admin
admin's Latest Posts
சமையல் : பிஸிபேளேபாத்
தேவையான பொருட்கள்: அரிசி – 1 கப் துவரம் பருப்பு – ½ கப் வெங்காயம் – 1 தக்காளி – 1 பீன்ஸ் – 10 கேரட் – 1 உருளைக்கிழங்கு – 1 முருங்கைக்காய் – சிறிதளவு புளி – சிறிய எலுமிச்சை அளவு (கரைத்து கொள்ளவும்) மிளகாய்த் தூள் – தேவைக்கேற்ப மஞ்சள் தூள் – சிறிதளவு மசாலா அறைப்பதற்காகத் தேவையான பொருட்கள்: கடலைப் பருப்பு – 2 ஸ்பூன் தனியா – […]
ஒரு ஈழத் தாயின் இன்றைய தாலாட்டு
ஆராரோ ஆரிவரோ
ஆரடிச்சு நீயழுதாய்
அடித்தாரை சொல்லியளு
ஆக்கினைகள் பண்ணி வைப்பேன்
காத்து நுழையாத வீட்டினுள்ளே
காவாலி அவன் நுழைஞ்சான்
பாத்துப்பாத்து கட்டி வைச்ச
செல்வமெல்லாம் கொண்டுபோனான்
பதிவுகள்
வீட்டுக்குள் நுழையும் போதே ஒரே சத்தமாக இருந்தது. ஸ்பின் சைக்கிளில் வாஷிங் மெஷின் வீட்டையே லேசாகக் குலுக்கிக் கொண்டிருந்தது. சமையலறையில் இரண்டு நாட்களில் இட்டிலியாகப் போகும் மாவு அரைபட்டுக் கொண்டிருந்தது. டீ.வி யில், ‘அய்யய்யோ ஆனந்தமே’ என யானையுடன் ஹீரோ ஆடிக்கொண்டிருந்தார். பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த திவ்யா என்னைப் பார்த்ததும் கழுவிய டம்ளரை ‘நங்’கென்று சத்தம் வருமாறு ஸ்டாண்டில் வைத்தாள். ’காப்பி குடிக்கிறீங்களா?’ ’இல்லம்மா.. வேணாம்’. ’அதானே … இன்னைக்கு காப்பி தேவைப்படாதே உங்களுக்கு..’ கிராதகி எப்படித்தான் […]
திரைப்படத் திறனாய்வு – கும்கி
மைனா திரைப்பட வெற்றிக்குப் பிறகு வழக்கமான இயக்குனர்கள் போல், பெரிய நடிகர்களை இயக்கி அவர்களுக்கு விதிக்கப்பட்ட வரையரைக்குள் சிக்கி கொள்ளாமல், தனக்கென பாதை வகுத்துக் கொண்டதற்கு பிரபு சாலமனை முதலில் பாராட்ட வேண்டும். மார்த்தாண்டம் பகுதியில் ஆதிகாடு எனும் கிராமம். இங்கு காட்டு யானைகளால் துயரப்படும் கிராமத்தினர், அரசாங்கம் உதவி செய்யாததினால் தாங்களாகவே பொருள் சேர்த்து, காட்டு யானையை விரட்ட, கும்கி யானை ஒன்றை கொண்டு வர முயல்கின்றனர். சந்தர்ப்ப வசமாக, கும்கி யானைக்கு பதிலாக கதாநாயகன் […]
தமிழ்ப் பாடல்
வள்ளுவன் என்றோர் வரகவி வந்து
வாழ்வியல் நெறிகளைத் தரமுடன் தந்து
துள்ளும் தமிழின் நடையதை உணர்ந்து
தூய்மை நிரம்பும் மொழியாய்ச் செய்தான்!!
இளங்கோ என்பவன் பின்வந்து உதித்து
ஈர்க்கும் சிலம்பெனும் காவியம் படைத்து
பனிக்கட்டிக் கண்காட்சி (ICE CASTLES)
வீட்டின் முன்புறத்தில் செலுத்து வழியில் படிந்திருக்கும் பனிக்குவியலை அகற்றுபவர்களுக்கு பனிக்காலம் ஒரு பெரிய தண்டனைக் காலமாகவே படும். எப்போது இந்தப் பனிப்பொழிவு நிற்கும் எனக் காத்திருப்பார்கள். ஆனால் பிரெண்ட் கிரிஸ்டென்ஸனுக்கு (Brent Christensen) பனிப்பொழிவு ஒரு வரப்பிரசாதமாகப் படுகின்றது. ‘சிலை என்றால் அது சிலை; வெறும் கல்லென்றால் அது கல் தான்’ எனும் வழக்குக்கு ஏற்றாற் போல், நமக்கெல்லாம் சுமையாகத் தோன்றும் பனிக்குவியல் பிரெண்டுக்கு பணக் குவியலாகக் காட்சியளித்துள்ளது. பொதுவாக பனிக்காலம் என்பது மந்தமான, சோம்பலூட்டும் காலம். […]
மினசோட்டா வசந்தகாலம்
மினசோட்டா மாநிலத்தில வசந்தகாலத்தின் ஆரம்பத்தை செவ்வோக் (Red Oak) மரமானது கடந்த வருட வளரும் பருவகாலத்திலிருந்து இவ்வளவு காலமும் தக்க வைத்திருந்த காய்ந்த மண்ணிற இலைகளை ஒவ்வொன்றாக வெண்பனித்தரையில் உதிர்ப்பது மூலம் அவதானிக்கலாம். அதே சமயம் பண்டைய எரிமலை உருக்கி உறைந்த செங்கரும் பாறைகளானவை வசந்த கால ஆரம்ப வெட்பதட்ப உறைபனி உருகலினால் மெதுவாகப் பாறைகளில் இருக்கும் பாசிகளும், லைக்கன்களும் விழித்து எழும். இதே சமயம் பீவர் (Beaver) உயிரினமானது உறைபனியின் உள்ளே தமது உலர்ந்த மரம், […]
தஞ்சை வரலாறு
இஞ்சியும் மஞ்சளும் கொஞ்சித் தவழும் தஞ்சை மாநகர். என்னடா தஞ்சை மாநகர்னு சொல்லுறான், அது ஒரு சின்ன நகரம் அவ்வளவுதானே என்று நினைச்சிங்கன்னா உங்களுக்கு இந்தக் கட்டுரை வியப்பா இருக்கும். இன்னைக்கு மாநகர்ன்னு சொல்ற முக்கால்வாசி நகரங்கள் உருவாவதற்கு முன்னாடியே தஞ்சாவூர் ஒரு மாநகர். அதுவும் சும்மா இல்ல, தெற்காசியாவின் மிக முக்கியமான மாநகர். ஒரு உவமைக்குச் சொல்லனும்னா இப்போ இருக்கிற வாஷிங்டன் மாதிரி. இந்த ஊர் தலைநகரா இருந்த போது இதன் ஆட்சிக்குக் கீழ் இருந்த […]
சூப்பர் போல்
நண்பர்களை வீட்டிற்கு அழைத்து பார்ட்டி கொடுப்பதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்னரே திட்டமிடும் திருநாளைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இரவு உணவுக்கு பீட்சா வேண்டுமென்றால் ஐந்து தினங்களுக்கு முன்னரே ஆணையிட வேண்டுமென்று அறிவீர்களா? இந்திய உணவகத்திற்கு கொறிக்கும் பதார்த்தங்களை ஆர்டர் செய்வதற்காக அரை மணி நேரம் தொலை பேசியில் காத்திருந்த அனுபவமுள்ளதா? மது பானக்கடையில் வாங்கியவையனைத்திற்கும் பணம் செலுத்துகையில், “சொந்த உபயோகத்திற்காக மட்டுமே வாங்குகிறேன், சில்லறை வியாபாரத்திற்காக அல்ல” என்று கையொப்பமிட வேண்டிய கட்டாயமிருந்ததுண்டா? நாள் முழுக்க இயற்கையன்னை தூய்மையான […]
இருமலைப் போக்க எவ்வளவு காலம்?
நாம் நுண்ணுயிர் எதிர் மருந்துக்களை (Anti Biotics) பாக்டீரியாக் கிருமிகளுக்காக உட்கொள்ளினும், பெரும்பாலான நோயாளிகள் வைரஸ் கிருமிகளினால் தொற்றுவியாதிக்கும் இதை உட்கொள்வார்கள். இந்த மருந்து வகைகளை உட்கொள்ளும் அரைவாசியிலும் மேற்பட்டோருக்கு இருமலும், செருமலும் வருவது நெஞ்சின் சுவாசப் பிராணப்பாதையில் வைரஸ் கிருமி ஏற்படுத்தும் தடுமன், சளி போன்ற தொற்று நோய்களினால் ஆகும். ஆயினும் இவற்றில் பத்து சதவீதமானவர்களே பாக்டீரியாக் கிருமியின் தாக்கத்திற்கு ஆளானவர்கள். எனினும் ஏன் தான் நோயாளிகள் நுண்ணுயிர் எதிரி மாத்திரைகளை எடுத்தவாறு உள்ளனர் என்பது […]







