\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

பழவினி ரொட்டி (Fruit Cake)

Fruit_cake_620x443தேவையானப் பொருட்கள்

1 lb சாதாரண அல்லது விசேட கோதுமை மா

1 lb வெண்ணெய் (Butter)

1 lb சீனி

8 முட்டைகள்

4 தேக்கரண்டி அடுதல் பொடி (baking powder)

1/2 கப் சிறிதாக நறுக்கிய பழவத்தல்கள் – உதாரணம் பேரிச்சை,முந்திரி,மாம்பழம்

சல்லடை  (Flour sifter)

அகலடுப்புத் தட்டு (flat baking tray)

அகலடுப்பில் வெந்துபோகாத மெழுதாள் (baking sheet)

கம்பிவலைத் தட்டு (wire rack)

செய்யும் முறை

அகலடுப்பை 350 பாகை ஃபாரனைட்டில் வைத்துக் கொள்ளவும். மேலும் அகலடுப்புத் தட்டில், மெழுகுதாளை விரித்துத் தயாராக்கிக் கொள்ளவும்.

கோதுமை மாவானது கட்டிப்படாது இருக்க வேண்டும். மேலும் இப்பேர் பட்ட பழவினி ரொட்டி,கேக் செய்வதற்கு புரதம் குறைந்து மிருதுவான விசேட கோதுமை மாவைப் பயன்படுத்தினால் பண்டம் மிருதுவாக சுட்டுவரும். எனவே கோதுமை மாவை அரிதட்டில் (சல்லடையில்) அரித்து, அடுதல் பொடியையும் சேர்த்துக் கொள்ளவும்.

கையினாலோ இல்லை குழையும் குசினி உபகரணத்தாலோ சற்று மிருதுவான வெண்ணெய்,சீனியை சேர்த்து மசித்துக் குழைத்துக்கொள்ளவும். மெதுவாக ஒவ்வொன்றாக எட்டு முட்டைகளையும் குழையலில் சேர்த்து அடித்துக் கொள்ளவும்.

அடுத்து சிறிதாக நறுக்கிய பழவத்தலை இலேசாக கோதுமை மாத்தூவி சற்று உலர்த்தி மிகுதிப் பண்டங்களுடன் சேர்த்துக் கலக்கிக் கொள்ளவும்.

கையினாலோ அல்லது குழைக்கும் கருவியையோ குறைந்த வேகத்தில் சுழலவிட்டு மெது மெதுவாக ஒரு கரண்டியால் மாவைச் சேர்த்துக் கொள்ளவும். மாவை ஒருபோதும் வேகமாக அடித்துக் கலக்கலாகாது. மா நன்கு குழையலில் கலந்த பின்னர், அடுத்து வனிலாத் திரவியத்தைச் சேர்த்துக் கொள்ளலாம்.

கலவையை அகலடுப்புத்தட்டில் மெழுகு தாள்மேல் பரப்பி ஏறத்தாழ 45 நிமிடங்கள் அடுப்பின் மத்திய பகுதியில் சுட்டு சமைத்துக்கொள்ளவும். இந்தப்பண்டம் பொங்கி மிருதுவாக வரவேண்டும். அகலடுப்பைத் திறக்காமல் கண்ணாடி யன்னலூடே பார்ப்பதன் மூலம் உஷ்ணம் வெளியகலுவதைத் தவிர்க்கலாம்.

மேலே குறிப்பிட்ட சமையல் நேரகாலத்தின் பின்னர், ரொட்டியைத் தொட்டுப்பார்க்கும் போது திடமாக இருந்தால் வெளியே எடுத்து மெழுகுதாளுடன் வலைத்தட்டில் ஆறவிட்டுக் கொள்ளலாம். சூடாறியதும் மெழுகு தாளை அகற்றித் பரிமாறும் தட்டுக்களிற்கு மாற்றிக் கொள்ளலாம்.

யோகி அருமைநாயகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad