\n"; } ?>
Top Ad
banner ad

admin

rss feed

admin's Latest Posts

தமிழ்த் தேனீ 2017

தமிழ்த் தேனீ 2017

மார்ச் 26, 2017 ஆம் தேதியன்று  மினசோட்டா தமிழ்ச்சங்கப் பள்ளியின் சார்பில் “தமிழ்த் தேனீ ” போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டி, பொதுப் பள்ளிகளில் அவரவர்  படிக்கும் நிலைகளை வைத்து பிரிக்கப்பட்ட மூன்று பிரிவுகளில் பல சிறுவர், சிறுமியர் கலந்துகொண்டனர். போட்டியில் பங்கேற்றவர்களுக்கு 200 சொற்கள் கொண்ட பட்டியல் முன்னதாக அனுப்பப்பட்டிருந்தது. அதிலிருந்து எடுக்கப்பட்ட சொல்லை நடுவர்கள் முன்னிலையில் எழுதி அடுத்தடுத்த சுற்றுகளுக்குப் போட்டியாளர்கள் முன்னேறினர். கடுமையான போட்டி நிலவிய பல சுற்றுகளுக்குப் பிறகு, ஒவ்வொரு பிரிவிலும் […]

Continue Reading »

தப்புத் தாளங்கள்

Filed in இலக்கியம், கதை by on March 31, 2017 0 Comments
தப்புத் தாளங்கள்

”அம்மா, சுரேஷ் ரொம்ப நல்லவர்மா…. நன்னா பழகுவார், மரியாதையா நடந்துப்பார், எல்லாரண்டயும் பாசத்தோட இருப்பார்… என்ன, ஒரு நிரந்தரமான வேலை கெடையாது, சம்பளம் கெடையாது, மத்தபடி ஒரு குறையுமில்ல… நம்ம ஜாதி இல்ல… அதுனால என்ன?”….  சாருலதா தன் அம்மாவிடம் தனது காதலனைக் குறித்து வர்ணித்துக் கொண்டிருந்தாள். “நீ சொல்றது நேக்கு நன்னாப் புரியர்துடி… வேலை பாக்காட்டா என்ன, பொம்மணாட்டிய வச்சு நன்னா குடும்பம் நடத்தினாக்காப் போறாதா? …. ஜாதி கீதியெல்லாம் இந்தக் காலத்துல யாரு பாக்குறா… […]

Continue Reading »

தமிழ் – சிங்கள வருடப் பிறப்பு

தமிழ் – சிங்கள வருடப் பிறப்பு

சூரியன் மேட இராசிக்குள் நுழைவது சித்திரை மாதப் பிறப்பு எனப்படும். தமிழில் சித்திரை மாதம் 31 நாட்களைக் கொண்டது. ஆங்கில நாட்காட்டியில் வரும் “ஏப்ரல்” மாதம் 14 ஆம் நாள் முதல் “மே” மாதம் 14 ஆம் நாள் வரை தமிழில் “சித்திரை” மாதமாகும். சித்திரை முதல் மாதம் என்பதால் இதுவே புதிய ஆண்டின் தொடக்கமும் ஆகும் என்ற நம்பிக்கை காலங்காலமாக எம்மவரிடம் நிலவி வருவதனால் சித்திரை மாதம் முதல் நாளைத் தமிழர்கள் அனைவரும் தமிழ் வருடப் […]

Continue Reading »

பட்டர் பீன்ஸ் மசாலா

Filed in அன்றாடம், சமையல் by on March 31, 2017 0 Comments
பட்டர் பீன்ஸ் மசாலா

இந்தியா போன்ற நாடுகளில், வெளிநாட்டில் இருந்து வந்த காய்கறிகள், இங்கிலிஷ் காய்கறி என்ற பெயரில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருக்கும். முன்பு, கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர் போன்ற காய்கறிகள் கூட அப்படிப்பட்ட அந்தஸ்த்தில் தான் இருந்தன. அவ்வப்போது, ஏதேனும் ஒரு காய்கறி இப்படி அறிமுகமாகிக்கொண்டே இருக்கும். மஷ்ரூம், அமெரிக்க இனிப்புச் சோளம், சிறு சோளம் இவற்றை இவ்வகையில் சொல்லலாம். தற்சமயம், அவகடோ, ப்ரோக்கலி போன்றவை இந்த லிஸ்ட்டில் சேர்ந்துள்ளன. இப்படி வெளிநாடுகளில், வெளிமாநிலங்களில், வெளியூர்களில் இருந்து வரும் […]

Continue Reading »

உலகின் வாட்டர் பார்க் தலைநகரம் – விஸ்கான்சின் டெல்ஸ்

உலகின் வாட்டர் பார்க் தலைநகரம் – விஸ்கான்சின் டெல்ஸ்

உலகின் வாட்டர் பார்க் தலைநகரம் என்று தங்களைப் பிரகடனப்படுத்திக் கொண்ட விஸ்கான்சின் டெல்ஸ், மினசோட்டாவில் இருந்து மூன்றரை மணி நேரப் பயணத் தூரத்தில் அமைந்துள்ளது. உள்ளூர் கேளிக்கை மையங்கள் போரடித்து விட்டால், வாரயிறுதிக்கு வண்டியெடுத்துக் கொண்டு கிளம்பி விடலாம். கோடையாக இருந்தாலும் சரி, குளிர் காலமாக இருந்தாலும் சரி, குடும்பத்துடன் குதூகலிக்கப் பல பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஊர் – விஸ்கான்சின் டெல்ஸ். இவ்வூருக்கு இப்பெயர் வந்தது 1931இல். அதற்கு முன்பு வரை, இது கில்போர்ன் சிட்டி […]

Continue Reading »

வபஷா தேசிய கழுகு மையம்

வபஷா தேசிய கழுகு மையம்

அமெரிக்காவின் தேசியச் சின்னமாக கழுகு இருப்பது, நாம் அனைவரும் அறிந்ததே. என்ன விதமான ஒரு டெரர் பறவையைத் தேசியச் சின்னமாக வைத்து இருக்கிறார்கள் என்று எண்ணுவது உண்டு. ஒருவேளை, அமெரிக்காவில் அதிகமாக கழுகு இருக்கிறதோ என்னமோ என்று நினைத்தால் அதுவும் இல்லை. சமீபகாலம் வரை இது அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் தான் இருந்தது. இப்போது 2007இல் தான், கழுகுகளின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கும் காரணத்தால், அந்தப் பட்டியலில் இருந்து கழுகு நீக்கப்பட்டுள்ளது. எண்ணிக்கை பார்த்துச் சின்னம் அமைப்பது […]

Continue Reading »

முறிந்த மின் வலயத்தை மாற்றலாமா?

முறிந்த மின் வலயத்தை மாற்றலாமா?

நளினமாக நமது விரல்கள் நம்மையே அறியாது நமது தொலைபேசியில் நர்த்தனம் செய்ய நறுக்குத் துணுக்குகளையும், நல்ல படங்களையும் நன்றாகப் பார்த்துச் சிரித்து, சுவாரஸ்யமான செய்திகளையும் சுவைத்துப் பார்த்துக் கொண்டுள்ளோம். எல்லாம் நல்லபடியாகத்தானே உள்ளது. முறிந்த மின் வலயமா? அது எப்படி? புரியவில்லையே என்று நாம் தலையைச் சொரியலாம். இவ்விடம் நாம் குறிப்பிடுவது உங்கள் கைப்பேசி, தட்டுபலகை தொழிற்பாட்டை அல்ல. அதன் பின்னணியில் நடைபெறும் சமுதாய சம்பிரதாய முடங்கல்களை. மின்வலயங்கள் மற்றும் சமூகவலயங்கள் பல்லாண்டுகள் உள்ளன போனறு நமக்குத் […]

Continue Reading »

கவண்

கவண்

ஷங்கரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய எவரும், அவர் பாணியில் படமெடுக்கவில்லை. பாலாஜி சக்திவேல் மட்டும் ஒரு படம் எடுத்தார். ஆனால், அவருடன் ஒரேயொரு படத்தில் பணியாற்றிய கே.வி.ஆனந்த் எடுக்கும் படங்களில்  எல்லாம் ஷங்கர் படத்தின் தாக்கம் இருக்கும். அயன், கோ என்று ஹிட்டடித்தவர், சமீபக் காலமாக எங்கேயோ சொதப்பி விடுகிறார். இப்ப,கவண் எப்படி வந்திருக்கிறது என்று பார்க்கலாம். தற்கால ஊடக அரசியல் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான போராட்டங்கள் கலந்த கதைக்களம். அதனால் நடப்பு நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்திக் கொள்ள […]

Continue Reading »

ராஜா – SPB – என்னதான் பிரச்சினை?

ராஜா – SPB – என்னதான் பிரச்சினை?

இந்தியச் சமூக ஊடகங்களின் இப்போதைய ஹாட் டாபிக் இளையராஜா மற்றும் SPB என்ற இரு மிகப் பெரிய ஆளுமைகள் பற்றிதான். பரபரப்புக்கு காரணம் பதிப்புரிமையும்(Copyright) அதைப் பற்றி எந்த விதமான அடிப்படை புரிதலும் அற்ற வீண் விவாதங்களும் என்று சொன்னாலும் சாலப் பொருந்தும். இந்தப் பதிவின் நோக்கம் இசை படைப்பாளிகள் மற்றும் தயாரிப்பாளர்களின் அறிவுசார் சொத்து (Intellectual Property) குறித்த நடைமுறை என்ன என்பதை அலசுவதே! அதற்கு முன்பு ஒரு சிறிய பிளாஷ்பேக்…! “ரெடி! ஒன், டூ, […]

Continue Reading »

சிதம்பரம் – பாகம் 3

Filed in இலக்கியம், கதை by on March 31, 2017 0 Comments
சிதம்பரம் – பாகம் 3

(பாகம் 2) பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் அஞ்ஞானத்தின் வடிவாகத் திகழ்ந்த அரக்கன் அபஸ்மரா. அஞ்ஞானத்தினால் பல தீமைகள் செய்தான். அவனை அழிக்கச் சிவபெருமான் நடராஜராக அவதரித்தார். அவர் அபஸ்மராவை வீழ்த்தி அவன் மேல் நடனம் புரிந்தார். இந்த நடனத்தை ஆனந்ததாண்டவம் என்பார்கள். அறியாமை எனும் திரை அகன்றால் நம்முள் உள்ள ஆனந்தம் தானாகக் காணப்படும். அபஸ்மரா இறக்கும் நேரம் வந்துவிட்டது. எமதர்மராஜன் காளை மேல் அமர்ந்து அங்கே வந்தார். அபஸ்மரா ஆத்மாவைக்  கொண்டு செல்ல தனது […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad