\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

தலையங்கம்

May_editorial_520x746வாசகர்களுக்கு வணக்கம்.

நீங்கள் அனைவரும் எங்களின் அடுத்த வெளியீட்டிற்காகக் காத்துக் கொண்டிருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் மே மாத இதழை வெளியிடுகிறோம். இந்த மாதம் முதல் எங்களின் வெளியீட்டுத் திகதிகளைச் சற்று மாற்றி அமைக்கலாமெனத் திட்டமிட்டுள்ளோம். இதுவரை ஒவ்வொரு மாதமும் – நாங்கள் தொடங்கிய திகதியான – இருபத்தி ஒன்றாம் திகதி அன்று வெளியிட்டுக் கொண்டிருந்தோம். இந்த இதழ் முதல், ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக் கிழமை மத்தியத் திட்ட நேரப்படி (Central Standard Time) இரவு நேரத்தில் இதனை வெளியிடுவதாகத் திட்டமிட்டுள்ளோம்.

கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி, தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று, மினியாபோலிஸ் நகரத்தின் புறநகர்ப் பகுதியான மேப்பிள் குரோவ் (Maple Grove) நகரிலுள்ள இந்துக் கோயிலில் எங்களின் முதல் அச்சுப் பிரதி வெளியிடப்பட்டது என்பதை வாசகர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.  எங்களின் முதல் அச்சுப் பிரதியைப் படித்திருப்பீர்கள் என நம்புகிறோம். பல வாசகர்களிடமிருந்து பல முறைகளிலும் எங்களுக்கு கருத்துக்கள் வந்த வண்ணமுள்ளன.

இதனைத் தொடர்ந்து அச்சுப் பிரதி ஒவ்வொரு காலாண்டிலும் (மூன்று மாதங்களுக்கு ஒருமுறை) வெளியாகுமென்பதையும் மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம். தொடர்ச்சியாக உங்கள் பிரதிகளைத் தபால் மூலம் பெற சந்தாதாரராகப் பதிவு செய்து கொள்ளவும். ஒரு ஆண்டுக்கான சந்தாத் தொகை $12 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு, வட அமெரிக்காவில் வாழும் மக்களுக்கு மட்டுமே சந்தாதாரராகும் வசதியை ஏற்படுத்தியுள்ளோம். பதிவு செய்வதற்கான விபரங்களை முகப்பில் காணலாம்.

மாதாந்திர இணைய தள வெளியீடுகளுடன் சேர்ந்து, காலாண்டு அச்சுப் பிரதி வெளியீடுகளையும் இணைத்ததன் மூலம் எங்களின் குழுவினரின் வேலைப்பளு இரட்டிப்பு மடங்காகியுள்ளது. ஆனாலும், வாசகர்களின் தொடர்ந்த பாராட்டுக்களும், தெவிட்டாத தமிழ் மொழி தந்திடும் உற்சாகமும் அந்த வேலைப்பளு எங்களுக்கு அயர்ச்சி தராமல் எங்களைத் தொடர்ந்து வழி நடத்திச் செல்லும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

வழக்கம்போல் எங்களின் படைப்புக்கள் அனைத்தையும் படித்துத் தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும்.

நன்றி,

ஆசிரியர் குழு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad