\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

குறுக்கெழுத்துப் புதிர் – அமெரிக்கப் புதிர்

Filed in மொழியியல் by on December 24, 2014 0 Comments

 

அமெரிக்கப் புதிர் (Americana)
crossword_puzzle2_questions12232014_620x620
 இடமிருந்து வலம்
 1. ஒபாமாவுடைய வீட்டின் பெயர் (6 எழுத்துகள்)
 2. அமெரிக்காவுக்கு கிழக்கிலிருக்கும் ஒரு ஐக்கிய ராஜ்ஜிய (UK) நாடு. இந்த நாட்டுடன், ப்ளாரிடா, போர்டோ ரிக்கோ சேர்ந்து ஒரு அமானுஷ்ய முக்கோணமாக கருதப்படுகிறது. (4)
 3. அமெரிக்காவின் மூன்றாவது பெரிய இலினாய் நகரம். (3)
4. இறக்கைகள் கொண்ட பறக்கும் குதிரை. அமெரிக்க விமானப் படை விமானத்துக்கு சமீபத்தில் இந்த பெயர் வைக்கப்பட்டது. (4)
5. 1950கள் முதல் இன்றும் கூட உலகத்தினரை கட்டிப் போட்ட அமெரிக்க கவர்ச்சி நடிகை. இவரது இயற்பெயர் நார்மா (7)
6. சூரியவெளிச்சம்/சூரிய பிரகாசம் எனும் செல்லப் பெயர் கொண்ட அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலம். (4)
7. அமெரிக்கா உருவாக காரணமாயிருந்த 13 காலனிகளில் ஒன்று. ‘சாக்லேட் மாநிலம்’, ‘உருக்காலை மாநிலம்’ என்று செல்லமாக அழைக்கப்படுகிறது. (7)
மேலிருந்து கீழ்
1. பச்சை மலைகள் மாநிலம் எனும் செல்லப் பெயர் கொண்ட வடகிழக்கு மாநிலம். (5)
2. சமீபத்தில் மிகவும் பரபரப்பாக ஊடகங்களில் பேசப்பட்ட, மிசௌரி மாநில ஊர். (5)
7. ஒற்றை பைசாவின் அமெரிக்க வடிவம்.(3)
8. மினசோட்டா மாநிலத்தில் ஐடாஸ்காவில் தோன்றி பத்து மாநிலங்கள் வழி ஓடும் ஆறு. (5)
9. கத்தியால் குத்தப்பட்ட டென்னிஸ் வீராங்கனையின் முதற் பெயர். இதே பெயருடைய அமெரிக்க அதிபரின் உதவியாளர் ஒருவர் அரசியலில் சிறு சலசலப்பை ஏற்படுத்தினார். (3)
10. கிராபோர்டு எனும் குடும்பப் பெயர் கொண்ட அமெரிக்க நடிகை. ஒரு காலத்தில் உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் மாடல் அழகியாகக் கருதப் பட்டவர். (3)
11. மார்ட்டின் லூதர் கிங் சமஉரிமை கேட்டு போராடத் துவங்கிய அலபாமாவின் தலைநகரம். (6)
12. கனேடிய மாகாணம் ஒன்று. இதே பெயரில் 103 பேர் மட்டுமேயுள்ள மினசோட்டா நகரம் ஒன்றும் உள்ளது. (5)
13. அமெரிக்காவின் தங்க மாநிலம். (6)
14. எம்பயர் மாநிலம் – இதே பெயரில் நகரமும் உள்ளது. (5)
15. காஷியஸ் கிளே எனும் இயற்பெயர் கொண்ட குத்துச்சண்டை வீரரின் முதல் பெயர் (4)
கீழிருந்து மேல்
7. துப்பாக்கி குண்டுகளை இப்படிச் சொல்கிறார்கள் அமெரிக்காவில் (4)
16. இஸ்லாமியர்களை அமெரிக்கர்கள் இப்படி அழைக்கிறார்கள் (4)
17. MGM சினிமா கம்பெனியின் G எழுத்தைக் குறிப்பது (5)
18. அமெரிக்காவின் தலைநகரம். (5)
19. அமெரிக்காவின் மிகச் சிறிய மாநிலம். (4)
20. ஹூஸ்டன் ராக்கெட்ஸ் அணிக்கு விளையாடிய சீன கூடைப்பந்து வீரர். (4)
வலமிருந்து இடம்
21. மிக்கி மவுஸ் போன்ற கதாபாத்திரங்களை உருவாக்கியவர். (6)
பதில்களி்ற்கு இவ்விடம் சொடுக்கவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad