இலக்கியம்
தமிழே அமுதம்
மலைகடைந்த மலையமுதம் அருவி தன்னில்
மனங்குளிர மாந்திநின்று குளித்துப் பார்த்தேன்
மலைமுகட்டில் கொம்புத்தேன் அமுதம் மொத்தம்
மலையளவு நான்பருகி சுவைத்து உண்டேன்
புதுப்பிறவி!
‘நான் பட்டதெல்லாம் போதும், திரும்ப கணவனோட போனா அது எனக்கு வாழ்வா இருக்காது. நரகமாதான் இருக்கும், தயவு செய்து அந்த ஆளு கூட சேர்த்து வச்சு என்ன நரகத்தில தள்ளிடாதீங்க. காதலனோடு நிம்மதியா வாழ விடுங்க…’ பஞ்சாயத்தார், கூடி நின்ற ஊரார் முன்னிலையில் அழுதுப் புலம்பி மணிகண்டனோடு செர்ந்து வாழ முடியாது என்று ஆணித் தரமாகக் கூறிவிட்டாள் காஞ்சனா. குடும்ப மானத்தை குழிதோண்டி புதைத்துவிட்டு வேற்றானுடன் ஓடிவந்து, கற்பிழந்த நிலையிலும், தான் செய்த தப்பை எல்லாம் உணர்ந்து, […]
உறைபனியில் ஒரு வசந்தம்
‘உன்னுடைய ரகசியங்களைக் காற்றிடம் சொல்! ஆனால் அவற்றை மரங்களிடம் சொன்னதற்காகப் பழிக்காதே!’ -கல்கி பிரான் டிசம்பர் மாத இறுதி. அடுத்தவாரம் கிறிஸ்துமஸ். நகரமே வண்ண வண்ண விளக்கு ஒளியில் திருவிழாக்கோலம் பூண்டிருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாகத் தீவிரமான உறைபனிப் பொழிவு. கூடை நிறையக் காகிதத் துணுக்குகளை மேலேயிருந்து கொட்டுவது போல நிதானமாக விழுந்து கொண்டிருக்கிறது. அமைதியாக, நிதானமாக வீட்டின் கூரை, மரங்கள், செடிகள், புல்தரைகள் என்று வேறுபாடில்லாத பனிப் பொழிவு. இலையுதிர் காலத்தில் இலைகள் அத்தனையும் உதிர்ந்து […]
நல் நுண்ணுயிர்களும் (Pro-Biotics) நாணயமான தமிழ் உணவுகளும்
பாக்டீரியா (Bacteria) எனப்படும் நுண்ணுயிரி என்ற சொல்லைக் கேட்டவுடனே சாதாரணமாக நமது மனதில் தோன்றுவது என்ன? அது ஒரு கிருமி, எனவே தொற்றாமல் உடன் விலக்கிக் கொள்ள வேண்டும் என்பதே. இதை வழிவகுத்தது சென்ற நூற்றாண்டுச் சுகாதாரக் கல்வி. சராசரி மக்களின் கண்ணோட்டத்தை அவதானித்தால் இது இலகுவில் தெளிவாகும். தமிழர் தாயகங்களில் வெளிவரும் விளம்பரத் தகவல்களை எடுத்துப் பார்த்தாலும் பொதுவாக இம்மனோநிலையே தொடர்ந்தும் பேணப்படுகிறது எனலாம். இன்றும் கிருமிகளை அழிக்க டெட்டால், ஃபினைல், லைசால் போன்ற விளம்பரங்கள் […]
மினசோட்டாவில் ஆன்மீகம்
வரலாறு தெரிந்தவரை மனிதன் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவனாகவே இருந்திருக்கிறான். உலக நாடுகளில் மக்கள் பல்வேறு கடவுளரை வழிப்பட்டுத் தங்களது ஆன்மீக உணர்வை வெளிப்படுத்துகிறார்கள். அடிப்படையாக நமக்கு மேலே ஒருவன் நம்மைக் காப்பாற்றுகிறான் எனும் நம்பிக்கை பெரும்பாலான மக்களிடையே உண்டு. வானத்தில் பறந்து வாடிகன் (Vatican) போனாலும் , கால் வலிக்க நடந்து கைலாயம் சென்றாலும் இறைவனை வணங்கும்பொழுது இருகண்கள் மூடி பார்வை உள்நோக்கி இருகரம் கூப்பி வழிபடுவதில் உள்ள ஒற்றுமை விந்தை தான். மனிதனுக்கு வலி பிறக்கையில் […]
உமா மகேஸ்வரி
சங்கமம் 2014 தெருக்கூத்து நிகழ்சியின் அணிகலன்கள் வடிவமைப்பாளரும் ஒப்பனையாளருமான திருமதி உமாமகேஸ்வரி அவர்களை மின் அஞ்சல் மூலமாக ஒரு பேட்டி கண்டோம்.அவர் வடிவமைத்திருந்த அணிகலன்கள் மற்றும் ஒபனைகள், நிகழ்சியை கண்டுகளித்த அனைவரது பாராட்டையும் பெற்றது. 1. உங்களைப் பற்றியும் உங்கள் ஊர், குடும்பம் மற்றும் வளர்ந்த சூழல் பற்றி எங்கள் பனிப்பூக்கள் வாசகர்களுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள்? என் பெயர் உமாமகேஸ்வரி . எனது ஊர் மதுரை. எனக்கு மூன்று அண்ணன்மார்கள் உள்ளனர். எங்களுக்கு ஒரு மகன் (13 வயது) […]
வயற்காற்று (பாகம் – 02)
வயற்காற்று (பாகம் – 01) காற்றில் மிதக்கவிட்ட இலவம் பஞ்சாகி மெல்லிய மேகங்கள் மிதந்துகொண்டிருந்தன. அன்று பழுத்த கொவ்வைப் பழம் போல ஓடிச் சிவந்தது வெட்கத்தால் சுரபியின் கன்னங்கள். “பெரிய சொற்பொழிவு ஆற்றிவிட்டாயத்தான் உனக்கு தேத்தண்ணி வைச்சுக் கொண்டு வரட்டோ… அல்லது கள்ளு கிள்ளு ஏதேனும்…” “விளையாட்டில்லை சுரபி எல்லாம் மெய்…” “ம்…ம்…ஆனால் எது உண்மை எது பொய் எண்டு ஒரு தெளிவில்லாமல் என்ரை மனம் குழம்புதே” “இதிலை குழம்பிறத்துக்கு என்ன இருக்கிது… எனக்கெண்டால் ஒண்டும் தெரியலை…” […]
முத்தான பழைய திரைப்படங்கள் மற்றும் குறும் படங்கள் – 2
பன்னிரெண்டு கோபக்கார மனிதர்கள்(12 Angry Men) இந்த இதழில் பன்னிரெண்டு கோபக்கார மனிதர்கள் (12 angry men) என்ற நாடக வகையைச் சேர்ந்த ஆங்கிலத் திரைப்படத்தைப் பற்றி பார்ப்போம். இந்த திரைப்படம் யுனைட்டட் ஆர்ட்டிஸ்ட்ஸ் என்ற நிறுவனத்தினரால் ஏப்ரல் 04 1957ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதை தயாரித்தவர்கள ஹென்றி ஃபொண்டா மற்றும் ரெஜினால்ட் ரோஸ். போன அத்தியாயத்தில் நாம நிலாவிற்கு சென்று வந்த கதையைப் பார்த்தோம். இந்த படம் ஒரே அறைக்குள் நடக்கின்ற கதை. இயக்குநர் பாசு […]
ஈழத் தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-6
(பகுதி 5) புதிய காலநிலை புலம்பெயர்ந்த நாடுகளின் வேறுபட்ட காலநிலை, புவியியல் தரைத்தோற்றம், சுற்றாடல் என்பன எமது தேசத்தில் இருந்து சென்றவர்களைப் பெரிதும் பாதித்துள்ளன என்பதை அவர்களின் கவிதைகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. புதிய இடம், குளிர் சூழ்ந்த காலநிலை என்பன ஒருங்கு சேர்ந்து அவர்களை மிகவும் பாதித்துள்ளன. “இரவுகள் துயில்கொள்ளா!” என்ற கவிதையில் நார்வே நாட்டின் நீண்ட இரவு கவிஞருக்குப் புதிய அனுபவத்தைத் தருவதாகவும் இருள் சூழ்ந்த அகதி வாழ்வுக்கு அர்த்தம் சொல்வதாகவும் அமைகின்றது. […]
முதுமை
காலையில் முன்னெழுந்து கடவுளரைத் துதிபாடி
கால்நடுங்க நடைநடந்தே கடைத்தெரு வந்தவரின்
காட்சியினை நான்காண கண்களது குளமாகும்
காரணம் தேடுகின்றேன், கணக்கெதுவும் விளங்கவில்லை!!






