admin
admin's Latest Posts
மினசோட்டா ஸ்டேட் ஃபேர்
எந்தவொரு மக்கள் வாழும் இடமென்றாலும், வருடத்திற்கொரு முறையேனும் மக்கள் ஒரு இடத்தில் ஒன்று சேர்ந்து, ஏதேனும் வகையில் விழா எடுப்பது பல்வேறு பிரதேசங்களில், கலாச்சாரங்களில் ஒரு வழக்கமாக பல காலமாக இருந்து வருகிறது. இந்திய, தமிழக கிராமங்களை எடுத்துக் கொண்டால், அங்கிருக்கும் கோவில்களில் வருடத்திற்கு ஒரு முறையேனும் திருவிழா நடக்கும். கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் தேவாலயங்களிலும், மசூதிகளிலும் இப்படியான திருவிழாக்கள் நடப்பதுண்டு. கால ஓட்டத்தில், மக்கள் நகரங்களில் குடியேறத் தொடங்கிய பின், இத்திருவிழாக்கள் இன்னமும் […]
உட்பெரி டேஸ் 2016 (Woodbury Days)
மினசோட்டா மாநிலத்திலுள்ள உட்பெரி நகரில், ஆண்டு தோறும் உட்பெரி டேஸ் என்ற பெயரில் பெரிய திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதியிலிருந்து 28 ஆம் திகதி வரை இந்த விழா நடைபெற்றது. இந்தத் திருவிழாவில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளுக்கு மத்தியில், பொழுதுபோக்கு விளையாட்டுக்கள், இசை நிகழ்ச்சி ஆகியவை இடம் பெற்றன. 27ஆம் திகதி இரவு வான வேடிக்கைகள் நடைபெற்றது. 28ஆம் திகதி, வண்ணமயமான அணி வகுப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்தக் […]
அமெரிக்கத் தேர்தல் – பகுதி 8
ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற முப்பத்தியொன்றாம் ஒலிம்பிக் போட்டிகள், அமெரிக்கத் தேர்தல் களத்தின் உஷ்ணத்தைச் சற்றுக் குறைத்தது அல்லது ஊடகக் கண்களின் பார்வைக் கூர்மையை மழுங்கடித்தது எனலாம். இரண்டு பெரிய கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் முன்னிறுத்தப்பட்டு, இரண்டு வேட்பாளர்களும் அனல் பறக்க மோதிக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆகஸ்ட் மாதம், அரசியல் களத்தைப் பொறுத்தமட்டிலும் அதிகப் பரபரப்பின்றி கடந்து சென்றது. இருப்பினும் அவ்வப்போது சில அதிர்வலைகள் ஏற்பட்டன. ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறாமலோ, அல்லது அமெரிக்கா அதிகப் போட்டிகளில் […]
Sponsored : Have you thought about your insurance lately? Advise by Jill Henning – Part 2
(Part 1) Hello, everyone! I hope you are all enjoying the last remnants of summer as fall approaches. I’d like to start a three part series that reviews the most important factors of your insurance rotection…protecting your assets and protecting your paycheck. Many people think of insurance as a “necessary evil” or just another bill; […]
குறுக்கெழுத்துப் புதிர்
தமிழ்த் திரைப்பட உலகம் தமிழர்களால் மதிக்கப்படுகிறதோ இல்லையோ, பிரான்ஸ் நாட்டினரால் பெரிதும் கவனிக்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 21ம் நாள் உலக நாயகன் கமலஹாசன் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘செவாலிய’ விருதுக்குத் தெரிவு பெற்றுள்ளார். சினிமாவைத் தனது தொழிலாக மட்டுமல்லாமல் தனது காதலாக நினைத்து உணர்வுப் பூர்வப் பணியாகச் வரும் கமலஹாசனுக்கு இவ்விருது சாலப் பொருந்தும். இவ்விருதினை அளித்த பிரான்ஸ் அரசுக்கு நன்றியையும், இவ்விருதினைப் பெற்ற திரு. கமலஹாசன் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் பனிப்பூக்கள் சார்பில் சமர்ப்பித்து […]
அறுந்த ஆனந்த யாழ் – நா. முத்துக்குமாருக்கு அஞ்சலி
கடவுளுடன் சீட்டாடுவது கொஞ்சம் கடினமானது எவ்வளவு கவனமாக இருந்தாலும் பார்க்காமலே அறிந்து கொள்கிறார் 2000 ஆம் ஆண்டில் டீன்-ஏஜைக் கடந்தவர்களுக்கு, தங்களுக்கான இளமை, காதல், சோகம், பாசம் போன்ற உணர்வுகளைப் பாடல்களாக வார்த்தெடுத்துக் கொடுத்தவர், கவிஞர் நா. முத்துக்குமார். அதனாலேயே, நா. முத்துக்குமார் மறைந்த செய்தியை ஆகஸ்ட் 14ஆம் தேதி அன்று கேட்டபோது, அது இத்தலைமுறையினருக்குப் பெரும் இழப்பைக் கொடுப்பதாக இருந்தது. 1975இல் காஞ்சிபுரத்தில் பிறந்த நா.முத்துக்குமார், இளம் வயதிலேயே தனது தாயாரை இழந்தார். அந்தச் சோகம் […]







