களின் தொகுப்புக்களை வாசிக்கும் போது நெருங்கிய உறவுக்காரர்களிடம் உறவாடுவது போல் மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.  எழுத்துக்களுக்கு இவ்வளவு சக்தி உள்ளது என்பதை இந்த பனிப்பூக்கள் மூலம் உணர முடிகிறது.

மினசோட்டாவில் தமிழ் மின்னுகிறது என்பதைவிட தமிழ் வளர்கிறது, வாழ்கிறது என்றுதான் கூறவேண்டும்.  இந்த வளர்ச்சி வானுயர வளர வேண்டும் என்று வாழ்த்தும் வள்ளுவரின் நெஞ்சங்கள்.  இந்த அமைப்பை உருவாக்கிய உயர்ந்த உள்ளங்களுக்கு எங்களது உணர்வுப்பூர்வமான வள்ளுவரின் கலைக்கல்லூரியின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

மதிப்பிற்கு

                                                                                Dharani Senguttuvan

                                                                    Governing Council Member

                                                                                Valluvar College, Karur.

                                                                                  Tamilnadu

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. arjun bharath says:

    Superb Vaazhthu Madal!! Loved t!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad