admin
admin's Latest Posts
நவராத்திரி
பாட்டி கொடுத்த முப்பெரும் தேவி செட், போன முறை திருச்சி போனபோது வாங்கின கிருஷ்ணர் உறியடி செட், மைசூர் சாலையில் அத்தை வாங்கித் தந்த அஷ்டலக்ஷ்மி செட். இப்படி ஒவ்வொண்ணும் பரணிலிருந்து இறங்க ,இறங்க நவராத்திரி களை கட்டத் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு முறையும் காலிறுதித் தேர்வுக்கு இறுதியில் வரும் அந்தப் பத்து நாட்கள் நவராத்திரி விடுமுறை மறக்க முடியாத ஒன்று. ஒரு ஓரமாக டப்பாக்கள் எல்லாம் அடுக்கி, இந்த முறை வித்தியாசமான முறையில் படி செய்ய முயற்சி […]
மனிதரோடு மனிதர் பேசும் வழக்கம் இனி உண்டோ?
தொலைபேசி அழைக்கும் சத்தம் கேட்டது. கையை மடக்கி fit bit ஐ அழுத்தி அழைப்பது வாசு எனக் கண்டு கொண்டாள் . கடிகாரம் மணி 6 எனக் காட்டியது. அங்கே இப்போ மணி 5 தானே. தூக்கம் வரலையா? வியந்தபடி அழைப்பை இணைத்தாள் . “குட் மார்னிங் வாசு என்ன நம்ம ஊருTime zone லேயே இருக்கீங்களா?”. “ஆமாம் . சீக்கிரமா வேலையை முடிச்சிட்டு கிளம்பணும். பிரணவ் என்ன பண்ணறான் ?” “அவன் தூங்கறான். ஒரு அரைமணி […]
பெருகும் காதல் பூட்டு கலாச்சாரம்
பெங்களூரில் வேலை பார்த்துக்கொண்டிருந்த போது, நண்பரொருவர் ஒரு திங்கள் கிழமையின் மதிய உணவுவேளையில் சொன்ன விஷயம் இது. வாரயிறுதியில் ஓசூரில் இருக்கும் கோவிலுக்குச் சென்றிருக்கிறார். நல்ல கூட்டம். நீள வரிசை. பொறுமையாக நகர்ந்து கொண்டிருந்தது, பக்தர் குழுக்கள். ஒரு பெரிய கதவைக் கடக்கும் போது, நமது நண்பர் அந்தக் கதவில் மாட்டியிருந்த ஒரு உலோக வளையத்தைத் தட்டியவாறு சென்றிருக்கிறார். அதைப் பார்த்த அவரது மனைவியும் அதை ஒரு தட்டுத் தட்ட, பின் தொடர்ந்த நண்பர் குடும்பமும் அந்தச் […]
அழகே உன்னை ஆராதிக்கிறேன்
சோழர் கல்வெட்டில்
உன் அழகு பொறிக்கப்பட்டிருக்கும்
நீ இராஜராஜன் காலத்தில் பிறந்திருந்தால்…..
பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்தில்
நீ பிறந்திருந்தால்
சங்கம் வளர்த்த மதுரையை
தீக்கிரையாகாமல் காத்திருக்கலாம் ….
ஐடாஸ்கா & பெமிட்ஜி – ஒரு பார்வை
காவிரி பிரச்சினை நடந்து கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் காவிரி குறித்த ஒரு நினைவு. கர்நாடகத்தவருக்கு, காவிரி, அவர்கள் வீட்டுப் பெண்; குல தெய்வம். அதைப் பெங்களூரில் இருக்கும் போதும் கண்டிருக்கிறேன். கர்நாடகத்தைச் சுற்றி வரும்போதும் கண்டிருக்கிறேன். கன்னடப் படங்களில் நல்ல பெண் கதாபாத்திரங்களுக்குத் தான் காவிரி என்று பெயர் வைப்பார்கள். குடகு மலையில் காவிரி ஆரம்பிக்கும் இடமான தலை காவிரி என்னும் இடத்தில் கோவில் கட்டிக் கும்பிடுகிறார்கள். தவறே இல்லை, இயற்கை தானே நம்மை வாழ வைக்கும் தெய்வம்!! […]
மரவள்ளிக்கிழங்குப் பொரியல்
வட அமெரிக்காவில் கூதல் காற்று அடிக்கத் தொடங்குகிறது, ஆமாம் இலையுதிர்காலத்தை அணுகுகிறோம் என்பதற்கான அறிகுறிகள் பல. எனவே படிப்படியாக நமது உடல் குளிரைத் தாங்கவும், நாக்குகள் நல் உருசி பெறவும் நாடுவது கொழுப்பு, எண்ணெய் சார்ந்த தின்பண்டங்களே. குளிர்ப்பிரதேசங்களி்ல் வாழ்பவர் பருவகாலத்தைப் பொறுத்து பொரித்தல், அகலடுப்புச் சமையலில் (oven baking) நாட்டம் கொள்வது இயல்பு. இந்தக் காலகட்டத்தில் சூடான சோற்றிற்கும், சுகமான ஒடியல் மாக்கூழிற்கும், தனியாகக் கொறித்திடவும் சுவையானது மரவள்ளி்க்கிழங்குப் பொரியல். தேவையானவை 1 – முழு […]
மானிட வாழ்வின் நெறி
அன்பை வளர்க்க வேண்டும்
ஆணவத்தை ஒழிக்க வேண்டும்
இனிமையாக பேச வேண்டும்
ரூடவ்கைகுணம் வளர வேண்டும்
உண்மை பேச வேண்டும்
மனித வாழ்வின் தத்துவம்
“அன்னை” என்பதும் மூன்றெழுத்து
“தந்தை” என்பதும் மூன்றெழுத்து
ஆவர்களுக்கு பிறக்கும் “மகன்” அல்லது
“மகள்” என்பதும் மூன்றெழுத்து
ஆவர்கள் பேசும் மொழி
“மழலை” என்பதும் மூன்றெழுத்து பெற்றோர்
புத்தகம் சேகரிப்பது எப்படி?
நவீனம் என்ற ரீதியில் பல மின்பலகைகள் (e-readers) தற்போது புழக்கத்தில் வந்திருப்பினும், கையில் புத்தக அட்டை இதழ்களை வருடி எங்காவது ஒரு மூலையில் இளைப்பாறி வாசிப்பதோர் தனிச்சுகம். பண்டைய தமிழ் வீடுகளில் மண் திண்ணையில் புல், ஓலைப் பாய், மர வாங்கினால் ஆன ஊஞ்சல் மஞ்சம், மினசோட்டா மாநிலத்தில் கோடைகாலத்தில் வலையிலான தூங்கு மஞ்சம், அல்லது குளிர்காலத்தில் மெத்தை தைத்த ஆசனம் இவற்றிலெல்லாம் தரித்து வாசிப்பதோ மற்றொரு சுகம். இந்த உடல் உள இளைப்பாறலைத்தரும் அச்சுக் கோர்வைப் […]
முகமறியாக் காதல்
முகம் தேவையில்லை
முகவரியும் தேவையில்லை
முகமறியா முகப்புத்தகத்தில்
முதல்வனாய் என்னுள் முளைத்த
மூன்றெழுத்துக் காதலுக்கு …!!
மனதில் தோன்றிய முதல் காதல்
மனிதனாய்ப் பிறந்ததன் பயனை அறியச் செய்த காதல் …
மனிதனுள் புதைந்த சுவடுகளை
மனதினுள் புகுந்து வெளிக்கொணரும்
மகத்துவமே காதல் ….!!







