\n"; } ?>
Top Ad
banner ad

admin

rss feed

admin's Latest Posts

பைரவா

பைரவா

விஜய்யிடம் இருக்கும் ஒரு பாராட்டுக்குரிய விஷயம், ஜெயிக்கும்  கதை என்று தான் நம்புவதை, எக்ஸ்ப்பிரியன்ஸ், சென்டிமெண்ட்ஸ் போன்ற காரணங்களுக்காக விட்டுக் கொடுக்க மாட்டார். இந்த விஷயத்தில் எத்தனை முறை பல்ப் வாங்கினாலும் இதை விடாமல் தொடர்ந்து செய்து வருகிறார். தொடர்ந்து செய்து வரணும். இந்த நல்ல பழக்கத்தைத் தான், இப்படத்தில் தன்னிடம் இருக்கும் கெட்ட பழக்கமாக பஞ்ச் வசனத்தில் சொல்லி வருகிறார். படத்தின் இயக்குனரான பரதனுக்கு என்ன வாக்குக் கொடுத்தாரோ தெரியவில்லை. விஜய் காப்பாற்றி விட்டார். பரதன் […]

Continue Reading »

மார்கழியும் தையும்

Filed in இலக்கியம், கவிதை by on January 29, 2017 0 Comments
மார்கழியும் தையும்

எழுந்தீரோ எம்பாவாய் ! மார்கழியில் மாடத்திலே கண்ணயர்ந்த வெண்மதியே … ஆயர்குல மகளிர் விரைந்து உனை எழுப்பும் முன்னே விழித்துக் கொள்ளடி பெண்ணே… பட்டாடையுடுத்தி பட்டு மெத்தையில் பவளமல்லியாய் படர்ந்தவளே … பகலவன் வருமுன்னே எழுந்து தெருவினிலே பாடிவரும் பெண்டிரோடு கலந்து கொள்ளடி பெண்ணே …. தோழிகளே வியக்கும் வண்ணம் உறங்கியவளே … உந்தன் அழகில் மயங்கிய நிலையில் கண்சிமிட்டக் கூட மறந்த பெண்களைக் கண்டாயோடி பெண்ணே ! உறக்கத்தில் கூட பலரை மூர்ச்சை ஆக்கியவளே … […]

Continue Reading »

வீட்டுக்கொரு ஜீனோ

Filed in இலக்கியம், கட்டுரை by on January 29, 2017 0 Comments
வீட்டுக்கொரு ஜீனோ

எழுத்தாளர் சுஜாதாவின் ‘என் இனிய இயந்திரா’, ‘மீண்டும் ஜீனோ’ ஆகிய கதைகளின் ரசிகர் என்றால், இன்னமும் ஜீனோ என்ற பொம்மை நாய்க்குட்டியை மறந்திருக்க மாட்டீர்கள். நாயகியுடன் எப்போதும் இருக்கும் நாய்க்குட்டி, புத்தகங்களை வாசித்துக் கொண்டு நாயகிக்குப் பல தகவல்களையும், அறிவுரைகளையும் அள்ளிக் கொடுத்துக் கொண்டு வரும். வரும் நாட்களில், நம் வீட்டிலும் இது போன்ற ஒரு ஜீனோ வரலாம். முன்பெல்லாம் ராஜா, ரவி, ரமேஷ் என்ற பெயரில் வீட்டுக்கு ஒருவர் இருப்பார். வருங்காலத்தில், இதே போல் வீட்டுக்கு […]

Continue Reading »

கொல்லத் துடித்தான்…..!  திருவிவிலிய கதைகள்.

Filed in அன்றாடம், ஆன்மிகம் by on January 29, 2017 0 Comments
கொல்லத் துடித்தான்…..!  திருவிவிலிய கதைகள்.

மாசில்லாத மழலை உள்ள வீடு மகிழ்வு நிறைந்த சொர்க்கம் போன்றது. ஒரு இல்லத்திற்கு  அர்த்தமுள்ள நிறைவு… குழந்தை. “குழந்தையும் தெய்வமும் ஒன்று” என்பார்கள். காரணம் குழந்தை ஒரு வரம். அந்தக் குழந்தையாக தெய்வமே புவியில் தோன்றும்போது…..ஆகா.. அப்படித்தாங்க இந்த உலகத்தில அன்பின் அடையாளமாக இயேசு பாலன் பிறந்தார். இது நம்ப எல்லாருக்குமே தெரிந்த விடயம். அந்தக் குழந்தையைக் காண வெவ்வேறு திசையிலிருந்த முன்று ஞானிகள்  வந்தார்கள். குழந்தை இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க இயற்கை  அவர்களுக்கு வால் நட்சத்திர […]

Continue Reading »

பெண்களை அடிமைப்படுத்தாதே !

Filed in இலக்கியம், கவிதை by on January 29, 2017 0 Comments
பெண்களை அடிமைப்படுத்தாதே !

பொய்யானதே பெண் வாழ்வு பொய்யானதே! கேட்பதற்கு நாதியில்லாஇனமாகிப் போனதே பெண்ணினம்! கேட்பதற்கு நாதியில்லா இனமாகிப் போனதே பெண்ணினம்! வயது ஐந்து கொண்ட சின்ன வண்ணக்குயில் கூட உன் கண்ணிற்குப் பதினெட்டாய்த் தெரிவதேன்? பதினெட்டாய்த் தெரிவதேன்? மன்னன் அந்தப்புர மகளிராய் அடிமைப்படுத்தப்பட்டோம் இன்று வரை அடிமை ஆனோம் இன்று வரை அடிமை ஆனோம்! அரசியல் மேடை ஏறி வென்றால் உன் காமப் பார்வையை பாய்ச்சுகின்றாய் பள்ளியிலும் இதுதான் செல்லும் வீதியிலும் இதுதான் எங்கும் இதுதான் உன்னைப் பெற்றவளும் பெண்தானே […]

Continue Reading »

சங்கமம் 2017

சங்கமம் 2017

தை மாதத்தின் பிறப்பை , அறுவடை திருநாளாக , உழவர் உழைப்பின் சிறப்பாக, பொங்கல் திருநாளாக தமிழினம் கொண்டாடி வருகிறது. தமிழ் மொழியை முன்னிறுத்தியே பணிகள் செய்யும் மினசோட்டா தமிழ் சங்கமும் இவ்வாண்டு பொங்கல் தினத்தை சனவரி 15 ஆம் தேதி அன்று “தமிழர் மரபு தினமாக” பெரும் விமரிசையாக கொண்டாடியது. தமிழ் பாரம்பரிய உணவான கருப்பட்டி பொங்கல், சாம்பார், உருளை வறுவல், பலகறிக் கூட்டு, தயிர், வடை என வீட்டு உணவு போலவே சுவையுடன் மதிய […]

Continue Reading »

அன்பும் அனுதாபமும் இலத்திரனியல் இளையவர்களும்

Filed in இலக்கியம், கட்டுரை by on January 29, 2017 0 Comments
அன்பும் அனுதாபமும் இலத்திரனியல் இளையவர்களும்

இன்றைய மாணவர்களுக்கு ஆசிரியர், கற்றோர் அன்பும், அனுதாபத்தையும் நடைமுறையில் காட்டிப் பயனுற வைப்பது அவசியம். இதைப் பற்றி அறிந்து கொள்ள நாம் வழக்கத்தில் பகிரப்படாத அனுபவத்தைப் பார்க்கலாம். இளமைப் பொழுதில் போதை வஸ்துப் பொருட்களிற்கு அடிமையானால் அதிலிருந்து இளையவர்களை மீட்கத் தவிர்ப்புக் கல்வி முறைகள் வைத்திய சிகிச்சை முறைகள் உண்டு. வாழவிருக்கும் பிள்ளைகளை பெற்றார், உற்றார், ஆகிய நம் சமூகத்தில் இருந்து விலகி இருக்க விரும்ப மாட்டோம். ஆயினும் அசல் வாழ்வில் இருந்து விலகி நகல் சூழல் […]

Continue Reading »

அஞ்சலம்மா

Filed in இலக்கியம், கதை by on January 29, 2017 0 Comments
அஞ்சலம்மா

ஞாயிறு காலை ஏழு மணி. எப்பொழுதும் கேட்கும் M.S சுப்ரபாதம் ஒரு புறம், அந்த காலை நேரத்தை உறுதிப் படுத்திக் கொண்டு இருந்தது. இன்னொரு புறம் அம்மாவின் ஃபில்டர் காஃபி மணம். வெந்து கொண்டிருக்கும் இட்லி மணம் சமையல் அறையில் இருந்து வந்து கொண்டு இருந்தது.   சமையல் அறை வாசலுக்கு முன்பு அமர்ந்து பாட்டி தேங்காய் துருவிக் கொண்டு இருந்தார். அவரால் செய்யக் கூடிய வேலையை எப்பொழுதும் செய்ய நினைக்கும் மனம். மிக மெலிந்த தேகம். […]

Continue Reading »

பீனோ க்ரிஜோ…

Filed in இலக்கியம், கதை by on January 29, 2017 0 Comments
பீனோ க்ரிஜோ…

விடிந்தும் விடிந்திராதிருந்த அந்தக் காலை நேரத்தில், அலுவலக வளாகத்திற்குள் நுழைந்து தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த பார்க்கிங்க் ஸ்பாட்டில் காரை நிறுத்தினான் விஷ்வா.. ஒரு தனியார் அலுவலகத்தில் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் அவன், ஒரு இருபது வருடங்களுக்கு முன்னர் அமெரிக்கா வந்து சாஃப்ட்வேர் இன்ஜினியராகப் பணியைத் தொடங்கியவன். பல நிலைகளிலும் பணி புரிந்து, கடைசியாக சி.டி.ஓ. ஆகப் பதவி உயர்வு பெற்றவன். கார்ப்பரேட் வார்ல்ட்க்குத் தேவையான அனைத்து சாமர்த்தியங்களையும், டிப்ளமஸிகளையும் கற்றுக் கொண்டவன். பல வெள்ளைக்கார எக்ஸிக்யூடிவ்ஸ் மத்தியில், […]

Continue Reading »

வித்தியாசம் 13 காண்க

வித்தியாசம் 13 காண்க

Continue Reading »

ad banner
Bottom Sml Ad