\n"; } ?>
Top Ad
banner ad

admin

rss feed

admin's Latest Posts

இலட்சிய சிகரம்

இலட்சிய சிகரம்

நான் ஏறிக் கொண்டே இருக்கிறேன், எங்கு இருக்கிறது இலட்சிய சிகரம், என் இறைவா? நான் தோண்டிக் கொண்டே இருக்கிறேன், எங்கு இருக்கிறது அறிவுப் புதையல், என் இறைவா? நான் பெருங்கடலில் நீந்திக்கொண்டே இருக்கிறேன், எங்கு இருக்கிறது அமைதித் தீவு, என் இறைவா? இறைவா நூறு கோடி மக்கள் இலட்சிய சிகரத்தையும், அறிவுப் புதையலையும் இன்ப அமைதியையும் உழைத்தடைய அருள்வாயாக !!! பாரத ரத்னா, அறிவியல் அறிஞர், அரசியல் வாதி, தமிழ்க் கவிஞர், இளந்தலைமுறையினருக்குச் சிறப்பான ஒரு வழி […]

Continue Reading »

சொற் சதுக்கம்  

சொற் சதுக்கம்  

பொழுதுபோக்காய் உங்களது   சொல் வங்கியை வளப்படுத்தும் ஒரு குதூகல விளையாட்டு. கீழே கட்டங்களில் இருக்கும் எழுத்துக்களைக் கொண்டு குறைந்த பட்சம் 15 சொற்களையாவது உருவாக்க முயலுங்கள். எழுத்துக்களை எப்படி வேண்டுமானாலும் கோர்க்கலாம்; ஒரே சொல்லில் அதே எழுத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். சொற்கள் எத்தனை எழுத்துக்கள் கொண்டவையாகவும் இருக்கலாம். எடுத்துக்காட்டு : ஆடி, கடல் ஒரே நிபந்தனை சொற்கள் தமிழ்ச் சொற்களாக, பொருள் அமைந்தவையாக  இருக்க  வேண்டுமென்பதே. விளையாடித் தான் பாருங்களேன்! (சொற் சதுக்கம் – […]

Continue Reading »

எழுமின் இளைஞர்காள் !!

Filed in இலக்கியம், கவிதை by on July 28, 2015 1 Comment
எழுமின் இளைஞர்காள் !!

ஈராயிரம் ஆண்டென்பார் ஒருவர்
ஆறாயிரம் இருக்குமென்பார் இன்னொருவர்
தோராயமாய்ச் சொன்னால் பத்தாயிரத்திற்கும்
மேலென்று பகர்வார் மூன்றாமவர்

கணக்கிட முடியாத காலமென்பதால்
கல்தோன்றி மண் தோன்றுமுன்
தோன்றிய மூத்த மொழியிதெனக்
கணக்குச் சொல்வார் மற்றொருவர் !!

Continue Reading »

ஒற்றைக் கூடாரத்தில் உலகக் கலாச்சாரங்கள் (Festival of Nations)

ஒற்றைக் கூடாரத்தில் உலகக் கலாச்சாரங்கள் (Festival of Nations)

ஏப்ரல் 30 ஆம் தேதியில் இருந்து மே 3ஆம் தேதி வரை செயிண்ட் பால் ரிவர் செண்டரில், இவ்வருடத்திய பெஸ்டிவல் ஆப் நேஷன்ஸ் நடைபெற்றது. இண்டர்நேஷனல் இன்ஸ்ட்டிடூட் ஆஃப் மினசோட்டா என்ற அமைப்பால், வருடா வருடம் நடாத்தப்படும் இந்தக்  கலாச்சாரப் பரிமாறல் திருவிழா, இந்த வருடமும் சிறப்பாக நடந்து முடிந்தது. இது எண்பத்தி நான்காம் வருடம். இவ்வளவு வருட காலம், இது போல் தொடர்ந்து வேறெங்கும் நடைபெறுகிறதா என்று தெரியவில்லை. முதலில் இதுபோல் ஒரு நிகழ்வை, எல்லா […]

Continue Reading »

குருவிச்சி ஆறு

Filed in இலக்கியம், கவிதை by on July 28, 2015 0 Comments
குருவிச்சி ஆறு

இது எங்கள் கிராமத்தின் இதய நாடி.
மாரியிலே ஊர் மூழ்கும்போது வடிகாலாய்
கோடையிலே எம் பயிர் வாடும்போது
உயிர் ஊற்றாய்
மாரிச் சொத சொதப்பில் காலுன்ற முடியாமல்
கோடிவரை வரத் துடிக்கும்
கொடு விலங்குக் கூட்டத்தை
அகழியாய் விரிந்துநின்று
ஊர் காக்கும் காவலனாய்,
எம் ஊரின் முகமாய்.முகவரியாய்

Continue Reading »

சொர்க்கத்திலொரு திருத்தம்

Filed in இலக்கியம், கதை by on July 28, 2015 0 Comments
சொர்க்கத்திலொரு திருத்தம்

லிஸி குளித்து முடித்ததும் பசிப்பது போலிருந்தது. உடலில் டவலைச் சுற்றிக் கொண்டு கீழே இறங்கி வந்து கோப்பையில் காப்பி நிரப்பிக் கொண்டு ஜன்னலுருகே இருந்த சோபாவில் அமர்ந்தாள். வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. மரத்திலிருந்த இலைகளும் மழையில் குளித்து அவளைப் போலவே புத்துணர்வுடன் பளிச்சென்று இருந்தன. கீழே விழுந்திருந்த ஒரு சில உதிர்ந்த இலைகள் மழையில் நனையாமல் இருக்க இங்குமங்கும் ஓடுவது போல் காற்றடிக்கும் திசையில் உருண்டோடின. தொலைபேசி ஒலித்தது. ஆஷிஷ். “ஹை பேபி .. தூக்கத்தைக் […]

Continue Reading »

தலையங்கம்

தலையங்கம்

வாசகர்களுக்கு வணக்கம் !! இந்த இதழின் தலையங்கம் எழுதப்படும் இத்தருணம், அறிவியல் மேதை, இந்தியத் திருநாட்டின் முன்னாள் அதிபர், பாரத ரத்னா டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் காலமான செய்தி கிடைக்கப் பெறுகிறோம். வாழ்க்கையின் மிகவும் அடிமட்டத்திலிருந்து, தன் சுய முயற்சி ஒன்றினால் மட்டுமே உலமகே வியக்கும் இடத்தை எட்டிப்பிடித்த மேதாவி அவர் என்பதை நாமனைவருமறிவோம். அவரின் வாழ்க்கையும் வார்த்தைகளும் மனித இனம் முழுவதிற்குமே ஒர் பெரிய வழிகாட்டுதலாக அமையும் என்றால் அதிலேதும் மிகைப்படுத்துதல் இருக்காது என […]

Continue Reading »

தேன்குருவித் தோழமை

தேன்குருவித் தோழமை

முன்குறிப்பு – கோடைகாலத்தில் எமது மினசோட்டா மாநிலத்தில் சுற்றாடல்களில் நமது பெருவிரல் பருமன் அளவே உள்ள வெட்கம் கொண்ட அழகாகவும் வேகமாகவும் பறக்கும் சின்னச் சிறிய தேன்குருவிகளை அவதானித்திருப்பீர்கள். இயற்கையில் விறுவிறுப்பான இந்தக் குட்டிக்குருவிகளுடன் நாம் வேண்டினால் சிநேகிதம் கொள்ளலாம் என்பதே இந்தக் கட்டுரை. சிறகடிக்கும் சின்னப்பறவை மினசோட்டா மாநிலவாசிகள் பலர் அன்றாடம் வசிப்பதற்கு ஒரு வீடும், விடுமுறை நாட்களைச் செலவிடுவதற்காக ஒரு வனக்குடிலும் (cabin) வைத்திருப்பதே பாரியவழக்கம். எனது நண்பன் ஒருவன் தனது காணிப் பொட்டலத்தில் […]

Continue Reading »

தோழன்

Filed in இலக்கியம், கதை by on July 28, 2015 0 Comments
தோழன்

பரந்து வளர்ந்த அரச மரம். ஒரு குறுநில மன்னனின் முழுச்சேனையும் அதனடியில் அமர்ந்தாலும் அனைவருக்கும் நிழல் தருமளவு விஸ்தாரமாகவும் அடர்த்தியாகவும் வளர்ந்திருந்த அற்புத மரம். அதனடியில் கருங்கற்களைக் கொண்டு ஒரு மேடைபோல் அமைக்கப்பட்டு அதன் மேல் பிரதிஷ்டை செய்யப்பட்ட கல்லாலான விநாயகர் சிலை. விநாயகர் சிலைக்கு அடியில் செதுக்கப்பட்ட சிறிய மூஞ்சூரு மற்றும் மோதகச் சிலைகள் அத்தனையும் தத்ரூபமாக வடிவமைக்கப் பட்டிருந்தன. சிலையைச் சுற்றிக் கம்பியினாலான கூடு ஒன்று அமைக்கப்பட்டு, அதைப் பூட்டி வைத்து யாரும் விநாயகரைத் […]

Continue Reading »

யோகசுவாமிகள்

யோகசுவாமிகள்

“சும்மா இரு” என்ற இரு சொற்களிலுமே நாம் தற்போது இந்த நிமிடத்தில் வாழ்வதைப் பற்றிக் கரிசனை செலுத்த வேண்டும் என்றார் யோகசுவாமிகள்.   அசலுக்கும் நகலுக்கும்,  நல்லுறவுக்கும், வல்லுறவுக்கும், அற்பத்துக்கும்,   ஆன்மீகத்திற்கும் வேறுபாடு தெரியாது இலத்திரனியல் வாழ்க்கையில் சஞ்சரிக்கும் மனித குலத்திற்கு மெஞ்ஞானியாகிய யாழ்ப்பாணம் யோகசுவாமிகள் பற்றித் தெரிந்திருப்பது  அரிதான விடயமே.   ஞானிகள் தோன்றி போதிக்கும் தத்துவங்களோ மனித சிந்தனையின் உயர் கட்டத்தை விவரிக்கிறது. ஏரியில் ததும்பும் நீர்க்குமிழிகள் போல வாழ்க்கையில் அவை அவ்வப்போது எமக்கு […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad