\n"; } ?>
Top Ad
banner ad

இலக்கியம்

விமானப் பயணம்

விமானப் பயணம்

விமான நிலையத்தில், கடைசிக் கதவு வரை சென்று, கண்ணாடி வழியாகப்  பயணம் செல்லவிருக்கும் நண்பர்கள் விமானத்தின் உள்ளே ஏறி அமர்ந்து விட்டனரா எனப் பார்த்து, வழியனுப்பிய நாட்கள் நினைவிருக்கிறதா? வயதான பெற்றோர்கள் பயணம் செய்கிறார்கள் என்றால், விமானத்தின் உள்வரை சென்று அமர்த்திய அனுபவம் கூட ஒரு சில முறை ஏற்பட்டதுண்டு. ஏதோ இரண்டு மூன்று தலைமுறைக்கு முன்னர் நிகழ்ந்த நிகழ்ச்சிகளல்ல இவையெல்லாம், சரியாக ஒரு பதிமூன்று வருடங்களுக்கு முன்னர்வரை நிலைமை இப்படித்தான் இருந்தது. இப்பொழுது விமான நிலைய […]

Continue Reading »

உழைப்பு

Filed in இலக்கியம், கவிதை by on March 23, 2014 0 Comments
உழைப்பு

ஏர்பூட்டிச் சோறிட்டு உழைப்பின் பெருமையை
உலகிற்கு உணர்த்தினான் மனிதன் அன்று…
நீரூற்றக் கூட நேரமின்றி இயந்திரத்தின்
உதவியை நாடுகிறான் மனிதன் இன்று…

Continue Reading »

இதுவும் ஒரு அஸ்வமேதம்

Filed in இலக்கியம், கதை by on March 23, 2014 2 Comments
இதுவும் ஒரு அஸ்வமேதம்

சுப்பு ஐயர் செத்துப்போனது உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும். நல்ல மனுஷன். ஒரு ஈ, எறும்புக்குக் கூடக் கெடுதல் நினைக்காதவர். காசு பணத்தால் அவரால் உதவ முடியாது. ஆனால் ஆரோக்கியம் இடம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் உடலால் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் முதலில் நிற்பார். வசதி இல்லாமலோ அல்லது அனாதையாக யாராவது   செத்துப் போனால் முதல் தகவல் சுப்பு ஐயருக்குத்தான் போகும். சடங்குகள், சவசம்ஸ்காரம் ஆகியவைகளை முன்னிருந்து நடத்துவார். ஊர்க்குக் கோடியில் ஒரு சாவடி இருக்கும். வழிப்போக்கர்கள், ஏழைகள், பிச்சைக் காரர்கள் […]

Continue Reading »

தீங்கற்ற வீட்டு விலங்கு

Filed in இலக்கியம், கவிதை by on March 23, 2014 0 Comments
தீங்கற்ற வீட்டு விலங்கு

நான் முதலில் மூச்சு விட ஆரம்பித்த போது
என் தந்தையிடம் கூறினீர்கள்…
“சேமிக்கப் பழகிக்கொள்” என்று,
எனது ஐந்து வயதில் கூறினீர்கள்…
“எழுதப் படிக்கப் பழகிக்கொள்” என்று,
எனது பத்து வயதில் கூறினீர்கள்…

Continue Reading »

கணவரை இழந்த பெண்ணே

Filed in இலக்கியம், கவிதை by on March 23, 2014 2 Comments
கணவரை இழந்த பெண்ணே

வெள்ளைப் புடவையில் வீட்டுக்குள்
வதங்கிக் கிடக்கிறாயே!
வண்ணப் புடைவையில் வானத்தில் நீ
வட்டமிட வேண்டாமா?
அந்நியமாய் வந்தவன்
ஐயோ எனப் போய்விட்டான்

Continue Reading »

என் காதலே

Filed in இலக்கியம், கவிதை by on February 25, 2014 0 Comments
என் காதலே

காதல் காவியம் படைத்தேன் உனக்கு
கண்ணே அருகில் வாராய்
உயிரெனும் ஓவியம் வடித்தேன் உனக்கு
உயிரே நீயும் பாராய்

Continue Reading »

காதலியே …

Filed in இலக்கியம், கவிதை by on February 25, 2014 3 Comments
காதலியே …

காரிகையே எந்தன் காதலியே
கண்ணில் ஏனிந்த காந்தம் கொண்டாய்?
கணைத் தொடுத்தாய் எனைக் கடைந்தெடுத்தாய்
காதல் கலையெனப் பெயரும் தந்தாய்-உன்
விழி யசைவில் எனை வீழ்த்திச் செல்லும்
வித்தையை எங்கு கற்றாய்?

Continue Reading »

ஈழத் தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-4

Filed in இலக்கியம், கட்டுரை by on February 25, 2014 3 Comments
ஈழத் தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-4

உலகின் மூலைமுடுக்கெல்லாம் தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்று வசித்து வருகின்றபோதிலும் அவர்கள் அங்கும் நிம்மதியுடன் வாழ்கின்றனரா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டியுள்ளது. எண்ணற்ற கனவுகளுடன் ஊரில் திரிந்தவர்கள் ‘அகதி’ என்ற பட்டம் சூட்டப்பட்டு நாடுநாடாக அலையும் போது அவர்களுடைய கண்முன் அசைகின்ற எல்லாவற்றிறும், தான் ஓர் ‘அகதி’ என்ற உணர்வைப் பெறுகிறான். இவை அவலநிலையின் உச்ச வெளிப்பாடுகளாகி அவர்களை எழுதத் தூண்டுகின்றபோது, இந்த அவல வாழ்வின் உணர்வுகள் அப்படியே கவிதைகளாகப் புனையப்பட்டன.

Continue Reading »

சத்யா நாதெல்லா

Filed in இலக்கியம், கட்டுரை by on February 25, 2014 0 Comments
சத்யா நாதெல்லா

ஆந்திர மாநிலம் ஹைதராபாதை பூர்விகமாகக் கொண்ட, இந்திய அமெரிக்கரான, சத்யா நாதெல்லா மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். 1969 ஆம் ஆண்டு பிறந்த சத்யா, ஹைதராபாத்தில் பேகம்பேட் அரசினர் பொதுப்பள்ளியில் ( இதே பள்ளியில் படித்த சாந்தனு நாராயண் தற்போது அடோபி நிறுவனத்தின் செயல் அதிகாரியாக உள்ளார்) படித்தவர். மங்களூர் பல்கலைக் கழகத்தில் பி. டெக். (மின்பொறியியல்) முடித்த சத்யா, பின்னர் அமெரிக்காவில் விஸ்கான்சின் பல்கலைக் கழகத்தில் கணிப்பொறி அறிவியல் முதுகலைப் பட்டமும், சிகாகோ […]

Continue Reading »

பாலுமகேந்திரா – ஒரு பொக்கிஷம்

Filed in இலக்கியம், கவிதை by on February 25, 2014 0 Comments
பாலுமகேந்திரா – ஒரு பொக்கிஷம்

ஐயா நீங்கள் இறந்து விட்டதாகப்
பலர் பேசிக்கொள்கிறார்கள்.
பாசாங்கற்ற பன்முகக் கலைஞனே
பூவில் இருந்து பிறந்த தேனே
சிப்பிக்குள் உதித்த முத்தே
ஐயா உங்களைப் பின்தொடர்ந்தவர்கள்
சிகரம் காண ஊக்கம் தந்த ஏணி நீங்கள்.

Continue Reading »

ad banner
Bottom Sml Ad