இலக்கியம்
எசப்பாட்டு – உயிர்
அன்னையின் தயவாலே அகிலத்தில் வந்துதித்து
முன்வினைப் பயனாலே முழுதான வாழ்வுபெற்று
தன்வினைச் செயலாலே தரைமீது இன்னலுற்று
நல்வினை எதுவென்றே நயமாக உணரமுனைந்து
அமுதூட்டிய அம்மா
மூணு வயசுவர நீதந்த தாய்ப்பாலு
மூளையின் மடிப்பிலே மறைஞ்சே போச்சுதடி ,
முப்பது வருஷம் நீபோட்ட சோறு
மூச்சே நின்னாலும் நினைப்பவிட்டு நீங்காதடி .
நெஞ்சு பொறுக்குதில்லையே
“நான் கொஞ்சம் கீழே வரைக்கும் போய்ட்டு நடந்துட்டு வரேன்” என்று கிளம்பினார் அம்புஜம். “தினம் இப்படி போய் நடக்க வேண்டியது அப்புறம் ராத்திரி முழுக்க மூட்டு வலின்னு முனக வேண்டியது. இதே வேலை உனக்கு” என்று சொல்லியபடி உள்ளே இருந்து வந்தார் சதாசிவம். “மூட்டு வலி ஒண்ணும் நடக்கறதால இல்ல. வயசாச்சு. இந்த மாசி வந்தா 63 வயசு ஆச்சு. மூட்டு வலி வராம என்ன?.. “ஆமாம் பாட்டி ஆகி ஆறு வருஷம் ஆச்சு. “கீழே போனா […]
இன்றைய தகவல் உலகில் நேற்றைய தகவல் முக்கியமா?
காலவரை என்னும் சொல் இயக்கத்தில் முடிவிலியான இன்றைய மின்னியல் நூற்றாண்டிலே ஒரு கேள்விக்குறியே. நேற்று, இன்று என்ற குணாதிசயங்கள் தகவல் அறிவியலில் தொடர்ந்தும் முக்கியத்துவம் வகிக்கின்றனவா என்று நாம் எடுத்துப்பார்க்கலாம். தொடர்ந்து இக்கட்டுரையில் மின்னியல் மற்றும் இலத்திரனியல் நூற்றாண்டு என்ற சொற்கள் ஒரே கருத்தைத்தான் குறிக்கும். அசலும் அதன் இலத்திரனியல் நிழல்களும் காலவரையானது படைக்க பட்ட அசல் பொருட்களைப் பெரும்பாலும் கொண்டு அமைந்த ஒரு சிந்தனை. ஒரு பொருளின் அசல் தன்மையானது அது உற்பத்தி செய்யப்பட்ட நாளில் […]
காத்திருப்பேன் நண்பரே!
காத்திருக்கிறேன் நண்பரே! மணி ஆறரை ஆகி விட்டது. என்றுமே தவறாமல் ஆறு மணிக்கெல்லாம் என்னுடன் பேச வரும் என்னுடைய ஆத்ம நண்பர் இன்று இன்னமும் வரவில்லை. முப்பது வருட நட்பு. தினமும் ஆறு முதல் எட்டு வரை என்னிடம் பேசுவார். அவர் தான் பேசுவார். நான் பொறுமையாகக் கேட்பேன். அவர் வீட்டைத் தாண்டி எவர் சென்றாலும் என்னிடம் பேசுவதை நிறுத்திவிட்டு அவர்களுடன் பேசுவார். எல்லா விஷயங்களும் அவருடையப் பேச்சில் இருக்கும். அதனால் அவரின் நண்பர்கள் சரித்திரமும் எனக்குப் […]
பூவே… பனிப்பூவே…
இலக்கியத்தென்றல்வீசும்,
இனியச்சாளரம்
எங்கள்பனிப்பூக்கள்….
பண்பாடும்கலாச்சாரமும்,
பாடங்களில்மட்டுமேகாணாமல்,
பார்வைக்குக்கொண்டுவந்து
பாரோரைப்பார்க்கவைத்தது,
இப்பனிப்பூக்கள்….
அந்நியன்
க்ளோவர் ஃபீல்ட் நிலையத்திலிருந்து பேருந்து மெதுவாகக் கிளம்பி நகர்ந்தது. இந்துவின் கண்கள் பிரேம் எங்காவது தென்படுகிறானா என்று தேடி அலைந்தது. யாரோ ஓடி வருவதைப் பின் கண்ணாடி வழியாக பார்த்து விட்டு ஓட்டுனர் வண்டியை நிறுத்தியபோது,. அவனாக இருக்குமோ என்ற ஆதங்கத்தில் அவசரமாகத் திரும்பிப் பார்த்தாள். வேறு யாரோ ஒரு பெண் அவசரமாக ஓடி வந்து “தேங்க்ஸ் ..ஜோ …” என்று சொல்லியவாறு ஏறிக் கொள்ள பேருந்து நகர்ந்து, பிரதான சாலையில் திரும்பி வேகமெடுத்தது. காலை ஏழரை […]
இருபத்தி நான்கு மணி நேரம்– பகுதி 4
பகுதி 3 முன்கதைச் சுருக்கம்: கணேஷும், பாரதியும் அவர்களுடன் ஒன்றாகக் கல்லூரியில் பயிலும் இன்னும் சில நண்பர்களும் தேர்வு எழுதுவதற்காகக் காலை நேரத்தில் புறப்பட்டுப் பேருந்தில் சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் கத்தியால் குத்தப்பட்ட தட்சிணா மூர்த்தியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். தட்சிணா மூர்த்தி கணேஷிடம் ரகசியமாக ஒப்படைக்கும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஒன்றில், கடை வீதியில் தங்க நகை செய்யும் கடை வைத்திருக்கும் சபாரத்தினம் ஆசாரியைக் கொலை செய்வது பதிவாகியுள்ளது. ஒரு மர்ம நபர் மருத்துவமனையில் போலிஸ் […]
ஈழத் தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-5
(பகுதி 4) இன-நிறவெறித் தாக்கம் தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்ற அனேகமான நாடுகள் வெள்ளையர்களினால் ஆளப்படுபவை. இந்நிலையில் இன-நிற அடிப்படையிலான பாகுபாடுகள், அதனால் வெளிப்படுகின்ற தாழ்வுச் சிக்கல் மற்றும் அந்நிய உணர்வு முதலானவையும் புலம்பெயர்ந்தவர்களின் கவிதைகளில் பரவலாகப் பேசப்பட்டன. “திரைகடல் ஓடித் தம்முயிர் பேணத் திரிந்தவர் தமக்கோ எங்கணும் அவலம் கரியவர் அயலர் எனவசை கேட்போர் கவலைகள் நீயும் உணர்வையோ நாராய்”8 “கற்றுக்கொள் கறுப்பு நாயே சாகப் பிறந்த பன்றியே தொழுவத்தை விட்டு ஏன் வந்தாய் வெளியே? கறுப்பர் […]
எசப்பாட்டு – நடிகன்
எவனோ கதையெழுத எவனோ படமெடுக்க எவனோ கவியெழுத எவனோ இசையமைக்க எவனோ பாடிவைக்க எவனோ ஆடவைக்க எவனோ எழில்கொடுக்க எவனோ உடையமைக்க






