\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

உறைபனியில் மீன் பிடித்தல்

Filed in கட்டுரை by on January 21, 2015 0 Comments

icefishing_1_620x442அமெரிக்காவிலுள்ள மினசோட்டா மாகாணம், மற்றும் கனடாவிலுள்ள ஒன்டாரியோ மாகாணங்களில் வாழும் மக்கள் பனிக்காலத்தில் பல்லாயிரம் ஏரிகள், ஆறுகளில் இந்நாட்டு மக்கள் பலர் உல்லாசமாகப் பனிக் கொட்டில் (icehouse/tent) கட்டி மீன் பிடிப்பதைப் பார்த்திருப்போம். உஷ்ணப் பிரதேசத்தில் இருந்து வந்த மக்களாகிய எமக்கு உறைபனியில் குளத்திற்கு நடுவில் போவது பாதுகாப்பானதா என்றும் தோன்றும். ஆயினும் வடஅமெரிக்க மாநிலங்கள், மாகாணங்கள் உறைபனியை அதிகம் பெறுவதால் இவ்விடம் வாழும் மக்கள் நீர் உறையும் தட்ப வெப்பங்களை அறிந்து, உறைபனிப் பருமனையும், மற்றைய இயற்கைக் காரணிகளையும் கருத்தில் கொண்டு தொழிற்படும் வல்லமையை அவர்கள் முன்னோர்களிடம் இருந்தும் தற்போது அனுமானிப்புக் கருவிகள் மூலமும் பெற்றுக் கொண்டுள்ளனர் எனலாம்.

எம்மாநில பொதுவான உறைபனிப் பருமன் சார்ந்த வழிகாட்டி

  1.       ஏரிகளில் ஏறுவதற்கு சில உறைபனிக் காப்பு நடைமுறைகள் உண்டு. உறை பனியானது 2 அங்குலம் அல்லது 5 செண்டி மீட்டருக்குக் குறைவாயின் ஆபத்தானது, ஏறுவதைத் தவிர்க்கவேண்டும்
  2.       4 அங்குலம் அல்லது 10 செண்டிமீட்டர் ஆயின் கால்களினால் உறைந்த ஏரியில் ஏறி நடக்கலாம்
  3.       5 அங்குலம் அல்லது 12 செண்டிமீட்டர் ஆயின் பனிச்சறுக்கு மோட்டார் வண்டி (snowmobile), மற்றும் நான்கு சில்லுக்காட்டு மோட்டார் வண்டி (All Terrain Vehicle) உபயோகிக்கலாம்.
  4.       8 அங்குலம் அல்லது 20 செண்டிமீட்டர் ஆயின் கார் (car) மற்றும் சிறிய சரக்கு ஏற்று வாகனம் (small pickup truck) ஏரிக்கு மேல் ஏற்றலாம்.
  5.       12 அங்குலம் அல்லது 30 செண்டிமீட்டர் உறைந்த ஏரிக்கு மேல் மத்திம பாரமான சரக்கு வண்டியையே (medium truck) ஏற்றலாம்.
  6.       உறைபனி ஏரியில் மீன்பிடிக்கத் திட்டமிட்டால் நிச்சயம் கரையில் யாருக்காவது சொல்லிவிட்டுத்தான் போகவேண்டும். மேலும் தட்பவெட்பம் மாறியபடி இருந்தால் ஒரு மிதப்புச்சாதனத்தை (floatation device) சிறு கயிற்றினால் இடுப்பில் கட்டிக்கொண்டு போவது சாலவும் நன்று.

வழக்கமாக மீன்வகை உண்ணும் தமிழர் அவற்றைப் பிரதானமாகக் கடலிலும் சிலர் ஆறு, குளங்களிலும் இருந்து பெற்றிருப்பர். பண்டைய தமிழர்களில் மீன் பிடித்தலில் நெய்தல் திணை மக்கள், மற்றும் தீவுகளில் வாழ் மக்கள் வல்லவர்கள். அவர்கள் ஆழ்கடல் மீன்பிடித்தல் பற்றித் தெரிந்திருப்பினும் அது உறைபனி மீன்பிடித்தலில் இருந்து வெகுவாக மாறுபட்டது.

மினசோட்டா, ஒன்டாரியோ மற்றும் சக வட அமெரிக்கக் குளிர்தேசங்களில் பனிக் கால மீன்பிடிப்பு ஒரு பிரத்தியேக பொழுது போக்காகும். இதைப் பல்லாயிரம் டாலர் மீன்பிடிப்புப் புகைப் படங்களாகவும், பல மில்லியன் டாலர் தொலைக்காட்சிப் படங்களாகவும் மக்கள் ரசித்து மகிழ்கின்றனர்.

மினசோட்டா மாநிலத்தில் பிரதானமாகப் பெரிய, சிறிய கொடுவாய், கெண்டை மீன்களும் (perch, bass, Trout, Northern Pike)  நன்னீர் குளத்து மீன்களும் பிடிக்கப்படும்.

மீன்பிடி அனுமதிப்பத்திரம் வாங்குதல்

மினசோட்டாவில் மீன்பிடிப்பதற்கு வாகனமோட்டும் அனுமதிப்பத்திரம் உள்ள யாவரும் தகுதி உடையவர். வனக்காப்பு இலாக்காவில் கட்டணம் செலுத்தி, மனுச் செய்து அனுமதிப்பத்திரம் பெற வேண்டும். இந்த அனுமதிப் பத்திரம் உள்ளூர் எரி பொருள் நிலையங்கள் (gas stations), மற்றும் பொழுதுபோக்கு மீன் பிடிச்சாதனங்கள் விற்கும் கடைகள் மற்றும் வனவிலங்கு, உல்லாச, வேட்டை,மற்றும் விவசாயப் பொருட்கள் விற்குமிடங்கள் ஆகியவற்றில் கிடைக்கும்..

ஒவ்வொருவருக்கும் பனிமீன் பிடிப்பில் உறைபனியில் மூன்று துளைகள் போட்டு மீன் பிடிக்க அனுமதிக்கப்படும். குழந்தைகளுக்கு ஒரு தூண்டிலில் மீன் பிடிக்க அனுமதி இலவசம்.

பொதுவாக கொடுவாய் மீன் (perch, bass) ஆனது ஏரியின் உறைபனிக்குக் கீழும் சுமார் 42-52 பாகை ஃபாரன்ஹைட் வெப்பமான பகுதியிலேதான் காணப்படும். பெரும் கொடுவாய் மீன்கள் (bass) புத்திசாலித்தனமாக இரைதேடுபவை. இவை உணவு கிடைக்கும் போது நன்றாக உண்டுவிட்டு நீரின் அடியே உள்ள புல்லில் ஒழிந்திருக்கும். எனவே மீன்பிடிப்பவர்கள் சற்று வெப்பமான காற்று அடிக்கும் தருணத்தில் ஏரியின் அடிமட்டப் பாறைகளில் தென்புறமாக உள்ள புல்லில் தூண்டில் விட்டு கொடுவாய் மீன்களைப் பிடிக்க முயற்சிப்பர்.

பொதுவாக உறைபனி மீன்பிடித்தல் பலதரப்படி கையாளப்படும். சிலர் ஒரு சில மணித்தியாலம் செல்வர். மற்றையோர் ஏரிமீது கூடாரம் போட்டு ஒரு சிலநாட்கள் பூராகவும் தங்கி மீன் பிடிப்பர். இன்னும் சிலர் மாதக்கணக்காக பனிக்குடில் போட்டு இரவு பகலாகத் தங்கி மீன் பிடித்துச் சமைத்து, நண்பர்களுடன் பானங்கள் அருந்திக் கொண்டாடி இயற்கையை அனுபவிப்பர். சில வகை ஏரிக்கூடாரங்கள் மற்றும் பனிக்குடில்கள் வெப்ப சாதனங்களையும், தொலைக்காட்சிச் சாதனங்களையும் கொண்டுள்ளன. எமது மாநாலங்களில் உறைபனிமேல் தற்காலிக பனிக் குடில்,கூடாரக் கிராமங்கள் உருவாகி பின்னர் இளவேனில் காலத்தில் அகல்வதும் வழக்கம்.

உறைபனி ஏரிக்குச் செல்வோர் உடை

பனிக் காலத்தைப் பற்றி வட அமெரிக்காவில் வாழும் மக்கள் அறிந்திருப்பினும் நீண்ட நேரம் வெளியில் உறைபனியில் தரித்திருப்பதற்கு விசேட கரிசனையை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். வட அமெரிக்க மக்களுக்குத் தெரியும் உறைபனி, தொலைக்காட்சியில், மற்றும் ஜன்னலில் பார்ப்பது போன்றதல்ல. காரணம் வெப்பம் வெந்து கொல்லும் ஆயினும் குளிர் அமைதியாக ஆட்கொள்ளும். கவனமாக இருக்கா விட்டால் செயற்கை உடல் வெப்பத் தாழ்வினால் ஏற்படக்கூடிய பாதிப்பு மிக அதிகம்., இதனால் இறப்புக்கூட ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. எனவே தலையில் இருந்து பாதணி வரை பக்குவமாகப் போர்த்திக் கொள்ள வேண்டும்.

பனியில் உடல் வெப்பத்தைக் காத்துக் கொள்ள முக்கியமானது எத்தனை போர்வைகள் (layered clothing) உடுத்திக் கொள்கிறோம் என்பதே. உடலின் வெப்ப தட்பத்தைக் காத்துக்கொள்ள தோல் சுவாசிக்க வசதியான குளி்ர் உள்ளாடை (Thermal underwear) அவசியம். காலிலும் குளிர்தாங்கும் காலுறை (thermal socks) அவசியம். அதன் மேல் சாதாரண ஆடையை அணிந்து. அதன் மேல் குளிர்காற்று ஊடுருவிச் செல்லாமல் தவிர்க்கும் கம்பிளியோ அல்லது மற்றைய செயற்கை மேலுறை (jacket) அவசியம். மேலும் தலையையும், காதையும் கவரும் உறைகளும் அவசியம். முகத்தையும் வேளாவேளைக்குப் பாதுகாக்க கழுத்துத் துண்டு (scarf) வைத்திருத்தல் அவசியம். குளிர் தவிர்க்கும் கையுறைகள் (thermal gloves) அணிந்து கொள்ளுதல் அவசியம்.

சில செயற்கை உடல் வெப்பத்தாழல் அறிகுறி (Hypothermia symptoms)

  •         மனத்தளர்வு அல்லது தூக்கத்தன்மை (confusion or sleepiness)
  •         உடல் இயக்கம் குறைதல், பேச்சுத் தடுமாற்றம் (slowed, slurred speech)
  •         குன்றிய நாடித் துடிப்பு (weak pulse)
  •         நிறுத்த இயலாத நடுக்கம் (uncontrollable shivering)
  •         அதிகக் கோபம், மற்றும் குழம்பல் போன்ற மனப்பாங்கு anger, disorientation or other changes in behavior

பனி வெட்டி Augers

உறைந்த ஏரியினைத் துளைப்பது சற்றுச் சவாலான விடயம். பனி வெட்டியானது தமிழர்கள் ஊரில் மரத் தொழிலாளர் துளை போடும் வளைந்த ஊசி போன்றதொரு பாரிய உலோக ஆயுதக் கருவியாகும். இது கையினாலோ அல்லது சிறு மோட்டாரினாலோ இயக்கப்படும் துளைக் கருவியாகும்

கையினால் துளை போடும் கருவி (manual hand auger) சற்று மோர் கடைவது போன்று திரிப்பதால் உறை பனிக்கல்லை இரண்டு முதல் மூன்று அடிவரை ஆழமாகத் துளை போட்டு மீன்பிடிக்கலாம். மோட்டார் துளைகருவி (gas or propane powered auger) சற்று இலகுவாக உடல் பிரயாசையின்றி துளை போட உதவும்.

உறைபனி ஏரிகளில் தகுந்த மீன் பிடி இடம் தேடல்

புதிதாக மீன்பிடிக்கப் பழகுபவர்கள் கடினப்பட்டு பல ஓட்டைகளையும் ஏரிமேல் இட்டுத் துழாவி மீன் தேடுவர். ஆயினும் அனுபவசாலிகள் எந்த மீனைத் தேடுகிறார்கள் என்பதைப் பொறுத்துத் தூண்டிலை இறக்குவர். கொடுவாய் மீன் பிடிக்கப் பொதுவாக 15-20 அடி ஆழத்தில் தூண்டிலை விடலாம்.

icefishing_2_620x438பனித்தூண்டில்களோ தனிவகை

பனிக்காலத் தூண்டில்கள் சாதாரணக் கோடைக் காலத் தூண்டில்களிலும் சிறியவை. பொதுவாக இரண்டு வகைத் தூண்டில்கள் உண்டு. ஒருவகை கைத்தூண்டில், மற்றையது பொறித் தூண்டில். கைத்தூண்டிலானது மீன் கவ்வும் போது தூண்டிலின் பாரத்தைப் பொறுத்து மீன்பிடிப்போர் வேளியே எடுப்பர்.

பொறித்தூண்டிலானது உறைபனிக் கிணற்றில் விட்டுப் பிடிக்கப்படும். பொறித்தூண்டில் உறைபனியில் கிணற்றருகே உண்டிவிடப்படும். மீன் கவ்வினால் பொரித்தூண்டில் ஒரு சிறுகொடியையோ இல்லை ஒரு ஒளிக் கருவியினால் இருளில் குளிரைத் தங்கிக்கொள்ளப் பனிக்குடிலில் அமர்த்திருக்கும் மீன்பிடிப்போருக்குச் சைகைதரும். அவ்வப்போது அவர்கள் பொறித்தூண்டிலை மேலே இழுத்து மீனைப் பிடித்து மீண்டும் பொறியை உறைபனிக்கிணற்றின் உள்ளே விடுவர்.

உறைபனி ஏரிகளில் மீன் காணப்படும் இடங்கள்

  1.       ஏரி,குளங்களில் ஆழம் குறைந்த அகன்ற கரையை இணைத்து உறைந்த பகுதி நாள் முழுதும் மீன் பிடிக்கக் கூடியதாகவிருக்கும். காரணம் ஏரியின் அடியே மீன்களுக்குப் போதிய உணவு கரையை இணைக்கும் இடத்தில் உள்ள அடித்தரையில் காணப்படும். எனவே மீன்கள் அவ்விடம் குழுமும்.
  2.       ஏரியின் அடியில் ஒரு மேட்டுப்பிரதேசம் நீருக்குள் காணப்படின் அதுவும் மீன்கள் குழுமும் இடமாகும்.
  3.       ஏரியின் கரையில் இருந்து ஆழப்பகுதிக்குத் திடீரெனத் தரைமாறும் பிரதேசமும் மின்களைப் பிடிக்கக்கூடிய இடமாகும்.
  4.       ஏரியின் வேவ்வேறு கரையோரத்திற்கும் ஆழந்த இடத்துக்கும் இடையிலான அடித்தள சிறு சிறு மேடு பள்ளப் பிரதேசங்களும் மீன்கள் போய் வரும், ஒழிந்திருக்கும் பிரதேசமாகும்.

ஏரியின் அடியே பாழடைந்த கட்டடப்பகுதியோ, தாழ்ந்த மரப்பகுதிகளோ உருவாக்கும் மறைவான இடங்களில் மீன்கள் ஒழிந்திருக்கலாம்.

உறைபனியில் மீன் பிடித்தலானது இலகுவான விடயமன்று. அதற்கான அனுபவம் மற்றும் பயிற்சி நாளடைவில் தான் ஒருவர் பெறமுடியும். மற்றைய பொழுதுபோக்குகளைப் போன்றும் இந்தவகைப் பொழுதுபோக்கும் தூண்டில் நுணுக்கங்கள், மீன்கவ்வி சாதனங்கள், மீன் தேடும் சாதனங்கள் என்று பல வகை அறிவையும் பெறக்கூடியதொன்று.

வட அமெரிக்காவில் ஏரிகள், ஆறுகள், நீர்த்தேக்கங்கள் அனேகமானவை. மினோசோட்டா வாழ்மக்கள் பூர்வீக வாசிகளும் சரி, ஐரோப்பிய அடிக்கொடிகளும் சரி அனைவருக்கும் பொதுவானதொரு பொழுது போக்கு மீன் பிடித்தலானகும்.  இவ்விடம் தூண்டில் தொடங்கி படகு வரை வாங்குவது, தற்காலிக மற்றும் நிரந்தரக் குடில் அமைப்பது போன்றவை மக்கள் மூலதனம் இட்டும், போட்டிகள் வைத்தும் பெருமையுடன் செய்யும் விடயமாகும்.

வெப்ப வலத்தில் கோடை மாரி பருவகால மழை நாடுகளில், தீவுகளில் பிறந்த தக்கிணபூமித் தமிழனிற்கு நிச்சயமாக இது ஒரு புது அனுபவமே. ஆயினும் குளிரில் தம்மைப் பாதுக்கொள்வதன் மூலம் இயற்கையன்னையின் எழிலைப் பனிகாலத்திலும் பரவசமாக அனுபவித்துக் கொள்ளலாம்.

மாநில உறைபனி மீன் பிடிப்புப் போட்டி விழாக்கள்
1 2015 24th Annual Ice Fishing Extravaganzawww.icefishing.orgசனிவரி 24Gull Lake
2 2015 Devils Lake Volunteer Fire Department Tournamentwww.dlvlicefishingtourney.comசனிவரி 31Devils Lake
3 2015 Fishermen’s Wharf Ice Fishing Contentwww.wharfmn.comசனவரி 31Mille Lacs Lake
4 2015 Ice Jam Ice Fishing Contestwww.kjsicefishing.comசனிவரி 31Mille Lacs Lake
5 2015 15th Annual Alexandria Ice Fishing Challengewww.icefishingchallenge.orgசனிவரி 31Lake Agnress
6 2015 17th Annual American Legion Ice Fishing Derbywww.parkrapidsicefishingderby.comபிப்ரவரி 7Fish Hook Lake
7 2015 2nd Annual Ice Castle Classicwww.icecastleclassic.comபிப்ரவரி 7Lake Qui Parie Lake

மீன் பிடித்தல் படகு விற்பனைக் கண்காட்சி

Minneapolis Boat Showwww.minneapolisboatshow.comசனிவரி 22-25Minneapolis Convention Center

யோகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad