\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

குறுக்கெழுத்து

கடந்த சில மாதங்களாக உலகத் தமிழர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன், உச்சரித்த ஒரு பெயர் நடிகர் ரஜினிகாந்த். இந்நிலையில் அவர் நடித்தசில படங்களை இந்தக் குறுக்கெழுத்துப் புதிரில் கண்டுபிடிப்போமா?

Copy of ppkl_crossword11_clues

இடமிருந்து வலம்

                                             

  1. இது ரஜினி ஸ்டைல்என்று ரஜினி கமலிடம் அடிக்கடிச் சொல்லும் படம்.(8 எழுத்துகள்)
  2. ரஜினியோடு ராதா கடைசியாக இணைந்து நடித்த ஆர். சுந்தர்ராஜனின் படம். (5)
  3. ரஜினியை வைத்து ஏ.வி.எம். நிறுவனத்தினர் தயாரித்த முதல் திரைப்படம். இப்படத்தின் வில்லனாக

நடிக்க மறுத்தவர் விஜயகாந்த் (7)

  1. குழந்தை நட்சத்திரமாக ரஜினியோடு நடித்த மீனா அவருக்கு ஜோடியாக நடித்த முதல் படம்.(4)
  2. இந்தப் படத்தில்ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்என்று ரஜினி பேசிய வசனம் மிகப்

பிரபலமடைந்தது. (5)

  1. கராத்தே பயிற்சி பெற்றவராக ரஜினிகாந்த் நடித்த எஸ்.பி. முத்துராமன் படம்.(5)
  2. சுந்தர் சி. இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஒரே படம். (7)
  3. ரஜினிகாந்த் நடிக்க, இளையராஜா, மணிரத்னம் சேர்ந்து பணியாற்றிய கடைசிப் படம். (4)
  4. மீசையின்றி ரஜினி நடித்தகோல்மால்’ படம்.(6)
  5. இசைக் கலைஞராக, இரண்டு பெண்டாட்டிக்காரராக ரஜினி நடித்த ‘அல்லாரி மொகுடு’ படத்தின் தமிழ் வடிவம்.(2)
  6. வில்லனாகவும், நாயகனாகவும் ரஜினி நடித்த படம். (5)
  7. ரஜினிகாந்த் கதை எழுதித் தயாரித்து சிறிய வேடத்தில் நடித்த படம். (3)
  8. கூன் பசினா’ படத்தின் தழுவலாக, கே. பாலச்சந்தரின் உதவியாளர் அமீர்ஜான் இயக்கத்தில் ரஜினி

நடித்த படம். (2)

  1. இயக்குனர் ஆர். சி. சக்தியின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஒரே படம். (7)

மேலிருந்து கீழ்

  1. நடிகர் சிவகுமார் நடிக்க மறுத்து ரஜினிகாந்த் மிகவும் தயக்கத்துடன் நடித்த எஸ். பி. முத்துராமன் படம்.(12)
  2. ‘நா நின்னா மறியலாரே’ எனும் கன்னடப் படத்தின் தழுவலாக, ரஜினிகாந்த் மோட்டார் சைக்கிள் வீரராக நடித்த படம்.(6)
  3. எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைத்த மிகக் குறைவான தமிழ்ப் படங்களில் ஒன்று இது. (10)
  4. இயக்குனர் விசு இயக்க மறுத்து, பின்னர் வசந்த் இயக்கத் துவங்கி வெளியேற, வேறு வழியின்றி சுரேஷ் கிருஷ்ணாவை வைத்து பாலச்சந்தர் தயாரித்த ரஜினிகாந்த் படம். (5)
  5. ரஜினிகாந்த் கதை, திரைக்கதை எழுதி நடித்துத் தயாரித்த படம்.(2)
  6. அணையைக் காப்பாற்றும் பாத்திரத்தில் ரஜினி காந்த், அனுஷ்காவுடன் சேர்ந்து நடித்த படம்.(3)
  7. ஏழை அப்பாவி மாணிக்கமாக ஜொலித்த மிகப் பெரியவெற்றிப் படம். (3)
  8. இடையில் நடிப்பதை விட்டு விடலாம் என்று முடிவெடுத்திருந்த ரஜினியை அழைத்து வந்துடான்’ வேடத்தில் நடிக்க வைத்த கே. பாலாஜிக்குப் பெரிய வெற்றியளித்தப் படம். (3)
  9. சிரஞ்சீவியும், ரஜினிகாந்தும் சேர்ந்து நடித்த ஒரே தமிழ்ப் படம். (2)

வலமிருந்து இடம்

  1. ‘கதா பறையும் போள்’ மலையாளப் படத்தை ரஜினி சிறு பாத்திரத்தில் நடித்த பி. வாசு படம்.(4)
  2. மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய, ரஜினி மலேசியப் பிரஜையாக நடித்த படம்.(3)
  3. ரஜினிகாந்த் மனைவியை வைத்து ஆபாசப் படமெடுக்கும் வில்லனாக வந்த படம்.(4)
  4. சம்பளக் குறைப்புப் பற்றி விநியோகஸ்தர்களுடன் ஏற்பட்ட பேச்சு வார்த்தையில், ரஜினி சம்பளக் குறைப்புக்கு மறுத்ததால் படத்தை வாங்கயாரும் முன் வராத போது, நேரடியாக அரங்குகளில் (வினியோகஸ்தர்கள் இல்லாமல்) வெளியிடப்பட்ட படம்.(5)

கீழிருந்து மேல்

  1. இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஸ்ரீதேவியுடன் இரட்டை வேடங்களில் நடித்த படம்.(2)
  2. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ரஜினி நடிக்க, பி. வாசு இயக்கியப் படம்.(6)
  3. ரஜினி நடித்த ஃபோட்டோ ரியலிஸ்டிக் மோஷன் காப்ச்சர் படம்.(6)
  4. ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்த முதல் ரஜினி படம்.(3)

குறுக்கெழுத்து – விடை

– ரவிக்குமார்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad