admin
admin's Latest Posts
இவ்வருடப் புதிய காய்கறி வகை 2017
மினசோட்டாவிற்கும் அயல் மாநிலங்களுக்கும் ஏப்ரல் மாதம் மழையும் வந்துவிட்டது இனி மே மாதத்தில் மிருதுவான புற்தரைகளும், பூக்களும் துளிர் விடும். பூச்செடிக் கடைகளுக்குப் போனால் (Garden centers) அப்பப்பா ஆயிரம் ஆயிரம் வகை தாவரங்கள், நமக்கு இருப்பதோ குறுகிய நிலமும் பூச்சாடிகளும் என்பர் இவ்விட வாழ் தமிழ் இயற்கையாளர் பலர். மினசோட்டா , ஒன்ராரியோ கனடா விவசாய திணைக்களம், மற்றும் பூங்கா அமைப்பாளர் குழுமியங்கள் வருடா வருடம் புதிய, அனுபவமுள்ள பூச்செடி, காய்கறி வளர்ப்பாளர்களுக்கு இளவேனில் ஆலோசனை […]
வாழையிலை விருந்து
மினசோட்டா தமிழ் சங்கம் மூன்றாவது ஆண்டாக வாழையிலை விருந்து விழாவை, இந்தாண்டு ஏப்ரல் 8ஆம் தேதியன்று ஹாப்கின்ஸ் கம்யூனிட்டி செண்டரில் நடத்தியது. முந்தைய ஆண்டுகளைப் போல, இந்தாண்டும் தமிழர் பாரம்பரிய உணவு வகைகளை, வாழையிலையில் பரப்பி விருந்து படைத்தனர். முருங்கைக்காய் சாம்பார், மோர் குழம்பு, வேப்பம்பூ ரசம், வெண்டைக்காய் கூட்டு, திணை பாயாசம், அப்பளம் என சுவையான தமிழர் விருந்து, வந்திருந்த விருந்தினரைக் கவர்ந்தது. அன்றைய நிகழ்வின் புகைப்படங்கள், உங்கள் பார்வைக்கு இங்கு. சரவணகுமரன்
தலைக்கு மேல வேல….
ஞாயித்துக் கெழம காலங்காத்தால……. மனைவியின் “எழுந்திருங்கோ….. எட்டு மணி ஆயிடுத்து” குரல் எங்கோ கிணற்றுக்குள்ளிருந்து கேட்பது போல் ஒலித்தது எனக்கு… அதனை இக்னோர் செய்துவிட்டு புரண்டு படுத்தேன். பாத்ரூமிலிருந்து எட்டிப்பார்த்த சகதர்மிணி, “சொல்லிண்டே இருக்கேன்… அப்டி என்ன இன்னும் தூக்கம்? என்னமோ வெட்டி முறிச்சாப்போல…. நேக்கு மாத்திரம் சண்டே சாட்டர்டே எதுவுமில்ல….” என்று விரட்டிக் கொண்டிருந்தாள். எனக்கு ஏதோ வேலை வைத்திருக்கிறாள் என்பதைவிட, தான் எழுந்துவிட்டோம் இன்னும் இவன் மட்டும் தூங்குகிறான் என்ற பொறாமைதான் அதிகமாய்த் தொனித்தது. […]
MN தமிழ் பள்ளியின் ஆண்டு விழா 2017
ஏப்ரல் 8ம் தேதி பள்ளியின் 9ம் ஆண்டு விழா ஹாப்கின்ஸ் கம்யூனிட்டி அரங்கில் நடைபெற்றது. மதியம் 3 மணிக்கு பள்ளி ஆண்டு விழா ஆரம்பித்து இரவு 7 மணி வரை நடைபெற்றது. பள்ளி ஆண்டு விழாவை, பள்ளிக்குழுவினர், உட்பரி ஆசிரியர்கள், ஷாப்கின்ஸ் ஆசிரியர்கள் மற்றும் 8ம் வகுப்பு மாணவ மாணவியர்கள் சேர்ந்து ஏற்பாடு செய்திருந்தார்கள். 8ம் வகுப்பு மாணவ மாணவியர்கள் விழாவைத் தொகுத்து வழங்கினார்கள். சிறப்பு விருந்தினராக பேராசிரியர் திரு. குமார் மல்லிகார்ஜுனன் பங்கேற்று வாழையிலை விருந்து […]
தாய்மை
கையில் இருந்த காய் கறி கூடையை மறு கைக்கு மாற்றியபடி வாசல் கதவைத் திறந்தாள் அகல்யா. உள்ளே இருந்து முனகல் சத்தம் கேட்டதும், பதட்டத்துடன் வேகமாக வழி நடையைக் கடந்து வீட்டிற்குள் பிரெவேசித்தாள். காய்கறி கூடையைச் சமையல் அறையின் கதவின் முன் வைத்து விட்டு, வீட்டின் உள் அறையை நோக்கி வேகமாக எட்டெடுத்து வைத்தாள். “ஹாசினி பட்டு எழுந்திட்டியா .. அம்மா வந்துட்டேன்.” அந்த அறையில் உள்ளே ஒரு பெரிய தொட்டி போல வைக்கப்பட்ட அந்தப் படுக்கையில் […]
பகுத்தறிவு – பகுதி 5
(பகுதி – 4) நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் இந்தத் தலைப்பைத் தொடர்வது என்ற முடிவுக்கு வந்துள்ளேன். சென்ற பகுதிகளுக்கு வந்த விமரிசனங்களும், கருத்துக்களும், கேள்விகளுக்கும் மனதுக்கு மிகவும் உற்சாகமூட்டுவதாக அமைந்தது. என் கருத்தோடு உடன்படாதவர்களின் கேள்விகளும் உற்சாகமூட்டுவதாகவே அமைந்தன. நிச்சயமாக, மாற்றுக் கருத்துள்ளவர்களின் மன ஓட்டத்தையும் அறிந்து கொள்ள வேண்டுமென்பதே எனது ஆசையும்கூட. பின்னூட்டங்கள் உற்சாகமாக அமையும் அதே சமயத்தில், நேரடியாக அனுப்பப்பட்ட சில கேள்விகளும், சந்தேகங்களும், மேலும் பொறுப்புணர்ச்சியோடு எழுத வேண்டுமென்ற எண்ணத்தைத் தூண்டுவதாக […]
தொழிலாளர் தினம்
வட அமெரிக்காவில் தொழிலாளர் இயக்கம் 1886, மே 1ஆம் திகதி தொடங்கப்பட்டது. ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் மட்டுமே வேலை தரவேண்டும் எனக் கோரி வேலை நிறுத்தத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதன்விளைவாகத் தொழிலாளர்களின் தினசரி வேலைநேர அளவு நிர்ணயிக்கப்பட்டது. இதன் பயனாக ஒருநாளில் எட்டு மணிநேரம் வேலை எட்டு மணிநேரம் பொழுதுபோக்கு மற்றும் எட்டு மணிநேரம் ஓய்வு ஆகியவற்றை வாதிட்டு வரையறுக்கப் பட்டது. உலக சமவுடமையின் தந்தையான கார்ல் மார்க்ஸ் மற்றும் அவரது நண்பன் எங்கெல்ஸ் (Karl […]
உழவர் சந்தைகள்
உலகில் இருக்கும் பனிரெண்டு மண் வகைகளில், ஒன்பது வகை மண்ணைக் கொண்ட மினசோட்டா ஒரு விவசாயப் பூமியாக இருப்பதால், மினசோட்டாவாசிகளுக்கு ஒரு அனுகூலம் உள்ளது. ஃப்ரெஷ்ஷாக உணவு உண்ணலாம். அதுவும், உணவுக் குறித்த விழிப்புணர்வு பெருகியுள்ள இக்காலத்தில், இது போன்ற வாய்ப்பு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. புத்தம் புதியதாக விவசாய நிலத்தில் இருந்து வரும் விளைப் பொருட்கள், மக்களை உடனடியாகச் சென்றடைய உதவுபவை, உழவர் சந்தைகள். அந்த வகையில், மினசோட்டா மாநிலமெங்கும் நடக்கும் உழவர் சந்தைகள் (Farmer’s […]
உரிமைகள் மசோதா – 3
(உரிமைகள் மசோதா-2) அமெரிக்க உரிமைகள் மசோதாவின் முதல் திருத்தத்தில் பேச்சுச் சுதந்திரத்தின் நீட்சியாக மதச் சுதந்திரமும் சேர்ந்துள்ளது. மதச் சுதந்திரம் – வரைவிலக்கணம் அமெரிக்கச் சட்ட வரைவுகள் அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு, தங்களது சொந்த மத நம்பிக்கைகளை, அல்லது மத நம்பிக்கையின்மையைப் பின்பற்றும் உரிமையுள்ளது. அடிப்படையில் இன்றைய ஐக்கிய அமெரிக்க நாடுகள், பல நாடுகளிலிருந்து குடிபெயர்ந்து வந்தவர்களால் உருவாக்கப்பட்டது. இவர்கள் பல்வேறு மதப் பின்னணியிலிருந்து வந்தவர்கள். அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் தேவாலயங்கள் இயங்க வேண்டும் (Separation of Church […]







