admin
admin's Latest Posts
புதிர் – புதைந்திருக்கும் சொற்கள்
கீழேயுள்ள படத்தில் புதைந்திருக்கும் இரண்டு எழுத்துக்களினாலோ, அல்லது அவற்றிற்கும் மேலான எழுத்துக்களைக் கொண்டு அமையும் தமிழ் சொற்களைக் கண்டுபிடிப்பீர்களா? (புதிர் – புதைந்திருக்கும் சொற்கள் – விடைகள்)
மன்மத வருட மாத பலன் – ஐப்பசி மாதம்
(இது தமிழ்ப் பஞ்சாங்கத்தைத் தழுவி, வட அமெரிக்கப் பகுதிகளுக்காகக்கணிக்கப்பட்டுள்ளது) தமிழ் ஐப்பசி – ஆங்கிலத்தில் செப்டம்பர்-அக்டோபர் மேடம் (மேஷம்) – உயர்ந்த மனநிலை, சந்தோஷங்களும், சகலபாக்கியங்களும் வரும் மாதம், மகளிர் சுகம், பிள்ளைகள் சுகம், ஆயினும் உற்றார் இனசனத்தினால் கவலைகள், மனத்தாபங்கள் உண்டாகலாம். காலில் காயங்கள், வியாதிகள் வரலாம். உணவு விடயங்களில் அவதானம் தேவை, சமிப்பாடு சிரமங்கள் ஏற்படலாம். பொருட்சேதம் ஏற்படக்கூடும். இடபம் (ரிஷபம்) – பிறவூர் பயணம் வரலாம். நட்பினால் மகிழ்ச்சி ஏற்படும். வாக்குவாதங்களில் எதிராளிகளிடம் […]
உலகச் செம்மொழி – அத்தியாயம் 18
(அத்தியாயம் 17 செல்ல இங்கே சொடுக்கவும்) அரபிய தீபகற்பத்தின் வடபகுதியில் தான் நாகரிகத்தில் உச்சம் தொட்ட சுமேரிய நாகரீகம் தோன்றியதாகச் சொல்லப்படுகின்றது. இது இன்றைய இராக் நாடாகும். இங்குதான் யூஃப்ரடீஸ் மற்றும் சின்னார் என்று அழைக்கப்படுகின்ற டைக்ரஸ் நதிகள் ஓடுகின்றன. இவ்விரு ஆறுகளும் இப்பகுதியை வளம் கொழிக்கச் செய்கின்றன. அக்காடிய மொழியில் யூஃப்ரடீஸ் ஆற்றை இப்-புரத்து ஆறுஎன அழைத்தனர். இந்தப்பக்க ஆறு அந்தப்பக்க ஆறு என்பதை இப்புரத்து ஆறு அப்புரத்து ஆறு என்று குறிப்பிடப்பட்டது. இதே ஆற்றைப் […]
தனித் தீவு
அதி காலை மணி 5. யாரோ தலையில் தட்டியது போல எழுந்தாள் வாணி. சிறிது நேரம் தூக்கம் கலையும் வரை அப்படியே படுத்திருந்தாள். அருகில் படுத்திருந்த குரு புரண்டு படுத்தான். இவள் முழித்து இருந்ததைப்பார்த்து, பக்கத்தில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தான். “மணி 5 தானே ஆகுது, ஞாயித்திக்கிழமை தானே? தூங்கு”. “தூக்கம் வரல. வழக்கமா எழுந்துக்கிற நேரம் அதான். நான் கீழே போறேன்.” ஏனோ வாணிக்கு இந்தச் சனி ஞாயிறு சீக்கிரம் எழுந்திருப்பது மிகவும் பிடித்தமான ஒரு […]
ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-15
பிரயாண அவலம் (ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-14) புலம்பெயர்ந்து உலகின் திசையனைத்தும் சென்று வாழ்வதென்பது சுலபமான விடயமல்ல. உரிய ‘வீசா’, ‘பாஸ்போர்ட்’ இல்லாமல் திருட்டு வழியில் கடல் கடந்தும் காடு, மலை கடந்தும் நாடு விட்டு நாடு கடந்தும் கண்டம் விட்டுக் கண்டம் ஓடியும் தமது பயணங்களை மேற்கொண்டு, பல மாதங்கள் தொடக்கம் சில வருடங்கள் வரை நீண்ட பயணத்தைச் செய்து கடினமான வழிகளில் உலகின் திசையனைத்தும் பரவினர். பேற்றோல் பவுசர்கள், பாரவூர்திகள், கொள்கலன்களில் சென்று இடைநடுவில் […]
விநாயகர்ச் சதுர்த்தி
கல்லிற் செய்த கருஞ் சிலையாம்
கணக்காய் அமைத்த கற் கோயிலாம்
கருணைக் கடவுளாய்க் காண்பவர் பலராம்
கண்மூடித் தனமாய்க் கடிந்துரைப்பர் சிலராம்
கிழித்தெறியப்படும் கவிதைகள்
இந்தக் கவிதைகளை எங்கள் பண்பாடென
ஒருகாலத்தில் நாங்கள் உறுதி பூண்டிருந்தோம்
புழுக்கத்தில் கசியும் இரவுகளில் கூட
நெறி தவறாமல் – நாம்
எம் கவிதைகள் படித்தோம்







